பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2010

ரஞ்சிதாவில் பாசம் கொண்ட சிரிப்பு நடிகர்.



நித்யானந்தா சாமியார் ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு ரஞ்சிதாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட கதையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. இதனை சம்பந்தப்பட்ட இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.
சில பிழைப்புவாதிகள் நித்தியை மீண்டும் சாமியாராக்கியிருக்கிறார்கள். சாமியார்களை நம்பியிருக்கும் சிலரும் அவரை தெய்வீக‌த் தூதராக கொண்டாடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர்.
சி‌ரிப்பு நடிகர் எஸ்.வி.சேகருக்கு வந்த தொண்டை வலியை திருநீறு பூசி ச‌ரி செய்தாராம் நித்தி. இதற்கு கைமாறா தெ‌ரியவில்லை, நித்யானந்தாவுடன் இருப்பது ரஞ்சிதாவே இல்லை, ஒரே நபரைப் போல் ஏழு பேர் இருப்பார்கள் என்றெல்லாம் உடுக்கடித்திருக்கிறார். ஆள் யாராக இருந்தாலும் உடன் இருந்தது நித்திதானே? இதற்கு சி‌ரிப்பு நடிக‌ரிடம் பதிலில்லை.
சங்கராச்சா‌ரியா‌ரை கைது செய்தவர்கள் கை விளங்காமல் இருப்பதாகவும், கிட்னி பழுதடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார். அவரை கைது செய்ய உத்தரவிட்டவர்கள் இன்றும் சேமமாக இருக்கிறார்கள். சங்கராச்சா‌ரியா‌ரின் பவர் அவர்களிடம் செல்லுபடியாகாதா என்பதைப் பற்றியும் சி‌ரிப்பு நடிகர் பதிலளிக்கவில்லை.
இவர் சின்னத்திரையில் பொறுப்பில் இருந்தபோது ஒரு நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒழுக்கத்தை காரணம் காட்டி அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவிடாமல் செய்தவர் இவர். அன்று ஒழுக்கத்தை காரணம் காட்டியவர் இன்று ரஞ்சிதாவுக்கு அடைக்கலம் கொடுப்பது,
காலத்தின் கோலமா? கடவுளின் லீலையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக