தமிழ்,தெலுங்கு சினிமாதான் எனது பலம், களம் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை விட்டு நான் போக மாட்டேன். இந்தியில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறுவது சரியில்லை. வாய்ப்புகள் வருகின்றன, ஆனால் நல்ல வாய்ப்புகளை மட்டுமே நான் ஏற்பேன் என்று கூறுகிறார் 'தென்னிந்திய தேவதை' திரிஷா.
நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றம் வைத்து, பேனர் கட்டி, பாலாபிஷேகம் செய்து அசத்தியவர்கள் திரிஷா ரசிகர்கள். தென்னிந்திய தேவதை என்றும் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். இதெல்லாம் தமிழிலும், தெலுங்கிலும் திரிஷா படு பிசியாக ஓடிக் கொண்டிருந்தபோது.
இப்போது திரிஷாவின் பரபரப்பு சற்றே அடங்கினாற் போல உள்ளது. காரணம் அவர் திடீரென கட்டா மீட்டா என்று இந்தியில் நடிக்கப் போனதால். அதேசமயம், மறுபடியும் அவர் தமிழிலில் பிசியாகியுள்ளார். கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அஜீத்துடன் மங்காத்தா ஆடவுள்ளார்.
இதை வைத்து இந்தியில் வாய்ப்பிழந்து விட்டார் திரிஷா. அதனால்தான் மீண்டும் செளத்துக்கே வந்து விட்டார் என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதைக் கேட்டு திரிஷா 'டெர்ரர்ஷா'வாகியுள்ளார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்திகள் பரப்புகிறார்களோ என்று அழாத குறையாக புலம்புகிறார்.
கட்டா மீட்டா அருமையான படம். இந்தியில் அதற்கு நல்ல விமர்சனங்கள்தான் வந்தன.அதன் பிறகும் கூட எனக்கு நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கும் நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தானே நான் ஒப்புக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாய்ப்புகளுக்காக மட்டுமே நான் காத்திருக்கிறேன் என்றார் திரிஷா.
அத்தோடு நில்லாமல், எனக்கு தமிழும், தெலுங்கும்தான் உண்மையான பலம், எனக்கான களம். எனவே நான் இங்குதான் அதிக கவனம் செலுத்துவேன். அதுதான் இயல்பு. அப்படித்தான் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கு வாய்ப்புகள் போய் விட்டது என்று வதந்தி பரப்புகிறார்களே என்று விசனப்படுகிறார்.
வதந்தியாளர்களே, பொம்பளங்க பொல்லாப்பு வேண்டாமப்பு, சொல்லிப்புட்டோம், அம்புட்டுதேன்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக