பக்கங்கள்

07 செப்டம்பர் 2010

இத்தாலியில் இலங்கையர் மூவர் கைது! குடியால் வந்த கதி.

மதுபானம் அருந்த மறுத்த இலங்கையர் ஒருவரை நேற்று மாலை அடித்துக் காயப்படுத்தியமையுடன் ,அறை ஒன்றிலும் பூட்டி வைத்தனர் என்பதற்காக அவரின் சகாக்களான இலங்கையர் மூவர் இத்தாலியின் San Pantaleon நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நால்வரும் தொடர்மாடி ஒன்றில் உள்ள அறை ஒன்றில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இவர்களில் குடிகாரர்கள் மூவரும் சம்பவதினம் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர். நான்காவது நபர் இவர்களுடன் குடிக்க மறுத்து விட்டார்.
இதனால் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. குடிக்க மறுத்தவரை ஏனைய மூவரும் நையப் புடைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஒன்றும் ஏற்பட்டு விட்டது. பின் அவரை தப்பி ஓட முடியாத வண்ணம் அறை ஒன்றில் பூட்டி வைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்தது. இந்நிலையில் அவர் அறையில் இருந்த தொலைபேசி மூலம் வீட்டின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு நிலைமையைக் கூறினார். வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்தார். இதையடுத்தே கைதுகள் இடம்பெற்றன. நான்கு இலங்கையர் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக