பாலிவுட் பிரபலங்களான, சயீப் அலி கானுக்கும், கரீனா கபூருக்கும், தடபுடலாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. புதுமணத் தம்பதி, தேனிலவுக்காக விரைவில் வெளிநாட்டுக்கு பறக்க தயாராகி வருகின்றனர். கரீனாவின் மாஜி காதலரும், ஜாப் வி மீட் நாயகனுமான, ஷாகித் கபூர் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என கேட்டபோது, கரீனாவும், சயீப்பும், பாலிவுட்டின் பொக்கிஷங்கள். பொருத்தமான ஜோடிகள் கூட. கரீனாவுக்கு என் வாழ்த்துக்கள் என, வாய் நிறைய வாழ்த்துகிறார். அதெல்லாம் சரி, உங்களுக்கு எப்போது திருமணம் என, கேட்டால்,திருமணம் பற்றி, இன்னும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால், மனதுக்கு பிடித்த பெண், கண்ணில் பட்டு, என் தலையைச் சுற்றி, பட்டாம் பூச்சிகள் பறந்தால், உடனடியாக திருமணம் தான் என, உற்சாகத்துடன் கூறுகிறார்.
இதேபோல் பிரபல நடிகையும், நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியுமான கஜோல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி பேசிய கஜோல், அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சைப் ஒரு சிறந்த மனிதர். இருவரும் நீண்டகாலம் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வாழ வாழ்த்துகிறேன், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக