நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி, தனக்கு பார்வைக்கோளாறு இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது உண்மையா? இல்லை ஸ்ருதிஹாசன் பெயரில் வேறு யாரும் இப்படி செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
நடிப்பு, இசை, நடனம் என பல்துறைகளில் சிறந்த விளங்கிவருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழில் ‘7ம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘தில் டோ பச்சா ஹை ஜி’ படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி, தனது டுவிட்டர் பக்கத்தில், ’என்னை பொருத்தவரை 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன். கண்ணாடி அணியாமல் 2 சென்டி மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாது.
யாருக்கும் நான் வாழ்த்து சொல்வது கிடையாது. அப்படி சொல்லும் நபர் வேறு ஆளாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டி உள்ளது. நேற்றுகூட தவறான நபருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.
மேலும் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் நடந்து சென்றேன். இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. எது எப்படியோ மூக்கு கண்ணாடியும், கான்டக்ட் லென்சும் பல்லாண்டு வாழ்க’’என்று எழுதியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமீபகாலமாக த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவர்களைப் பற்றியே இழிவாக எழுதுவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஸ்ருதிஹாசன் அப்படி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக