ரொம்ப வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த ப்ரியா படத்தில், நடிகை ஸ்ரீதேவியுடன் ஆண்டு கணக்கில் ஒப்பந்தம் போட்டு பணம் கறப்பார் மேஜர் சுந்தரராஜன். கிட்டத்தட்ட அதே போன்ற சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் முன்னணி நடிகை தமன்னா.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் சாந்து ஷா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் தமன்னா அறிமுகமானார்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சலீம் அக்தர் என்பவர் அப்போது தமன்னாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், 2005 முதல் 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என்பது. இதுகுறித்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் தமன்னா கையெழுத்திட்டுள்ளாராம்.
இப்போது அந்த ஒப்பந்தத்தை தமன்னா மீறி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சலீம் அக்தர் கூறியுள்ளார்.
"தமன்னாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுடன் மேற்கண்ட ஒப்பந்தமும் செய்து கொண்டோம். பின்னர் தமன்னா தென்னிந்திய சினிமாவுக்கு சென்று விட்டார். ஒப்பந்தம் பேசிய நான் அவரை தொடர்பு கொண்டபோதிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தப்படி எனக்கு பணமும் தரவில்லை. தனது பெயரில் எழுத்துக்களையும் திருத்தம் செய்து கொண்டார்.
அவரது குடும்பப் பெயரான ‘பாட்டியா' வை விலக்கிவிட்டு வெறும் தமன்னா என கூறிக்கொள்கிறார். தற்போது இந்தியில் ‘ஹிம்மத்வாலா' என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு தமன்னா பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன்," என்று மிரட்டியுள்ளார்.
தமன்னா கேடி படத்தில் நடிக்க வந்தபோது தனக்கு 16 வயதுதான் என்று கூறியது நினைவிருக்கலாம். அப்படியெனில் இந்திப் படத்தில் இன்னும் முன்பாகவே அறிமுகமாகியிருப்பார். அப்போது அவர் வயது 14 அல்லது 15 இருக்கும்.
இந்த வயதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது செல்லுமா...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக