பக்கங்கள்

06 செப்டம்பர் 2012

சல்மான் கானுடன் ரொமான்ஸ் செய்ய மறுத்த இலியானா!

Ileana D'Cruzநடிகை இலியானா போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டுக் கழித்துள்ளார். தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா பர்பி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நீண்டடடட காலமாக எடுக்கப்பட்ட பர்பி ஷூட்டிங் முடிந்து படம் வரும் 14ம் தேதி ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தை இலியானா பெரிதும் நம்பியுள்ளார். இந்நிலையில் அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு போக்கிரியில் நடித்த இலியானா அதன் இந்தி ரீமேக்கில் சல்மானுடன் நடிக்க மறுத்துவிட்டாராம். இது குறித்து இலி கூறுகையில், தெலுங்கு போக்கிரியில் நான் நடித்தேன். அதன் பிறகு அதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக்கில் நடிக்க என்னை அணுகினர். நான் தான் மறுத்துவிட்டேன். இந்தியில் வாண்டட் என்ற பெயரில் எடுத்த படத்தில் நடிக்க மறுத்தேன். அப்போது நான் பாலிவுட்டில் நுழைய தயாராக இல்லை. பாதி மனதோடு நடிக்க வேண்டாமே என்று நினைத்து தான் வாண்டட்டில் நடிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் சல்மான் கான் உடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன். இருப்பினும் வருத்தமில்லை. பர்பி மூலம் பாலிவுட்டில் நுழைகிறேன். சல்மானுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக