பக்கங்கள்

21 ஆகஸ்ட் 2010

கிசு கிசுவால் கலங்கிய தமன்னா.


புசுபுசுன்னு வளர்ற மார்க்கெட்டை கிசுகிசு எழுதியே காலி பண்ற விஷயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அண்மைக் காலங்களில் நயன்தாராவும், தமன்னாவும்தான் போலிருக்கிறது. எந்த ஹீரோவை எடுத்துக் கொண்டாலும் தமன்னாவை கேளுங்க. இல்லேன்னா பிறகு யாரையாவது பார்க்கலாம் என்றுதான் கூறி வந்தார்கள்.
எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஒரு ரவுண்டு நடித்து முடித்துவிட்ட தமன்னா, தற்போது தன்னை சுற்றி முளைத்திருக்கும் வேலியை கண்டு அதிர்ந்தே போயிருக்கிறார். ஒரு கோடி சம்பளம், கார்த்தியுடன் காதல் என்று பலரும் எழுதியதால்தான் இந்த நிலைமை என்று நினைத்தாரோ என்னவோ, இரண்டையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவரது அட்ஜஸ்ட்மென்ட் மிகப் பெரிய கதவை திறந்துவிட்டிருப்பதுதான் ஆச்சர்யம். சுறாவை அடுத்து தமன்னாவுடன் மீண்டும் ஜோடி சேரப் போகிறார் விஜய். இந்த வாய்ப்பை பெறுவதற்குள் தமன்னாவின் கெண்டை சதை இளைத்துப் போனது தனிக் கதை.
சம்பளத்தை குறைத்தாராம். கேட்கிற நாட்கள் எத்தனையோ, அத்தனைக்கும் தயார் என்றாராம். பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பின் `த்ரி இடியட்ஸ்` படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார். டைரக்டர் ஷங்கரும் பல மேடைகளில் தமன்னா குறித்து சிலாகித்தது இந்த இடத்தில் ரொம்பவே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக