பக்கங்கள்

29 டிசம்பர் 2012

உல்லாசமாக இருக்க ரூ.5000 கேட்டார் புவனேஸ்வரி!

உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள். அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை. இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர். அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது. அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார். மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக