எந்திரன் படத்தில் இதுவரை காணாத அளவுக்கு மிக அற்புதமாக டான்ஸ் ஆடியுள்ளார் ஐஸ்வர்யா ராய். நடிப்பு, டான்ஸ் இரண்டிலும் கலக்கி விட்டார் என்று பாராட்டியுள்ளார் மாமனார் அமிதாப் பச்சன்.
மும்பையில் நடந்த எந்திரன் இந்திப் பதிப்பின் விசேஷக் காட்சியை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, ஜெயா பச்சன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் அமிதாப் பச்சன்.
பின்னர் அங்கேயே ரஜினியையும், ஐஸ்வர்யாவையும் அவர் பாராட்டினார். தற்போது தனது பிளாக்கிலும் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கலக்கி விட்டார். இதுவரை அவருடைய எந்தப் படத்திலும் இப்படி ஒரு நடனத்தை நான் பார்த்ததில்லை. படு ஸ்டைலாக இருக்கிறது டான்ஸ். அதை விட நடிப்பும். இரண்டிலும் பிரதமாதப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.
ரஜினியைப் பற்றி என்ன சொல்வது. என்ன செய்வார் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் பிரமாதப்படுத்துகிறார்.
வேடிக்கை, புதுமை, தொழில்நுட்பம் என அனைத்தும் கலந்த கலவையாக வந்துள்ளது ரோபோட்.
ரஜினி படம் பார்க்கும்போது நீங்கள் விரும்புவதெல்லாம் அதில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதில் உள்ள வேடிக்கையை, ரசனையை அனுபவிக்கலாம். அந்த அனுபவத்திற்காக ரஜினி படத்தைப் பார்க்கலாம். அந்த வகையில் இந்தப் படத்தில் அந்த அனுபவம் சற்று கூடுதலாகவே உள்ளது என்று பாராட்டியுள்ளார் அமிதாப் பச்சன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக