பக்கங்கள்

15 செப்டம்பர் 2012

ஜப்பான் செல்கிறார் ஸ்ரேயா.

Shriya Saranசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் 3டி பிரீமியர் ஷோவில் கலந்து கொள்ள ஸ்ரேயா சரண் டோக்கியோ செல்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்த படம் சிவாஜி. தற்போது சிவாஜி படம் 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரீமியர் ஷோ தமிழகம் தவிர்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார். ஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு ரிலீஸான சிவாஜி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் அதை 3டியில் வெளியிட முடிவு செய்தது. இந்த 3டி படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் ருஷ்டியின் மின்நைட் சில்ட்ரன்ஸ் நாவலைத் தழுவி தீபா மேத்தா எடுத்த மிட்நைட் சில்ர்ட்ரன்ஸ் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அந்த படத்தின் பிரீமியர் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயா கலந்து கொண்டார். ரஜினிகாந்தின் படத்திற்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் தவிர, ஜப்பான் ரசிகர்களும் சிவாஜி 3டி படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக