No,one நடிகை என்று பெயர் வாங்கிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் நடிகை த்ரிஷா.
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது.
தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது.
அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது.
ஆனால் த்ரஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார்.
“என் வயசெல்லாம் ஒரு வயசா… நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன.
அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவயா படங்ககள் சிறந்த கதையம்சம் உள்ளவை மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன். திரையுலகில் எனக் கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.
இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாக வில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா? தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன்.
இந்திப் படம் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பேன், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரெடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன்”, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக