பக்கங்கள்

01 செப்டம்பர் 2010

இயக்குனர் செல்வாவின் "நாங்க".



1985-ம் ஆண்டின் காலக் கட்ட பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நாங்க'. இயக்குநர் செல்வாவின் 25-வது படமாக இப்படம் உருவாகிறது. சினிமாவின் பல்வேறு துறைகளில் இருப்பவர்களின் வாரிசுகள் 9 பேர் இப்படத்தில் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். ÷இப்படத்தைப் பற்றி இயக்குநர் செல்வாவிடம் கேட்ட போது, ""கல்லூரியின் காதல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ஐந்து விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டு, பின்னர் அவை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
÷ 1985-ம் ஆண்டு காலக் கட்டத்தில் கதை பயணிக்கிறது. என் முதல் படம் "தலைவாசல்' கதையும் கல்லூரி வாழ்க்கைதான். அது போல் இப்படமும் கல்லூரியின் புதிய பரிணாமத்தைச் சொல்லும். காதல், உற்சாகம் இவற்றை மட்டும் சொல்லாமல் ஏமாற்றம், வலி, ஏக்கம், நெகிழ்ச்சி ஆகியவற்றை சொல்லும் ஒரு கல்லூரிக் கதையாக இது இருக்கும்.
÷ஒரு மனிதனின் உச்சபட்ச மகிழ்ச்சியான கல்லூரி காலத்தை சினிமாவின் புதிய மொழியில் படம் பிடித்து வருகிறேன். தென்காசி, திருநெல்வேலி, குற்றாலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் படமாகியுள்ளது. 1985-ம் ஆண்டு காலக் கட்ட கதை என்பதால் ராஜன், ஷிவா யாதவ் என்ற இரு கலை இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். "தலைவாசல்', "அமராவதி' படங்களுக்குப் பின் பாலபாரதி இப்படத்துக்கு இசையமைக்கிறார். மறக்க முடியாத ஜீவனுள்ள நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்தப் படம் இருக்கும்'' என்றார்.

1 கருத்து: