குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
பிரகாஷ் ஜா உருவாக்கத்தில் தயாராகி வரும் சக்ரவியூக் என்ற இந்திப் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா. இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது என்று பெருமையான ஒன்றாக மாறியுள்ளது. அதில் ஆடும்போது தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது.
எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு படத்தில் குத்துப் பாட்டு இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது வரவேற்புக்குரியது. மேலும் ஒரு படத்தை தள்ளிக் கொண்டு போகும் சக்தி குத்துப்பாட்டுகளுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.
ஹீரோயின் வரிசையில்தான் கெட்டியாக இல்லை சமீரா ரெட்டி, குத்துப் பாட்டிலாவது கொடி கட்டிப் பறக்கட்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக