பக்கங்கள்

08 ஆகஸ்ட் 2012

என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ மரணம்!

Popular Comedian Ennathe Kannayya Passes Away பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌னத்‌தே‌ கண்ணையா நேற்று மாலை திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 87. 1950ம்‌ ஆண்‌டி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன நா‌கை‌யா‌ நடி‌த்‌த 'ஏழை‌படும்‌ பா‌டு' படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌கரா‌க அறி‌முகமா‌னவர்‌ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா. தொ‌டர்‌ந்‌து எம்ஜிஆருடன் நம்‌நா‌டு படத்தில் ரங்காராவின் உதவியாளராக நடித்திருந்தார். நா‌ன்‌, முன்‌றெ‌ழுத்‌து உட்‌பட 250க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில். யானைப்பாகனாக அவர் நடித்த காட்சிகள் எண்பதுகளில் பிரபலம். தொடர்ந்து ரஜினி, கவுண்டமனியுடன் மன்னன் படத்தில் நடித்தார். வடிவேலுவுடன் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தின் 'வரூம் ஆனா வராது' நகைச்சுவை காட்சி மிகப் பிரபலமானது. 'தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்றீங்க', என அவர் வடிவேலுவைப் பார்த்து சொல்லும் வசனம் இன்றும் பலரால் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் கண்ணையா. தனது தள்ளாத வயதிலும் கூட, பல படங்களில் நடித்து வந்தார். சமீப வருடங்களில் வந்த வேதம், படிக்காதவன், எம்டன் மகன் போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார். வசனம் பேசும்போது, அடிக்கடி என்னத்தே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இவரது பாணி. அதனால் இவர் பெயருடன் அந்த என்னத்தே-வும் ஒட்டிக் கொண்டது. இந்‌த வயதி‌லும்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க பே‌சி‌ சி‌ரி‌க்‌க வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருந்‌தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சா‌ப்‌பி‌ட்‌டு படுத்‌தவர் மா‌லை‌‌ 4 மணி‌க்‌கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. கடந்‌த நா‌ன்‌கு வருடத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ அவரது மனை‌வி‌ ரா‌ஜம்‌ கா‌லமா‌னா‌ர். இவர்‌களுக்‌கு அசோ‌கன்‌, சா‌ய்‌கணே‌ஷ்‌ என இரு மகன்‌களும்‌, அமுதா‌, தனலட்‌சுமி‌, மகே‌ஸ்‌வரி‌, சண்‌முகப்‌பி‌ரி‌யா‌ என நா‌ன்‌கு மகள்களும்‌ உள்‌ளனர். அனை‌வருக்‌கும்‌ தி‌ருமணம்‌ செய்து வைத்துவிட்டார். ரா‌யப்‌பே‌ட்‌டை‌ ரா‌யி‌ட்‌ கா‌லனி‌யி‌ல்‌ உள்‌ள அவர் வீ‌ட்‌டி‌ல்‌ உடல் வை‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. புதன்கிழமை மா‌லை‌ 4 மணி‌க்‌கு அவரது இறுதி‌ ஊர்‌வலம்‌ நடை‌பெ‌றுகி‌றது. மே‌லும்‌ வி‌பரங்‌களுக்‌கு அவரது மகன்‌ சா‌ய்‌கணே‌ஷ்‌ அலைபேசி எண் - 80156 15535

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக