பக்கங்கள்

09 டிசம்பர் 2012

உன் சமையல் அறையில்!

நடிகை சினேகா பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உன் சமையல் அறையில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர், இயக்குனர் பிரகாஷ் ராஜ் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரகாஷ் ராஜ் இதற்கு முன்பு கன்னடத்தில் அபியும், நானும் மற்றும் தோணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா பிரகாஷ் ராஜ் நிச்சயம் நல்ல படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கையில் அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு இந்த படத்தில் கிடைத்துள்ள கதாபாத்திரத்தை நினைத்து சினேகா குஷியாக உள்ளார் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு சமையல் தெரியாத நான் தற்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். கடவுள் அருளால் எனது திருமண வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் சினேகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக