பக்கங்கள்

03 டிசம்பர் 2012

சிம்புவுடன் அப்படி எதுவுமில்லை"லேகா மறுப்பு!

Lekha Washingtonஹோட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் ஒன்றாக வெளியே வந்தார் லேகா வாஷிங்டன்... இதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா. லேகா வாஷிங்டன் அதிக அளவில் படங்களில் நடிப்பதில்லை. ரொம்ப செலக்ட் செய்தே நடிக்கிறார். விளம்பர படங்களில்தான் தற்போது அதிக அளவில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் விரைவில் அவர் சிம்புவுடன் ஒரு படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின. மேலும் லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறின. அதை விட பரபரப்பானது, லேகாவும் சிம்புவும் ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், அறைக்குள்ளிருந்து இருவரும் ஜோடியாக வெளியே வந்ததாகவும் வந்த கிசுகிசுதான். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது இயக்கத்தில் உருவாகும் குறும்படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக சமீபத்தில் ஒரு நியூஸ் வந்தது. அதேபோல நானும், சிம்புவும் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்ததாகவும் இன்னொரு செய்தி வெளியானது. இரண்டுமே பொய்யானது, தவறானது. நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஹோட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன். கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான் என்றார் லேகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக