கேரள தொழிலதிபரை காதலிப்பதாக தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.
களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, கலகலப்பு மூலம் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஓவியா கேரளாவைச் சேர்ந்தவர். தமிழில் இப்போது பிஸி நடிகையாக மாறி வருகிறார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசு பரவ ஆரம்பித்துள்ளது.
அனன்யா பாணியில் தன்னைவிட ரொம்ப வயதான ஒருவரை அவர் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது.
இப்போது இந்த செய்திக்கு அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஓவியா.
அவர் கூறுகையில், "சினிமாவில் இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் காதல் என்று எழுதுவது தேவையற்றது.
இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பதற்கெல்லாம் ஏது நேரம்... அவ்வளவு பிஸி. இப்போதைக்கு முழுக்கவனமும் சினிமாவில்தான். இன்னும் திருமணம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை", என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக