பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2012

அடடா!கதை அப்படிப்போகுதோ!!!


தூத்துக்குடி, ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும் பொன்ற கொடூரமான ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இயக்குனர் சஞ்சய்ராம். ‘ரோசா’ என்ற படத்தை பாதியிலேயே நிருத்திவிட்டிருந்த சஞ்சய்ராம், ரோசா படத்தை மறுபடியும் ‘குற்றாலம்’ என்ற பெயரில் குற்றால அருவியின் மழைச்சாரல்களுக்கிடையே எடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்’ என்ற பரபரப்பான செய்தி குற்றாலம் படப்பிடிப்பில் நடந்தது தான். படப்பிடிப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தவறாக நினைத்துக் கொண்டு அங்கு வந்து கலாட்டா செய்ததாகவும் பேசிக்கொள்கின்றனர். ஏனென்றால் படத்தின் கதைக்கருவே ஒரு விதமானதாம். புதுமுக நடிகர் வாலியின் மனைவி சௌகந்தி. சஞ்சய்ராமின் மனைவி மீனுகார்த்திகா. சௌகந்தியும், மீனு கார்த்திகாவும் சகோதரிகள். மீனுகார்த்திகா தனது தங்கை கணவருடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சியை படமாகிக்கொண்டிருப்பதை பார்த்து என்ன சார் இது’ என யூனிட் மெம்பர்கள் கேட்க, இவர்களின் சந்தேகத்தை உண்மையாக்கும் விதத்தில் தலை ஆட்டிவிட்டு “நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் தான் கதைக்கரு. ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் தான் அலசப்பட்டு கோடம்பாக்கத்தில் படமாக எடுக்கப்படுகிறது. காம உண்ர்வு அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் தான். அதைத்தான் படமாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக