பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2012

சேச்சே...ராணாவுடன் எதுவும் நடக்கலே... திரிஷா

எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திரிஷா. திரிஷாவும், அவரது திருமண செய்திகளும் என்று தனியாக ஒரு புக்கே போடலாம். அந்த அளவுக்கு அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து விட்டன. கட்டக் கடைசியாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய்தி வந்தது. இந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தத்தையொட்டி திரிஷாவுக்கு, ராணா, பிளாட்டினம் மோதிரமும், நகைகளையும் கொடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் திரிஷா. இதுகுறித்து திரிஷா சொல்லும்போது, இது அடிப்படையே இல்லாத செய்தி. நானும், ராணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போய் சேர்த்து வைத்துப் பேசுவது... சேச்சே... நல்லாவே இல்லை. மேலும் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக