|
ஓவியா-விமல் |
தொடர்ந்து நானும் ஓவியாவும் சேர்ந்து நடிக்கிறதால, ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. அதனால நான் ஓவியா கூட நடிக்க மாட்டேன், என்றார் நடிகர் விமல்.
எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. மற்றொரு நாயகியாக தீபாஷா நடிக்கிறார்.
இப்படத்தை ஆர்.ரவி லல்லின் இயக்குகிறார். இதில் ‘பஸ்ஸே பஸ்ஸே' என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்ற நடிகர் விமலிடம், தொடர்ந்து ஓவியாவுடனே நடிக்கிறீர்களே என கேள்வி எழுப்ப, உடனே சடாரென்று, "இனி நான் ஓவியா கூட நடிக்க மாட்டேன். இதே முடிவை அவங்களும் எடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்," என்றார்.
இதை கொஞ்சமும் எதிர்ப்பாராத ஓவியா, திடுக்கிட்டு விமலைப் பார்த்தார்.
பின்னர் நடிகை ஓவியா கூறுகையில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமலுடன் நடிக்கிறேன். இது அவருடன் நான் நடிக்கும் 3-வது படம். இதில் மாணவி கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து ‘மூடர் கூடம்' என்ற படத்தில் நடிக்க உள்ளேன்.
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். ‘கலகலப்பு' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை ரசிகர்கள் வரவேற்றார்கள்.
‘கலகலப்பு' படத்தில் நடித்தபோது எனக்கும் அஞ்சலிக்கும் போட்டி ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்," என்றவர் கடைசிவரை விமல் பேசியதற்கு பதிலே சொல்லவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக