பக்கங்கள்

19 அக்டோபர் 2012

த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மரணம்!

Actress Trisha Father Krishnan Passes Away நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று காலமானார். ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்த அவருக்கு வயது 68. நடிகை த்ரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வசிக்கின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக இருந்த கிருஷ்ணன், மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாதுக்குப் போய்விட்டார். ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் த்ரிஷா. த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் எவ்வளவோ முறை அழைத்தும் கிருஷ்ணன் இவர்களோடு வசிக்கவில்லை. தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கூறி அவர் தனியே வசித்து வந்தாராம். தான் வேலை பார்க்கும் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலுக்கு த்ரிஷா வந்தால் கூட, அவரை தன் மகள் என்று காட்டிக் கொள்ள மாட்டாராம். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் ஹைதராபாதில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே ஹோட்டல் ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக