உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள். அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை. இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர். அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது. அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார். மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
29 டிசம்பர் 2012
26 டிசம்பர் 2012
மறுக்காத ரியா சென்!
ரியா சென் |
23 டிசம்பர் 2012
லக்ஷ்மி ராயின் மேலாடை கிழிந்தது!
புதுச்சேரியில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்த நடிகை லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்ததில் அவரது மேலாடை கிழிந்தது. பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், லஷ்மி ராய் நடித்து வரும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு டூயட் பாடலை புதுச்சேரியில் படமாக்கினர். ஷூடிட்ங் இடைவேளையில் லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது கூட்டம் கூடியதுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் லக்ஷமி ராயிடம் சில்மிஷம் செய்தனர். இதில் அவரது மேலாடை கிழிந்தது. நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த படக்குழுவினர் ஓடிவந்து லக்ஷ்மி ராயை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு லக்ஷ்மி ராய் அவரது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படப்பிடிப்பில் நடிகைகளிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்வது இது முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதுல குரு படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஞ்சலி, ச்தயன், மந்த்ரா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
15 டிசம்பர் 2012
அசின் மீது பைத்தியமாக உள்ள ரசிகர்!
தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை அசினுக்கு ஒரு தீவிர ரசிகர் உள்ளார். அந்த நபர் அசின் மீது பைத்தியமாகவே உள்ளார். மேலும் அசினையே மணக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காதல் பைத்தியம் முற்றவே அந்த நபர் பெங்களூரில் அசினுக்காக ஒரு பங்களாவை வாங்கிப் போட்டுள்ளார். மேலும் அசின் எப்பொழுது பெங்களூர் வந்தாலும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த தீவிர ரசிகர் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். தனது பிரிய நடிகைக்கு அந்த நபர் பூக்கள், சாக்லேட் மற்றும் பேஷன் ஐட்டங்களை அனுப்பி வைத்துள்ளார். அவர் அசின் மேல் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அசினோ பாலிவுட் மீதல்லவா பைத்தியமாக இருக்கிறார். எப்படியாவது அங்கு பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று போராடி வரும் அவர் இந்த ரசிகரின் அன்புக்கு அடங்குவாரா என்ன? இதற்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாதியாத்வாலாவின் மகன் சுபான் அசினுக்கு லாலிபப், சாக்லேட், கரடி பொம்மை மற்றும் ரோஜாப் பூக்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 டிசம்பர் 2012
இயக்குநர் கர்ணன் மரணம்!
காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. அமரர் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கர்ணன். காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவு கௌபாய் படங்களை இயக்கியவர் கர்ணன். சண்டை, சாகசக் காட்சிகளைப் படமாக்குவதில் தனித் திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அமரர் எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம். அதேபோ மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்தின் போர்க்கள காட்சி, குதிரையேற்றக் காட்சிகள் இவர் படமாக்கியதுதான். எம்ஜிஆருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளரும் கூட. தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார்களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை எடுத்தாராம். அதேபோல தண்ணீருக்கடியில் படம் பிடிப்பதில் அந்தக் காலத்திலேயே அசத்தியவர் இவர். கர்ணன் தமிழக அரசின் 2003-ம் ஆண்டுக்கான 'ராஜா சாண்டோ வர்த்தக விருது' பெற்றவர். புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கர்ணன்தான். இன்று (13-12-12) அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. கர்ணனின் மனைவி பெயர் சகுந்தலா. இந்த தம்பதிகளுக்கு பாமா, தாரா என்று 2 மகள்கள். பொதுமக்கள் பார்வைக்காக 38, பெருமாள் கோவில் தெரு, சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை 14 ந் தேதி சேத்துப்பட்டு மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு - கர்ணன் மருமகன் சந்திரனை தொடர்பு கொள்ளவும். எண்: 9443385180
09 டிசம்பர் 2012
உன் சமையல் அறையில்!
நடிகை சினேகா பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உன் சமையல் அறையில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர், இயக்குனர் பிரகாஷ் ராஜ் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
பிரகாஷ் ராஜ் இதற்கு முன்பு கன்னடத்தில் அபியும், நானும் மற்றும் தோணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா பிரகாஷ் ராஜ் நிச்சயம் நல்ல படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கையில் அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு இந்த படத்தில் கிடைத்துள்ள கதாபாத்திரத்தை நினைத்து சினேகா குஷியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு சமையல் தெரியாத நான் தற்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். கடவுள் அருளால் எனது திருமண வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் சினேகா.
03 டிசம்பர் 2012
சிம்புவுடன் அப்படி எதுவுமில்லை"லேகா மறுப்பு!
ஹோட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் ஒன்றாக வெளியே வந்தார் லேகா வாஷிங்டன்... இதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.
லேகா வாஷிங்டன் அதிக அளவில் படங்களில் நடிப்பதில்லை. ரொம்ப செலக்ட் செய்தே நடிக்கிறார். விளம்பர படங்களில்தான் தற்போது அதிக அளவில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் விரைவில் அவர் சிம்புவுடன் ஒரு படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின. மேலும் லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறின.
அதை விட பரபரப்பானது, லேகாவும் சிம்புவும் ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், அறைக்குள்ளிருந்து இருவரும் ஜோடியாக வெளியே வந்ததாகவும் வந்த கிசுகிசுதான். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது இயக்கத்தில் உருவாகும் குறும்படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக சமீபத்தில் ஒரு நியூஸ் வந்தது. அதேபோல நானும், சிம்புவும் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்ததாகவும் இன்னொரு செய்தி வெளியானது. இரண்டுமே பொய்யானது, தவறானது.
நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஹோட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன்.
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான் என்றார் லேகா.
30 நவம்பர் 2012
நண்பர்கள் கவனத்திற்கு!
கே.ஜெயக்குமார் என்பவர் இயக்கும் படம்தான் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தில் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். மனீஷாஜித் நாயகியாக நடிக்கிறார். அதேபோல இன்னொரு நாயகனாக வர்ஷன் என்பவரும் தலை காட்டுகிறார்.கம்பீரம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் சரத்குமாரின் மகளாக ஒரு குட்டிப் பாப்பா நடிப்பிலும், பேச்சிலும் வெளுத்துக் கட்டியிருப்பார். அந்த பேபி நடிகைதான் இந்த மனீஷாஜித். குமரியான பின்னர் முதல் முறையாக ஹீரோயின் அவதாரம் எடுக்கிறார்.இப்படத்தில் நாயகியாக நடிக்கும் மனீஷாஜித் நடிப்போடு, கவர்ச்சியையும் சரிவிகித சமானத்தில் கலந்து தரத் தயாராக இருக்கிறாராம். அதேசமயம் முழுமையான கவர்ச்சிக்கு இவர் உடன்பட மாட்டாராம்.ஏற்கனவே சரத்குமாரின் ஒரிஜினல் மகள் வரலட்சுமி சிம்புவுடன் ஜோடி போட்டு ஹீரோயினாகி விட்டார். அடுத்து விஷாலுடன் ஜோடி சேரப் போகிறார். இந்த நிலையில், தற்போது சரத்குமாரின் மகளாக நடித்த மனீஷாஜித்தும் ஹீரோயினாகி விட்டார்.இந்தப் படம் நண்பர்கள் பற்றிய கதையாம். அதனால் ஏற்படும் உணர்வுப் போராட்டத்தைத்தான் படத்தில் சொல்லியுள்ளார்களாம்.
11 நவம்பர் 2012
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியா ராய்?
இந்தியாவின் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் டிவி ரியாலிடி ஷோ என்ற இடத்தைப் பிடித்தது "பிக் பாஸ்” நிகழ்ச்சி. இப்போது இந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கவர்ச்சி கூட்டப்பட்டிருக்கிறது. பிரபல 'ஆபாச’ நட்சத்திரமான பிரியா ராய், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் என்று கூறப்படுகிறது.
சென்ற வருடம் சல்மான் கான் கிளப்பிய சர்ச்சைகளுக்குப் பின்னர், இந்த நிகழ்ச்சியின் குடும்ப அங்கத்தினருக்கான ஆறாவது பாகத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், அதன் பிறகான டிஆர்பி ரேட்டிங்கில் இந்த பாகம் பெரும் வரவேற்பு பெறவில்லை.
இதை அடுத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மிகவும் யோசித்து, பிரியா ராயைக் கொண்டு வர தீர்மானித்தனராம். அவர்களின் தகவல் படி, பிரியா ராய் இந்த நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராகத் தலைகாட்டுவாராம்.
பிரியா ராய், அவருடைய 2 வயதில், பெற்றோரால் கைவிடப்பட்டு பின்னர் அமெரிக்க தம்பதியால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.
07 நவம்பர் 2012
கவலையில்லாத சமீரா!
படங்களில் வாய்ப்பு குறைவதால் கவலை இல்லை என்றார் சமீரா ரெட்டி. ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: ராணா, நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். இந்த வாய்ப்பை ஏற்றது ஏன் என்கிறார்கள். குத்து பாடலுக்கு மட்டும் ஆட வேண்டுமென்றால் ஆடி இருக்க மாட்டேன். கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இது அமைந்திருக்கிறது. என்னுடன் வெங்கடேஷும் ஆட உள்ளார். இதுவொரு கவுரவ தோற்றம் என்பதால் ஏற்றேன். இந்தி படங்களில் கரீனா கபூர், கேத்ரினா, வித்யா பாலன் ஆகியோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள்.
அதெல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. அவைகளில் தேசிய விருது இயக்குனர் பிரகாஷ் ஜா படத்தில் வந்த வாய்ப்பை மட்டும் ஏற்றேன். ‘டோலிவுட் படங்களில் ஹீரோயின்கள் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்களே?’ என்கிறார்கள். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படவுலகில் அப்படித்தான் இருக்கும். இதை மாற்றுவதற்காக நான் வரவில்லை. கிளாமர் வேடங்களை நான் தவிர்ப்பதில்லை. படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டதுபற்றி கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் பிடித்ததை மட்டுமே ஏற்கிறேன். விரைவில் குடும்பத்தினருடன் கிரிஸுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
29 அக்டோபர் 2012
அனுஷ்கா, கிரிஷ் உறவு டமால்..!
'யோகா டீச்சர்' அனுஷ்காவிற்கும் தெலுங்கு இயக்குநர் கிரிஷுக்கும் இடையிலான காதல் புட்டுக் கொண்டு விட்டதாம். இதற்குக் காரணம் நயனதாரா மற்றும் ஆர்யா என்று சூடான பேச்சு அடிபடுகிறது.இந்த கிரிஷ் வேறு யாருமல்ல வானம் படத்தை இயக்கியவர்தான். அதில் கிரிஷ் கேட்டுக் கொண்டதால்தான் விலைமாது கேரக்டரில் நடித்துக் கலக்கினார் அனுஷ்கா. இவர்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு கல்யாணப் பேச்சு வரை வந்து விட்டதாம். விரைவில் டும்டும்தான் என்றும் தெலுங்குத் திரையுலகில் பேசி வந்தனர்.இந்த நிலையில்தான் திடீரென இவர்களது உறவில் விரிசல் விழுந்து விட்டதாம். அனுஷ்கா இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் படங்களில் பிஸியாக இருக்கிறார். ஜார்ஜியாவில் இரண்டாம் உலகம் சூட்டிங் முடித்துவிட்டு காதலர் கிரிஷை ஆசையாய் பார்க்கபோன இடத்தில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். கிரிஷ் இப்போது ராணா, நயன்தாராவை வைத்து கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அனுஷ்காவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.கிரிஷ் திடீரென இப்படி பாராமுகம் காட்டுதவற்குக் காரணம் நயனதாரா என்கிறார்கள். கிரிஷுக்கும், நயனதாராவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம். இதனால்தான் அனுஷ்காவை கண்டுகொள்ளவில்லையாம் கிரிஷ்.அதேசமயம், ஜார்ஜியா போன இடத்தில் அனுஷ்காவுடன் ஆர்யா நெருக்கமாகி விட்டதால்தான் கிரிஷ் அப்செட்டாகி விட்டதாக இன்னொரு காரணத்தைக் கூறுகிறார்கள். இருவரும் சேர்ந்து ஜார்ஜியாவையே சுற்றித் தீர்த்து விட்டதாகவும் கிரிஷுக்கு அவரது நலம் விரும்பிகள் போட்டுக் கொடுத்து விட்டனராம்.அப்படியானால் இவர்களுக்கிடையே என்ன உறவுதான் உள்ளது என்று சிலர் மண்டையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றனர். அது குறித்துக் கேட்டால், ஆர்யா, அனுஷ்கா இடையே என்ன நட்போ அதேதான் கிரிஷ், நயனதாராவுக்கும் என்று ரொம்பத் தெளிவாக குழப்புகிறார்கள்.வில்லு படப்பிடிப்பு சமயத்தில்தான் பிரபுதேவாவுடன் நெருங்கினார், நெருக்கம், காட்டினார், காதலிலும் வீழ்த்தினார் நயனதாரா. தற்போது அது கிரிஷ் விவகாரத்திலும் நடந்து விடுமோ என்று நிறையப் பேர் எதிர்பார்க்கிறார்களாம்.
19 அக்டோபர் 2012
த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மரணம்!
நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று காலமானார்.
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்த அவருக்கு வயது 68.
நடிகை த்ரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வசிக்கின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக இருந்த கிருஷ்ணன், மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாதுக்குப் போய்விட்டார்.
ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் த்ரிஷா.
த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் எவ்வளவோ முறை அழைத்தும் கிருஷ்ணன் இவர்களோடு வசிக்கவில்லை. தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கூறி அவர் தனியே வசித்து வந்தாராம்.
தான் வேலை பார்க்கும் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலுக்கு த்ரிஷா வந்தால் கூட, அவரை தன் மகள் என்று காட்டிக் கொள்ள மாட்டாராம்.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் ஹைதராபாதில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே ஹோட்டல் ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
18 அக்டோபர் 2012
எங்கிருந்தாலும் வாழ்க!
பாலிவுட் பிரபலங்களான, சயீப் அலி கானுக்கும், கரீனா கபூருக்கும், தடபுடலாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. புதுமணத் தம்பதி, தேனிலவுக்காக விரைவில் வெளிநாட்டுக்கு பறக்க தயாராகி வருகின்றனர். கரீனாவின் மாஜி காதலரும், ஜாப் வி மீட் நாயகனுமான, ஷாகித் கபூர் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என கேட்டபோது, கரீனாவும், சயீப்பும், பாலிவுட்டின் பொக்கிஷங்கள். பொருத்தமான ஜோடிகள் கூட. கரீனாவுக்கு என் வாழ்த்துக்கள் என, வாய் நிறைய வாழ்த்துகிறார். அதெல்லாம் சரி, உங்களுக்கு எப்போது திருமணம் என, கேட்டால்,திருமணம் பற்றி, இன்னும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால், மனதுக்கு பிடித்த பெண், கண்ணில் பட்டு, என் தலையைச் சுற்றி, பட்டாம் பூச்சிகள் பறந்தால், உடனடியாக திருமணம் தான் என, உற்சாகத்துடன் கூறுகிறார்.
இதேபோல் பிரபல நடிகையும், நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியுமான கஜோல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி பேசிய கஜோல், அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சைப் ஒரு சிறந்த மனிதர். இருவரும் நீண்டகாலம் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வாழ வாழ்த்துகிறேன், என்றார்.
14 அக்டோபர் 2012
குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம்!
குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
பிரகாஷ் ஜா உருவாக்கத்தில் தயாராகி வரும் சக்ரவியூக் என்ற இந்திப் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா. இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது என்று பெருமையான ஒன்றாக மாறியுள்ளது. அதில் ஆடும்போது தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது.
எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு படத்தில் குத்துப் பாட்டு இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது வரவேற்புக்குரியது. மேலும் ஒரு படத்தை தள்ளிக் கொண்டு போகும் சக்தி குத்துப்பாட்டுகளுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.
ஹீரோயின் வரிசையில்தான் கெட்டியாக இல்லை சமீரா ரெட்டி, குத்துப் பாட்டிலாவது கொடி கட்டிப் பறக்கட்டும்....
12 அக்டோபர் 2012
தன்மானம் இருந்தால்....?
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணியினர் பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது நிர்வாக திறமை சரியாக இல்லை என்று கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் முக்தா சீனிவாசன் தலைமையிலான எதிர் அணியினர். அதன் விவரம் வருமாறு...
சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டடத்தில் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன் தலைமையில், பஞ்சு அருணாசலம், கேயார், ஜி.சேகர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். முக்தா சீனிவாசன் பேசும்போது, இந்த சங்கம் 1971-ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்த ஏழு பேரில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். 83வயதாகிவிட்டது. 40 படங்களுக்கு மேல் செய்துவிட்டேன். எத்தனையோ அனுபவம் இருந்தாலும் இப்படி ஒரு சங்கத்தில் இருப்பது மிக வருத்தமாக உள்ளது. எஸ்.ஏ.சி., மீது எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது. ஆனால் அவர் ஒரு சங்கத்துக்கு தலைவராக எந்த தகுதியும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த சங்கத்திற்கு ஏற்ற தகுதியும், திறமையும், பேச்சாற்றல், நிர்வாக திறமை, அனுசரித்து செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்றாவது இருக்கனும். இதில் எதுவுமே அவரிடம் கிடையாது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்ய வேண்டியது என்பது அவருக்கு சுத்தமாக தெரியவில்லை. அந்தகாலத்தில் சங்கம் ரொம்பவே பொறுப்புடன் செயல்பட்டது. காரணம் தலைவர்கள் அப்படி அமைந்தனர். வாசன், ரெட்டி போன்றவர்கள் தலைமை வகித்த இடம் இது. இவர் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. சங்கம் பக்கம் வருவதே இல்லை. பழைய உறுப்பினர்களை மதிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் போலீஸ்க்கு போகிறார். மொத்தத்தில் அவரது பணி சங்கத்திற்கு பூஜ்யம்.
இவர் இந்த இடத்தை பிடித்துக்கொண்டு செய்ய முடியாத விஷயங்களை அடுத்தவர்களுக்காவது அந்த வாய்ப்பை கொடுக்கலாம். அதுவும் செய்யமாட்டார். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கூட அனுப்புவது இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் என்னவென்று தெரிவது இல்லை. என்னால் இந்த சங்கத்தை விட்டு விலகி புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்க முடியும். அது நன்றாக இருக்காது. முடிவாக எஸ்.ஏ.சி.க்கு ஒன்று சொல்கிறேன். தன்மானம் இருந்தால் நீங்கள் இந்த பதவியை விட்டு விலகுங்கள், அடுத்தவர்களுக்கு வழிவிடுங்கள் என்றார்.
மேலும் எஸ்.ஏ.சி., அவரது மகன், அதாவது விஜய் அரசியலில் வரவேண்டும் என்பதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார். இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்கு வழக்கு சரியாக காட்டவில்லை, முறையாக பொதுக்குழு கூட்டவில்லை என்றும், வருகிற 28ம் தேதி பொதுக்குழு கூட்டி அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்யபோவதாக கேயார், சேகர் உள்ளிட்டோர் கூறினர்.
08 அக்டோபர் 2012
மயங்கிவிழுந்த நடிகை!
வீட்டில் கொடுமை தாங்காமல் வெளியேறிய தெலுங்கு நடிகை திவ்யா, ரயில் நிலையத்தில் உணவு தண்ணீரின்றி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தெலுங்கில் ஒக ரொமான்டிக் க்ரைம் கதா படத்தில் கவர்ச்சியாக நடித்தவர் திவ்யா. இந்தப் ப டம் அங்கே பெரிய வெற்றியைப் பெற்றது.
சினிமாவில் ஜெயித்தாலும் வீட்டில் பல தொல்லைகளுக்கு ஆளாகிவந்தார் திவ்யா. அவர் சொத்துக்களை உறவினர்கள் அபகரித்துக் கொள்ள, சொந்த சித்தப்பாவே ஏகப்பட்ட கொடுமைகளை செய்து வந்தாராம். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல், வீட்டை விட்டே ஓடிவிட்டாராம் திவ்யா.
அப்படி ஓடியவர், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கிறார். அங்கே சாப்பாடு தண்ணீர் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டவர், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார்.
அவரைப் பின்னர் அடையாளம் தெரிந்து கொண்ட சிலர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனிருக்கும் திவ்யாவின் அம்மா, "இனி என் மகள் மனசு கெடாமல் பாத்துக்கறோம்...," என்று சொல்லி வருகிறாராம்.
05 அக்டோபர் 2012
சிவகார்த்திகேயன் ஜோடி நந்திதா!
நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார் அட்டகத்தி ஹீரோயின் நந்திதா.
அட்டகத்தி படத்தின் நாயகிகளுள் பளிச்சென்று வெளியில் தெரிந்தவர் இந்த நந்திதாதான்.
பெங்களூரைச் சேர்ந்த இந்த இளம் நடிகை இப்போது தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த வேடத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது.
எதிர்நீச்சல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்குகிறார்.
கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார்.
நந்திதாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பும் வந்துள்ளது. அது வெங்கட்பிரபுவின் உதவியாளர் இயக்கும் நளனும் நந்தினியும் பட ஹீரோயினாக அவர் நடிப்பதுதான்!
27 செப்டம்பர் 2012
கவர்ச்சிக் கடலில் குதித்த ராணி முகர்ஜி!
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு வாய்ப்பு குறைவதால் அவர் அய்யா படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று பேசப்படுகிறது.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 34 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது. பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அய்யா படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா என்று பார்க்கிறாரோ என்னவோ. மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியுள்ளாராம். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான்.
ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியுள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவிட்டு இன்னொரு நடிகை தன் படத்தில் அதைவிட படுகவர்ச்சியாக ஆடுகிறார். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல?
18 செப்டம்பர் 2012
இனி ஓவியா கூட நடிக்கமாட்டேன்!
ஓவியா-விமல் |
16 செப்டம்பர் 2012
டூயட் பாட தூது!
தமன்னா |
15 செப்டம்பர் 2012
ஜப்பான் செல்கிறார் ஸ்ரேயா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் 3டி பிரீமியர் ஷோவில் கலந்து கொள்ள ஸ்ரேயா சரண் டோக்கியோ செல்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்த படம் சிவாஜி. தற்போது சிவாஜி படம் 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரீமியர் ஷோ தமிழகம் தவிர்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு ரிலீஸான சிவாஜி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் அதை 3டியில் வெளியிட முடிவு செய்தது. இந்த 3டி படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சல்மான் ருஷ்டியின் மின்நைட் சில்ட்ரன்ஸ் நாவலைத் தழுவி தீபா மேத்தா எடுத்த மிட்நைட் சில்ர்ட்ரன்ஸ் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அந்த படத்தின் பிரீமியர் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயா கலந்து கொண்டார்.
ரஜினிகாந்தின் படத்திற்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் தவிர, ஜப்பான் ரசிகர்களும் சிவாஜி 3டி படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர்.
12 செப்டம்பர் 2012
மணிக்கணக்கில் கட்டிப்பிடித்த த்ரிஷா- ராணா!
திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் சமீபத்தில் நடந்த விருந்தில் பங்கேற்றனர். இருவரும் தனிமையில் நெருக்கமாக அமர்ந்தபடி பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததை தெலுங்கு பத்திரிகைகள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.
ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிச்சயதார்த்தத்தில், த்ரிஷாவுக்கு ராணா மோதிரம் அணிவித்தாராம். ஆனால் த்ரிஷா இதை மறுத்ததோடு, நாங்க இன்னும் ப்ரெண்ட்ஸ்தான் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தார்களாம்.
இந்த விருந்துக்கு திரிஷாவும், ராணாவும் ஒரே காரில் ஜோடியாக வந்தார்கள். வந்ததும் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, தனியாகப் போய் கட்டி அணைத்தபடி உட்கார்ந்து பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
விருந்துக்கு வந்தவர்கள், இந்த ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து, அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பினார்களாம்!
06 செப்டம்பர் 2012
சல்மான் கானுடன் ரொமான்ஸ் செய்ய மறுத்த இலியானா!
நடிகை இலியானா போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டுக் கழித்துள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா பர்பி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நீண்டடடட காலமாக எடுக்கப்பட்ட பர்பி ஷூட்டிங் முடிந்து படம் வரும் 14ம் தேதி ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தை இலியானா பெரிதும் நம்பியுள்ளார். இந்நிலையில் அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
தெலுங்கு போக்கிரியில் நடித்த இலியானா அதன் இந்தி ரீமேக்கில் சல்மானுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இது குறித்து இலி கூறுகையில்,
தெலுங்கு போக்கிரியில் நான் நடித்தேன். அதன் பிறகு அதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக்கில் நடிக்க என்னை அணுகினர். நான் தான் மறுத்துவிட்டேன். இந்தியில் வாண்டட் என்ற பெயரில் எடுத்த படத்தில் நடிக்க மறுத்தேன். அப்போது நான் பாலிவுட்டில் நுழைய தயாராக இல்லை. பாதி மனதோடு நடிக்க வேண்டாமே என்று நினைத்து தான் வாண்டட்டில் நடிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் சல்மான் கான் உடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன். இருப்பினும் வருத்தமில்லை.
பர்பி மூலம் பாலிவுட்டில் நுழைகிறேன். சல்மானுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.
04 செப்டம்பர் 2012
உச்சத்திற்குப் போனார் ஷெர்லின்!
ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே போன்றோருக்கு அரசு உடனடியாக கடிவாளம் போட்டால் நல்லது. காரணம் இருவருமே எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில், ஷெர்லின் சோப்ரா, மிக மிக மோசமான முறையில் தான் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்து அதை பெரும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. அத்தோடு நில்லாமல், ஒரு காலத்தில் தான் காசுக்காக பல ஆண்களுடன் இன்பம் அனுபவித்ததாகவும் சமீபத்தில் பெருமையுடன் கூறியிருந்தார். மேலும் சமீப காலமாக டிவிட்டரில் தனது ஆபாசப் படங்களையும் போட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மேலும் உச்சகட்ட ஆபாசமாக, தான் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் சுய இன்பம் அனுபவிப்பதை, மிக மிக நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். அதை அவர் எடுத்தாரா அல்லது யாரையாவது விட்டு எடுத்தாரா என்பது தெரியவில்லை.
மிகவும் மோசமான ஆபாசப் படமாக இது காட்சி தருகிறது. அத்தோடு ஆபாசமான கமெண்ட்டையும் வேறு போட்டுள்ளார் ஷெர்லின். அதில், ஆபாசம் என்பது கெட்டது அல்ல. அனைத்து கெட்டதுமே மனிதகுலத்தின் இருளான பகுதியிலிருந்துதான் வருகின்றன. பலரும் பல விஷயங்களை கெட்டது, தவறு என்று நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ள ஷெர்லின், மேலும் சில பிரசுரிக்க முடியாத வார்த்தைகளையும் கூடச் சேர்த்து எழுதியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனது பிரைவேட் பங்ஷன் குறித்த படத்தைப் போட்டுள்ளேன். இதற்கு உடைகள் இடையூறாக இருக்கிறது என்பதால் அதை முழுமையாக தூக்கிப் போட்டு விட்டேன் என்றும் தனது ஆபாசப் படத்தை நியாயப்படுத்தியுள்ளார் ஷெர்லின்.
தனது சுய இன்பப் படத்தால் யாரும் கோபப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள ஷெர்லின், உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான் இது. இது ஒரு சாதாரண ஆபாசப் படம்தான். இது பிடிக்காவிட்டால் தயவு செய்து யாரும் பின்பற்ற வேண்டாம், பிடித்திருந்தால் கடைப்பிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
ஷெர்லினைப் பார்த்து பூனம் பாண்டே என்ன படத்தைப் போடப் போகிறாரோ...!
02 செப்டம்பர் 2012
ஒரு வழியாக 'கிளைமேக்ஸை' எட்டினார் சிம்பு!
சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் இணைந்து ரொம்ப நாளாக நடித்து வரும் போடா போடி படத்தை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வருகிறார் சிம்பு. படம் கிளைமேக்ஸ் காட்சியை எட்டி விட்டதாம். சீக்கிரம் முடித்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகும் படம்தான் இந்த போடா போடி. ரொம்பகாலமாக இந்தப் படம் இழுத்துக் கிடக்கிறது. வரலட்சுமியே நொந்து போய் விட்டார். அந்த அளவுக்கு ஜவ்வாக படத்தை இழுத்து விட்டார் சிம்பு.
வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வேகம் பிடித்துள்ளதாம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை முடித்து விட்டார்களாம். எனவே எப்படியும் இந்தப் படம் வெளியாகி விடும் என்று நம்புகிறார்கள்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஒரு நடனத்துடன் கூடிய பின்னணியில் படமாக்கியுள்ளனராம். இந்த நடனத்தில் சிம்பு, வரலட்சுமியுடன், பழைய நடிகை ஷோபனாவும் கால்களை ஆட்டியுள்ளாராம்.
செப்டம்பர் 6ம் தேதி டிரெய்லரை வெளியிட்டு விட்டு படத்தை சீக்கிரமாக கொண்டு வரும் திட்டம் உள்ளதாம்.!
31 ஆகஸ்ட் 2012
சேச்சே...ராணாவுடன் எதுவும் நடக்கலே... திரிஷா
எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திரிஷா.
திரிஷாவும், அவரது திருமண செய்திகளும் என்று தனியாக ஒரு புக்கே போடலாம். அந்த அளவுக்கு அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து விட்டன.
கட்டக் கடைசியாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய்தி வந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தத்தையொட்டி திரிஷாவுக்கு, ராணா, பிளாட்டினம் மோதிரமும், நகைகளையும் கொடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் திரிஷா.
இதுகுறித்து திரிஷா சொல்லும்போது, இது அடிப்படையே இல்லாத செய்தி. நானும், ராணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போய் சேர்த்து வைத்துப் பேசுவது... சேச்சே... நல்லாவே இல்லை.
மேலும் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
25 ஆகஸ்ட் 2012
அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள்!
அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பத்மா மகன் இயக்கும் புதிய படத்துக்கு கூத்து என்று பெயரிட்டுள்ளனர்.
அடர்ந்த காட்டுப் பகுதி பயணத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் த்ரில்லர் இது.
'26699 சினிமா' எனும் நிறுவனம் சார்பில் எஸ். மாலதி தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, ரிச்சர்ட், ஹரீஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
அருந்ததி, நந்தகி ஹீரோயின்கள். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - ரெஹான் இசை. பாடல்கள், யுகபாரதி.
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக வனப்பகுதிகளில் சிறப்பு அனுமதி பெற்று 160 கிமீ பயணித்து காட்சிகளைப் படமாக்கினார்களாம்.
கேரள காடுகளில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.
21 ஆகஸ்ட் 2012
தமன்னாவை மிரட்டும் தயாரிப்பாளர்!
ரொம்ப வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த ப்ரியா படத்தில், நடிகை ஸ்ரீதேவியுடன் ஆண்டு கணக்கில் ஒப்பந்தம் போட்டு பணம் கறப்பார் மேஜர் சுந்தரராஜன். கிட்டத்தட்ட அதே போன்ற சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் முன்னணி நடிகை தமன்னா.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் சாந்து ஷா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் தமன்னா அறிமுகமானார்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சலீம் அக்தர் என்பவர் அப்போது தமன்னாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், 2005 முதல் 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என்பது. இதுகுறித்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் தமன்னா கையெழுத்திட்டுள்ளாராம்.
இப்போது அந்த ஒப்பந்தத்தை தமன்னா மீறி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சலீம் அக்தர் கூறியுள்ளார்.
"தமன்னாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுடன் மேற்கண்ட ஒப்பந்தமும் செய்து கொண்டோம். பின்னர் தமன்னா தென்னிந்திய சினிமாவுக்கு சென்று விட்டார். ஒப்பந்தம் பேசிய நான் அவரை தொடர்பு கொண்டபோதிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தப்படி எனக்கு பணமும் தரவில்லை. தனது பெயரில் எழுத்துக்களையும் திருத்தம் செய்து கொண்டார்.
அவரது குடும்பப் பெயரான ‘பாட்டியா' வை விலக்கிவிட்டு வெறும் தமன்னா என கூறிக்கொள்கிறார். தற்போது இந்தியில் ‘ஹிம்மத்வாலா' என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு தமன்னா பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன்," என்று மிரட்டியுள்ளார்.
தமன்னா கேடி படத்தில் நடிக்க வந்தபோது தனக்கு 16 வயதுதான் என்று கூறியது நினைவிருக்கலாம். அப்படியெனில் இந்திப் படத்தில் இன்னும் முன்பாகவே அறிமுகமாகியிருப்பார். அப்போது அவர் வயது 14 அல்லது 15 இருக்கும்.
இந்த வயதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது செல்லுமா...?
16 ஆகஸ்ட் 2012
'இப்படிக்கு தோழர் செங்கொடி'
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர் நீத்த செங்கொடியின் நினைவாக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆவணப்படம் ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்படுகின்றது.
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைத் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் மூவரின் தண்டனை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறு "இப்படிக்கு தோழர் செங்கொடி" என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் "பொன்னுசாமி" என்ற புனை பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் "பாலை" ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் 19 அன்று சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதல் சிடியினை பெற்றுக் கொள்கிறார். விழாவின் போது, படம் திரையிடப்பட உள்ளது.
08 ஆகஸ்ட் 2012
என்னத்தே கண்ணையா மரணம்!
பிரபல நகைச்சுவை நடிகர் என்னத்தே கண்ணையா நேற்று மாலை திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
1950ம் ஆண்டில் வெளியான நாகையா நடித்த 'ஏழைபடும் பாடு' படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் என்னத்தே கண்ணையா. தொடர்ந்து எம்ஜிஆருடன் நம்நாடு படத்தில் ரங்காராவின் உதவியாளராக நடித்திருந்தார்.
நான், முன்றெழுத்து உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில். யானைப்பாகனாக அவர் நடித்த காட்சிகள் எண்பதுகளில் பிரபலம்.
தொடர்ந்து ரஜினி, கவுண்டமனியுடன் மன்னன் படத்தில் நடித்தார்.
வடிவேலுவுடன் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தின் 'வரூம் ஆனா வராது' நகைச்சுவை காட்சி மிகப் பிரபலமானது.
'தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்றீங்க', என அவர் வடிவேலுவைப் பார்த்து சொல்லும் வசனம் இன்றும் பலரால் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் கண்ணையா. தனது தள்ளாத வயதிலும் கூட, பல படங்களில் நடித்து வந்தார். சமீப வருடங்களில் வந்த வேதம், படிக்காதவன், எம்டன் மகன் போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
வசனம் பேசும்போது, அடிக்கடி என்னத்தே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இவரது பாணி. அதனால் இவர் பெயருடன் அந்த என்னத்தே-வும் ஒட்டிக் கொண்டது.
இந்த வயதிலும் நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாப்பிட்டு படுத்தவர் மாலை 4 மணிக்கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அவரது மனைவி ராஜம் காலமானார். இவர்களுக்கு அசோகன், சாய்கணேஷ் என இரு மகன்களும், அமுதா, தனலட்சுமி, மகேஸ்வரி, சண்முகப்பிரியா என நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்.
ராயப்பேட்டை ராயிட் காலனியில் உள்ள அவர் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு அவரது மகன் சாய்கணேஷ் அலைபேசி எண் - 80156 15535
05 ஆகஸ்ட் 2012
விஜயுடன் சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா!
நடிகை ஆன்ட்ரியாவுக்கு விஜய் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் பிரபலமானவர் ஆன்ட்ரியா ஜெரிமியா. நடிகையாக மட்டுமின்றி தன்னை ஒரு பாடகியாகவும் நிலை நிறுத்தியுள்ளார். கமல் ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று முன்னணி நடிகைகள் எல்லாம் ஏங்க அந்த வாய்ப்பு ஆன்ட்ரியா வீட்டு வாசலுக்கே வந்தது. இதையடுத்து அவர் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே அவர் கமலின் மன்மதன் அம்பு படத்தில் நாயகன் அறிமுகமாகும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாட அழைத்துள்ளனர். ஆன்ட்ரியாவும் சென்று பாட்டை பாடிக் கொடுத்துவிட்டு, விஜயுடன் நடிக்கை ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று வாய்விட்டே கேட்டுவிட்டராம்.
இப்படித் தான் லக்ஷ்மி ராய் இயக்குனர் விஜயிடம் நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அதற்கு அவரும் தான் விஜயை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆன்ட்ரியாவுக்கு அப்படி யாரும் வாக்கு கொடுத்தது போன்று தெரியவில்லை.
01 ஆகஸ்ட் 2012
அடடா!கதை அப்படிப்போகுதோ!!!
தூத்துக்குடி, ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும் பொன்ற கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இயக்குனர் சஞ்சய்ராம். ‘ரோசா’ என்ற படத்தை பாதியிலேயே நிருத்திவிட்டிருந்த சஞ்சய்ராம், ரோசா படத்தை மறுபடியும் ‘குற்றாலம்’ என்ற பெயரில் குற்றால அருவியின் மழைச்சாரல்களுக்கிடையே எடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்’ என்ற பரபரப்பான செய்தி குற்றாலம் படப்பிடிப்பில் நடந்தது தான். படப்பிடிப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தவறாக நினைத்துக் கொண்டு அங்கு வந்து கலாட்டா செய்ததாகவும் பேசிக்கொள்கின்றனர். ஏனென்றால் படத்தின் கதைக்கருவே ஒரு விதமானதாம். புதுமுக நடிகர் வாலியின் மனைவி சௌகந்தி. சஞ்சய்ராமின் மனைவி மீனுகார்த்திகா. சௌகந்தியும், மீனு கார்த்திகாவும் சகோதரிகள். மீனுகார்த்திகா தனது தங்கை கணவருடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சியை படமாகிக்கொண்டிருப்பதை பார்த்து என்ன சார் இது’ என யூனிட் மெம்பர்கள் கேட்க, இவர்களின் சந்தேகத்தை உண்மையாக்கும் விதத்தில் தலை ஆட்டிவிட்டு “நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் தான் கதைக்கரு. ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் தான் அலசப்பட்டு கோடம்பாக்கத்தில் படமாக எடுக்கப்படுகிறது. காம உண்ர்வு அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் தான். அதைத்தான் படமாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
25 ஜூலை 2012
நான் கவர்ச்சியா நடிக்கப் போறேன்!'
சுனேனா... காதலில் விழுந்தேனில் அசத்தாலாக அறிமுகமானார். வம்சம் படத்தில் அட, பரவாயில்லையே.. பாப்பா நல்லா நடிக்குது என பாராட்டும் பெற்றார்.
அத்தோடு காணாமல் போனவர்தான். யாரோ ஒரு நடிகரின் கஸ்டடியில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு வேறு.
கொஞ்சநாள் கழித்து, இப்போது நீர்ப்பறவை, கதிர்வேல், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சுனேனா.
தன் உடல் அமைப்புக்கு கவர்ச்சி ட்ரெஸ், பிகினி போன்றவை செட் ஆகாது என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது 'நான்தான் சின்னப் பொண்ணு, ஏதோ சொல்லிட்டேன். அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா... கொண்டாங்க அந்த பிகினியையெல்லாம்.. ஒரு கை பாத்துடறேன்," எனும் அளவுக்கு இறங்கிவிட்டாராம்!
நிசமாவா? என்றால், "ஆமா.. " என்றவர், தமிழ் நடிகைகள் எப்போதும் வைத்திருக்கும் அந்த ரெடிமேட் வாக்கியத்தை ஒப்பித்தார்.
"கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நான் நடிக்கத் தயார்!"
ஹப்பாடா... தமிழ் சினிமா ரசிகன் கட்ட வேகாம போயிடுமோங்கிற கவலை தீர்ந்ததம்மிணி!!
22 ஜூலை 2012
கமல் மகள் அக்ஷரா காதல்?
இந்தி நடிகர் நசிருதீன் ஷாவின் இளைய மகன் விவானுக்கும், கமல்ஹாசனின் மகள் அக்ஷராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருவதாகவும், இது காதலாக உருவெடுத்திருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அக்ஷராவுடன் விவான் அதிக நேரம் செலவிடுவதாகவும் இத்தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் நட்புடன் இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், காதல் புரிந்து வருவது வெகு சிலருக்கே தெரியுமாம். இருப்பினும் இதை விவான் மறுத்துள்ளார். இதுகுறித்து மிட்டேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நிச்சயம் இது காதல் அல்ல. நாங்கள் இருவருமே சிறு வயது முதல் பழகி வருகிறோம். எங்களது வாழ்க்கையில், ரொமான்ஸ் இல்லை என்று கூறியுள்ளார்.
15 ஜூலை 2012
ரீமா சென் மீது கணவர் கோபம்!
ரீமா சென் |
10 ஜூலை 2012
நயன்,த்ரிஷா கட்டிப்பிடி நட்பு!
அவர் வாய்ப்பை இவர் பறித்தார்... இவர் வாய்ப்பை அவர் தட்டிவிட்டார்... அவருடைய ஆளை இவர் கரெக்ட் பண்ணிட்டார்.... இவருடைய லவ்வரை அவர் லவட்டிக் கொண்டார்....
-நயன்தாரா மற்றும் த்ரிஷா பற்றி மீடியாவில் தொடர்ந்து வந்த செய்தி மற்றும் கிசுகிசுக்கள் இவை. அதற்கேற்ற மாதிரிதான் இருவரும் நடந்து கொண்டனர். தத்தமக்கு வேண்டப்பட்ட நிருபர் & நிருபிகளை ரகசியமாக அழைத்து இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுத்ததெல்லாம் நடந்தது!
அட ஏதாவது விழாக்களில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தார்கள்.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த தனியார் அவார்ட் ஷோவில் இருவரும் அப்படி இழைந்தார்கள். திடீரென்று இருவரும் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என்ற ரேஞ்சுக்கு கட்டிப் பிடித்து கூடிக் குலாவினார்கள்.
விழா முடிந்ததும் வழக்கமாக நடக்கும் சரக்கு பார்ட்டியில் வழிந்த சரக்குகளை விட 'செம ஹாட் மச்சி' எனும் அளவுக்கு இவர்களின் ஷோ நடந்ததாம்.
இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிய, 'த பார்றா கூத்தை' என்று வேடிக்கைப் பார்த்தார்களாம் சக கலைஞர்கள்.
நயன்தாரா - த்ரிஷா சண்டை முட்டிக் கொண்டது விஜய் நடித்து சிறகொடிந்து போன குருவியிலிருந்துதான் என்பது கோலிவுட்டை அக்குவேறாகப் பிரித்து மேயும் வாசகர்களுக்கு தெரியும்தானே!
04 ஜூலை 2012
சூர்யாவுடன் டூயட் பாடும் பிரணீதா!
பிரணீதா |
30 ஜூன் 2012
வதந்திகளை நம்பவேண்டாம் என்கிறார் ஓவியா!
கேரள தொழிலதிபரை காதலிப்பதாக தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.
களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, கலகலப்பு மூலம் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஓவியா கேரளாவைச் சேர்ந்தவர். தமிழில் இப்போது பிஸி நடிகையாக மாறி வருகிறார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசு பரவ ஆரம்பித்துள்ளது.
அனன்யா பாணியில் தன்னைவிட ரொம்ப வயதான ஒருவரை அவர் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது.
இப்போது இந்த செய்திக்கு அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஓவியா.
அவர் கூறுகையில், "சினிமாவில் இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் காதல் என்று எழுதுவது தேவையற்றது.
இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பதற்கெல்லாம் ஏது நேரம்... அவ்வளவு பிஸி. இப்போதைக்கு முழுக்கவனமும் சினிமாவில்தான். இன்னும் திருமணம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை", என்றார்.
29 ஜூன் 2012
நாயகிகள் 6தேவையாம் சிம்புவுக்கு!
யங் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் மன்மதன்-2 படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உட்பட 6 நாயகிகள் நடிக்க உள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு.
தற்போது சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
அவர்கள் த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
மேலும் சில நடிகைகளுடன் படக்குழுவினர் பேசி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.
20 ஜூன் 2012
பாண்டியராஜனின் மகன் படுகாயம்!
பைக் விபத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேம் ராஜன் (19) படுகாயமடைந்தார்.
பிரேம்ராஜன் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். தனது நண்பர் பாரத் (18) என்பவடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குப் புறப்பட்டனர்.
மத்திய கைலாஷ் பகுதியில் சென்றபோது அவரது பைக்கின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தது.
இதில் பிரேம்ராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாரத்தின் கால் உடைந்தது. இருவரும் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பிரேம்ராஜன் தலையில் 18 தையல் போடப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
16 ஜூன் 2012
காசு வாங்கினேனா...?தமன்னா
சமீபத்தில் நடந்த ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம், தமன்னாவின் சூப்பர் ஆட்டம்!
ராம் சரண் - உபாசனாவுக்கு திருமணத்துக்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில்தான் அவர் அசத்தல் ஆட்டம் போட்டார்.
அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் ஆடினார்.
இப்படி நடனமாட அவர்களுக்கு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டது என ஆந்திரத் திரையுலகில் செய்தி பரவ கொதித்துப் போயுள்ளார் தமன்னா.
"திருமண நிகழ்ச்சிகளில் காசு வாங்கிக் கொண்டு ஆடினேன் என்பது எத்தனை கேவலமான பிரச்சாரம்... நான் அந்த மாதிரி பொண்ணா? எங்க வீட்டில் இப்படி ஒரு விசேஷம் நடந்தா எப்படி சந்தோஷமா ஆடிப் பாடுவோமோ அப்படித்தான் ராம் சரண் திருமணத்திலும் ஆடினோம். இப்படியெல்லாம் அதை கொச்சைப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை," என்றார்.
அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தமிழில்?
"கடவுள் அருள் இருந்தால் அது நடக்கும்?" என்றார்.
என்னடா இது... கடவுள் அருள் தமன்னாவுக்கு கிடைப்பதில் பெரிய சிக்கலா இருக்கும் போலிருக்கே!
15 ஜூன் 2012
காகா ராதாகிருஷ்ணன் மரணம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.
இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார்.
இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார்.
காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார்.
மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை. மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.
அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன், பேத்திகள் உள்ளனர்.
இன்று உடல் தகனம்
காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் தகனம் இன்று மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.
13 ஜூன் 2012
சிம்புவுக்கு விரைவில் திருமணம்!
எனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
விஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர்.
இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர்.
உங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார்.
குறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார்.
10 ஜூன் 2012
அஞ்சலியின் உதடுகள்....!!!
அமலா பாலைத் தொடர்நது தற்போது அஞ்சலியின் உதடுகள், ஆர்யாவி்ன் கஸ்டடிக்குப் போகப் போகிறது. சேட்டை படத்திற்காக இருவரும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் 'லைவ்லி'யாக க(ந)டிக்கப் போகிறார்களாம்.
டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி.
டெல்லி பெல்லியில் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதே போல சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை ஆர்யா கவ்விக் கொள்வது போல காட்சி வைத்துள்ளனராம். இந்த லிப்லாக்கின் அவசியம், முக்கியத்துவம், கட்டாயம் குறித்து ஆர்யாவிடமும், அஞ்சலியிடமும் கண்ணன் விளக்கினாராம். இதை ஏற்று இருவரும் முத்தமிட்டுக் கொள்ள சம்மதித்து விட்டனராம்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காட்சியை வடிவமைத்து விட்ட கண்ணன், அக்காட்சியை மும்பையில் போய் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
இதையடுத்து ஆர்யாவும், அஞ்சலியும் தங்களது உதடுகளுடன் மும்பை செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம். அதேசமயம், டெல்லி பெல்லியில் வருவது போன்ற படுக்கை அறைக் காட்சி சேட்டையில் இருக்காதாம்...
ஏற்கனவே அமலா பாலின் உதட்டில் விளையாடியுள்ளார் ஆர்யா. இப்போது அஞ்சலியிடம் வருகிறார்....!
09 ஜூன் 2012
ஓட்டலில் லட்சுமிராய் ரகளை!
லட்சுமிராய் தமிழில் நடித்த 'காஞ்சனா', 'மங்காத்தா' படங்கள் வெற்றிகரமாக ஓடின. ஆனாலும் தமிழில் படங்கள் இல்லை. இந்தி, கன்னடப் படங்களில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரமுடன் 'தாண்டவம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
இதில் அனுஷ்காவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜய் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. லண்டனில் முக்கிய காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டு உள்ளனர்.
அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லட்சுமி ராய்க்கு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த 'ரூம்' பிடிக்காமல் ஓட்டலில் லட்சுமிராய் ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டல் 'ரூம்' வசதியாக இல்லை. அதில் தங்க மாட்டேன் என்று படக்குழுவினருடன் தகராறு செய்தாராம். படப்பிடிப்புக்கு செல்லவும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் லட்சுமிராய்க்காக பல மணி நேரம் காத்து இருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனால் இயக்குனர் விஜய் தவித்தார்.
'ரூம்' பிடிக்காமல் லட்சுமிராய் தகராறு செய்யும் தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது. உடனே லட்சுமி ராய்க்கு வேறு ரூம் மாற்றிக் கொடுக்க சொன்னாராம். புது ரூம் கிடைத்த பிறகே சமாதானமாகினாராம் லட்சுமிராய்.
07 ஜூன் 2012
நடிகரின் பின்புறத்தில் கடித்த ரசிகை!
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மியின் தீவிர ரசிகை ஒருவர் அவரது பின்புறத்தில் கடித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி படங்களில் முத்தக் காட்சி இல்லாமல் இருக்காது. சாதாரண முத்தம் அல்ல லிப் டூ லிப் காட்சிகள். அவர் தற்போது நடித்துள்ள ஷாங்காய் பட விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் வந்திருந்தார்.
ஒரு ஷாப்பிங் மாலில் அவர், அந்த படத்தில் அவருடன் நடித்த அபய் தியோல், கல்கி கொச்லின் ஆகியோர் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ஒரு ரசிகை அத்தனை பாதுகாவலர்களையும் தாண்டி வந்து யாரும் எதிர்பாராவிதமாக இம்ரான் ஹஷ்மியின் பின்புறத்தில் கடித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இம்ரான் ஆடிப்போய் விட்டார். இருக்காதா பின்னே...
படங்களில் முத்தக் காட்சி மூலம் ரசிகர்களை கலங்கவைக்கும் அவரை ஒரு ரசிகை கதிகலங்கவி்ட்டுவிட்டார். முன்பு ஒரு முறை ஜன்னத் 2 ஷூட்டிங்கிற்காக டெல்லி சென்றபோது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இம்ரான் ஹஷ்மியை பார்க்க முந்தியடித்ததால் படக்குழுவினர் படாதபாடு பட்டனர்.
ஒரு முறை வெர்ஜீனியா என்பவர் இம்ரானை பார்க்க ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்திருந்தார் என்றால் அவருக்கு இருக்கும் ரசிகைகளைப் பார்த்துக் கொள்ளுங்களேன்.
03 ஜூன் 2012
நட்சத்திரங்களை பச்சைகுத்திய நமீதா!
வாய்ப்புகள் வற்றிப்போன நடிகை நமீதா ஜோதிடர் ஒருவரின் அறிவுறைப்படி தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளாராம்.
நடிகை நமீதாவுக்கு பட வாய்ப்புகள் வற்றிப்போய்விட்டன. இதனால் அவர் கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்தியா தவிர துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கடைகளைத் திறந்து வைப்பதுடன் அங்கு நடக்கும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்.
கடைதிறப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு அழைப்பவர்கள் பணத்தோடு, அன்பளிப்புகளையும் வாரி வழங்குகிறார்களாம். இதற்கிடையே சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது பற்றி அவர் ஒரு ஜோதிடரை சென்று பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர் உங்கள் முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சை குத்தினால் வாயப்புகள் வந்து குவியும் என்று கூறியுள்ளார்.
உடனே நமீதாவும் தனது முதுகில் 27 நட்சத்திரங்களைப் பச்சைக் குத்திவிட்டார். வாய்ப்புகள் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
01 ஜூன் 2012
சகுனியில் ரஜனி,கமல்!
சகுனி படத்தின் இசைவெளியீட்டுக்குத் தேதி குறித்து அழைப்பிதழும் வைத்துவிட்டார்கள்.
சிறுத்தைக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு வரும் இந்தப் படத்தில் கார்த்தி ரஜினியாகவும், சந்தானம் கமலாகவும் வருகிறார்களாம்.
இதுகுறித்து ஹீரோ கார்த்தி கூறுகையில், "சகுனி எனக்கு ரொம்ப பிடிச்ச படமாக வந்திருக்கு. ஒரு பொதுவான பிரச்சினையை என் புத்திசாலித்தனத்தால தீர்த்து, கூடவே தன்னையும் காப்பாத்திக்கிற கேரக்டர். இது அரசியல் படமா என்பதை பார்த்துவிட்டு நீங்கள்தான் சொல்லணும். காரணம், எதுலதான் அரசியல் இல்லாம இருக்கு... அப்படி பார்த்தா இது அரசியல் படம்தான்...
இந்தப் படத்தில் சந்தானம் என்னை ரஜினி என்று அழைப்பார், நான் அவரை கமல் என்று அழைப்பேன்," என்றார்.
ஜூன் 2-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. மொத்தம் 5 பாடல்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே கார்த்தி பிறந்த நாளான மே 25-ல் இரண்டு பாடல்களின் முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)