வாய்ப்புகள் வற்றிப்போன நடிகை நமீதா ஜோதிடர் ஒருவரின் அறிவுறைப்படி தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளாராம்.
நடிகை நமீதாவுக்கு பட வாய்ப்புகள் வற்றிப்போய்விட்டன. இதனால் அவர் கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்தியா தவிர துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கடைகளைத் திறந்து வைப்பதுடன் அங்கு நடக்கும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்.
கடைதிறப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு அழைப்பவர்கள் பணத்தோடு, அன்பளிப்புகளையும் வாரி வழங்குகிறார்களாம். இதற்கிடையே சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது பற்றி அவர் ஒரு ஜோதிடரை சென்று பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர் உங்கள் முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சை குத்தினால் வாயப்புகள் வந்து குவியும் என்று கூறியுள்ளார்.
உடனே நமீதாவும் தனது முதுகில் 27 நட்சத்திரங்களைப் பச்சைக் குத்திவிட்டார். வாய்ப்புகள் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.03 ஜூன் 2012
நட்சத்திரங்களை பச்சைகுத்திய நமீதா!
வாய்ப்புகள் வற்றிப்போன நடிகை நமீதா ஜோதிடர் ஒருவரின் அறிவுறைப்படி தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளாராம்.
நடிகை நமீதாவுக்கு பட வாய்ப்புகள் வற்றிப்போய்விட்டன. இதனால் அவர் கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்தியா தவிர துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கடைகளைத் திறந்து வைப்பதுடன் அங்கு நடக்கும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்.
கடைதிறப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு அழைப்பவர்கள் பணத்தோடு, அன்பளிப்புகளையும் வாரி வழங்குகிறார்களாம். இதற்கிடையே சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது பற்றி அவர் ஒரு ஜோதிடரை சென்று பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர் உங்கள் முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சை குத்தினால் வாயப்புகள் வந்து குவியும் என்று கூறியுள்ளார்.
உடனே நமீதாவும் தனது முதுகில் 27 நட்சத்திரங்களைப் பச்சைக் குத்திவிட்டார். வாய்ப்புகள் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.01 ஜூன் 2012
சகுனியில் ரஜனி,கமல்!
சகுனி படத்தின் இசைவெளியீட்டுக்குத் தேதி குறித்து அழைப்பிதழும் வைத்துவிட்டார்கள்.
சிறுத்தைக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு வரும் இந்தப் படத்தில் கார்த்தி ரஜினியாகவும், சந்தானம் கமலாகவும் வருகிறார்களாம்.
இதுகுறித்து ஹீரோ கார்த்தி கூறுகையில், "சகுனி எனக்கு ரொம்ப பிடிச்ச படமாக வந்திருக்கு. ஒரு பொதுவான பிரச்சினையை என் புத்திசாலித்தனத்தால தீர்த்து, கூடவே தன்னையும் காப்பாத்திக்கிற கேரக்டர். இது அரசியல் படமா என்பதை பார்த்துவிட்டு நீங்கள்தான் சொல்லணும். காரணம், எதுலதான் அரசியல் இல்லாம இருக்கு... அப்படி பார்த்தா இது அரசியல் படம்தான்...
இந்தப் படத்தில் சந்தானம் என்னை ரஜினி என்று அழைப்பார், நான் அவரை கமல் என்று அழைப்பேன்," என்றார்.
ஜூன் 2-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. மொத்தம் 5 பாடல்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே கார்த்தி பிறந்த நாளான மே 25-ல் இரண்டு பாடல்களின் முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.30 மே 2012
மாற்றம் செய்ததால் விலகிய கார்த்திகா!
இயக்குநர் சுந்தர் சி இயக்க விஷால் நடிக்கும் எம்ஜிஆர் (மத கஜ ராஜா) படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை கார்த்திகா.
இந்தப் படத்தின் கதையில் இயக்குநர் சுந்தர் சி செய்த மாறுதல் தனக்கு திருப்தியாக இல்லாததால் விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னிடம் இயக்குநர் சுந்தர் சொன்ன கதை ஒன்றாகவும், இப்போது அவர்கள் எடுக்கவிருப்பது வேறு கதை என்றும் தெரிய வந்தது. என்னை வெறும் கவர்ச்சிக்காக மட்டும்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.
மேலும் முதலில் சொன்ன கதையில் விஷால் மூன்று வேடங்களில் நடிப்பார் என்றார்கள். இப்போது அதிலும் மாறுதல். இரண்டு ஹீரோயின்கள் வேறு. எனவே எனக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. இந்தப் படத்தில் நான் விலகினாலும், சுந்தர் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன்," என்றார்.
ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் விலகிக் கொண்டார் ஹன்சிகா.
இப்போது சரத்குமார் மகள் வரலட்சுமி இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
இன்னும் வராத லட்சுமியாகவே இருக்கும் வரலட்சுமிக்கு இந்தப் படமாவது அமையுமா.. பார்க்கலாம்!28 மே 2012
பெரிஷா கேட்கும் பிரணிதா!
நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா.
முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடி விட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன், பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள்.
இந்த நிலையில் சகுணி படம் மூ்லம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புகளுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம்.
அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்து விட்டாராம்.அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம்.
முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை, அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் 'சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச்' சேர்ந்தவர்கள்...!25 மே 2012
நடிகர் திலீப் மரணம்!
தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். கமலுடன் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் நடித்தார். ரஜினியுடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மை படங்களில் திலீப் இருந்தார்.
சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூருக்கு குடிபெயர்ந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிறுநீரக கோளாறும் இருந்தது. உடனடியாக அவரை மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தார்கள். 24.05.2012 அன்று உடல்நிலை மோசமானது. திடீர் மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற தீவிரமாக போராடியும் பலனின்றி இன்று (25.05.2012) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.
திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கிறது.23 மே 2012
மும்பையில் குடியேறும் ஸ்ருதி ஹாசன்!
நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். அங்கு
குடி போகப் போகிறாராம்.நடிகை ஸ்ருதி ஹாசன் பாலிவுட் படமான லக்கில் தான் அறிமுகமானார். லக் அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் ஏழாம் அறிவு அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் பவன் கல்யாணுடன் நடித்த தெலுங்கு படமான கப்பார் சிங் சக்கை போடு போடுகிறது. இந்நிலையில் ஸ்ருதிக்கு பாலிவுட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்துள்ளார். அவரது தாய் சரிகா மற்றும் தங்கை அக்ஷரா தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தான் இந்த வீடு உள்ளது. விரைவில் அவர் மும்பையில் குடியேறுகிறாராம்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மும்பையில் வீடு பார்த்திருக்கிறேன். மும்பைக்கும் எனக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது தாயும், தங்கையும் அங்கு தான் உள்ளனர். நான் கூட பந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் கல்லூரியில் தான் படித்தேன். அதனால் மும்பை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. அதனால் நான் பந்த்ரா பெண்ணாகிவிட்டேன் என்றார்.
20 மே 2012
அழகி நானே"என்கிறார் ஸ்ரேயா!
அழகில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்று நடிகை ஸ்ரேயா
தெரிவித்துள்ளார்.ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த நடிகை ஸ்ரேயா சரண் தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்நிலையி்ல அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணி நடந்து வருகிறது.
நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியம். ஒரு காலத்தில் அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததால் நிறைய படங்களில் நடித்தேன். பெரிய, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தேன். ஆனால் தற்போது எனக்கு நேரம் சாதகமாக இல்லை. இருப்பினும் அதிர்ஷ்டம் மீண்டும் வரும் என்று நம்புகிறேன். அழகில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது.
அண்மையில் சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்து அடடா நான் இவ்வளவு அழகா என்று வியந்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்த நிறைய பேர் இத்தனை அழகை எங்கே ஒளித்து வைத்திருந்தாய் என்று வியந்து கேட்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது எப்படி இருந்தேனோ தற்போதும் அப்படியே தான் உள்ளேன். அண்மையில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டேன். மேடையில் நான் நடந்து வந்தபோது கிடைத்த கைதட்டல்களை என்னால் மறக்க முடியாது என்றார்.
16 மே 2012
குழந்தை நட்சத்திரம் பலி- இயக்குநர் உருக்கம்
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தாருணி சச்தேவ்
தன் தாயாருடன் பலியானார். அவர் ரஸ்னா விளம்பரத்திலும், அமிதாப்புடன் பா என்ற
இந்திப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றவர்.அந்த குழந்தை நட்சத்திரம் வெற்றிச்செல்வன் என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார்.
நேபாளத்தில் பக்தி சுற்றுலா சென்ற 21 பேர் பயணம் செய்த விமானம் மலையில் மோதி, விழுந்து நொறுங்கியது. அதில், 4 தமிழர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பலியானவர்களில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவும் ஒருவர்.
ரஸ்னா விளம்பரம், பா இந்திப் படம் தவிர, 'வெள்ளி நட்சத்திரம்', சத்யம் போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கானின் குரோர்பதி வினாடி வினா டி.வி. நிகழ்ச்சியிலும் தருணி பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படம் 'வெற்றிச் செல்வன்'
அதைத் தொடர்ந்து, `வெற்றிச் செல்வன்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகி ராதிகா ஆப்தேயின் தங்கையாக நடிக்க, தருணி சச்தேவ் ஒப்பந்தமானார். இந்த படத்தை ருத்ரன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தருணி சச்தேவ் 3 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
இதுபற்றி படத்தின் இயக்குநர் ருத்ரன் கூறுகையில், "தருணி சச்தேவ், சிறிய குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே எனக்கு தெரியும். என்னுடைய விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதை வைத்துதான் 'வெற்றிச்செல்வன்' படத்தில், கதாநாயகிக்கு தங்கையாக அவரை ஒப்பந்தம் செய்தேன். மிக திறமையான குழந்தை நட்சத்திரம் அவர். எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன்.
கோடை விடுமுறையை கழிப்பதற்காக தருணி சச்தேவ் தனது தாயாருடன் நேபாளம் போவதாக, என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார். அவர் சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற 25-ந் தேதி முதல் ஊட்டியில் நடக்கவிருக்கிறது. அதற்குள் திரும்பி வந்து விடுகிறேன் என்று சொன்னார்.
ஆனால், தருணி சச்தேவ் தன் தாயாருடன் திரும்பி வர முடியாத இடத்துக்கு போய்விட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கப்போவதில்லை. அப்படியே பயன்படுத்தப் போகிறேன்,'' என்றார்.
அமிதாப்பச்சன் அதிர்ச்சி
நடிகை தருணி சச்தேவின் திடீர் மரணம் அமிதாப்பச்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "கடவுளே இந்த துயரமான செய்தி உண்மையாக இருக்கக்கூடாது,'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் தருணியின் மறைவுக்கு அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து இருக்கிறார்.
காட்மாண்டில் உடல்கள்
விபத்தில் பலியான 15 பேரில், 13 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் நேபாள தலைநகர் காட்மாண்டு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மணிபால் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன.
பிரேத பரிசோதனைக்குப்பின் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
15 மே 2012
விஸ்வநாதன் மனைவி மரணம்!
பிரபல சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள், சென்னையில்
நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.ஜானகி அம்மாள் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் தகனம் பெசன்ட்நகரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
ஜானகி அம்மாள் உடலுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரணம் அடைந்த ஜானகி அம்மாளுக்கு, கோபி, முரளி, பிரகாஷ், அரிதாஸ் ஆகிய 4 மகன்களும், லதா, மது, சாந்தி ஆகிய 3 மகள்களும் இருக்கிறார்கள்.
14 மே 2012
ஜெயம் ரவிக்காக அமலா விலகல்!
ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விலகுவதில் குறுகிய காலத்தில் பெயர் பெற்ற
நடிகையாகிவிட்டார் அமலா பால்.தமிழ், தெலுங்கில் பிஸியாக உள்ள அவர், லேட்டஸ்டாக விலகியுள்ள படம் ரவி தேஜாவின் 'சார் ஒஸ்தாரா'!
காரணம், அதை விட பெரிய படமான, அதுவும் தமிழ் - தெலுங்கில் தயாராகும் ஜெயம் ரவியின் பூலோகம். ராம் சரண் படத்துக்கு வேறு தொடர்ச்சியாக கால்ஷீட் தர வேண்டியிருந்ததால், ரவி தேஜா படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அமலா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ராம் சரண் பட ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. அதற்கு 20 நாட்கள். அதற்கடுத்து ஜெயம் ரவி படம். இதற்கு தொடர்ச்சியாக தேதிகள் கொடுத்தாக வேண்டும். அதான் ரவிதேஜா படத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது. வேறு பிரச்சினை இல்லை," என்றார்.
ஏற்கெனவே தனுஷின் 3 உள்பட மூன்று படங்களில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு பின் விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.
11 மே 2012
சினேகா,பிரசன்னா திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது!
நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா
வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி
மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.
இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.
திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.
ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.
06 மே 2012
பரதேசியில் பூஜா இல்லை!
இயக்குனர் பாலா இயக்கும் பரதேசி படத்தில் பூஜா தான் நாயகி என்று அறிவிப்பு வெளியானது. நீண்ட நாட்களாக கோலிவுட்டில் காணாமல் போன பூஜா இதன் மூலம் மறுபிரவேசம் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறாராம்.
படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பூஜா கூறுகையில்,
நான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த பட ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியா செல்கிறேன். கால்ஷீட் பிரச்சனையால் தான் பாலா படத்தில் நடிக்க முடியவில்லை என்றார்.
பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கினார் பூஜா. அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த துரோகி படத்தில் கௌரவ வேடத்தில் வந்த பூஜாவை அடுத்து பார்க்கவே முடியவில்லை. இனி எப்பொழுது தான் கோலிவுட்டுக்கு வருவாரோ தெரியவில்லை.
04 மே 2012
ரஜினி, தீபிகா படுகோனே பரத நாட்டியம்!
கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம்
ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது.
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர்.
இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர்.
இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார்.
01 மே 2012
சேலை கட்டினா பார்க்க மாட்டாங்க!
அடேங்கப்பா, சில்க் ஸ்மிதாவுக்கு வந்த கிராக்கியைப் பாருங்கள். உயிருடன்
இருந்தபோதும் அவருக்கு கிராக்கி, இப்போது மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் கூட
கிராக்கி சற்றும் குறையவில்லை. நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சில்க்
ஸ்மிதாவின் கதையைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியில் வெளியான டர்ட்டி பிக்சர்ஸ் படம் ஓடிய ஓட்டம்தான் இத்தனைக்கும் காரணம். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்யவுள்ள நிலையில் அடுத்து பெங்காலியிலும் டர்ட்டி பிக்சர்ஸை கொண்டு போகிறார்களாம்.
பெங்காலியில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக அதாவது சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கப் போவது கவர்ச்சி களேபர அழகி ராக்கி சாவந்த். சதாப்தி ராய் படத்தை இயக்குகிறார். தபஸ் பால் தயாரிக்கிறார்.
இந்தப் படம் குறித்து ராக்கி கூறுகையில், எங்க சமூகத்துப் பெண்களின் (அதாவது குத்துப் பாட்டுகளுக்கு ஆடும் அழகிகளாம்) பிரதிநிதியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். ஆனால் ஒரிஜினல் குத்தாட்ட அழகியே ஹீரோயினாக நடித்தால்தான் அது பொருத்தமாக அமையும். எனவே அந்த வகையில் வித்யாபாலனை நான் நிச்சயம் பீட் செய்வேன், கலக்கலாக நடிப்பேன் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.
போல்டான காட்சிகளிலும், படுக்கை அறைக் காட்சிகளிலும் நடிக்க ஆவலோடு காததுள்ளேன். அதற்கெல்லாம் நான் தயங்கவே மாட்டேன். அட நீண்ட நேரம் முத்தம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றாலும் கூட எனக்குக் கவலை இல்லை. காட்சி படு சூப்பராக வரும், பாருங்கள்.
டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வித்யா பாலன் பெரிதாக எதையும் செய்து விடவில்லை, காட்டி விடவில்லை. ஆனால் சூடான காட்சிகளில் நான் சிறப்பாக செய்வதைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப் போகிறார்கள். வித்யா பாலனை விட சற்றே தூக்கலாக எனது கவர்ச்சி இதில் இருக்கும். அதைப் பார்த்து வித்யாவே கூட அசந்து போவார் பாருங்கள்.
சினிமாவில் சேலையைக் கட்டினால் அதை கழற்றிப் போட்டாக வேண்டும். அப்போதுதான் அந்தக் காட்சிக்கே தனி களை வரும். நடிகை சேலையில் வந்தால் அது பேசப்படாது, அந்த நடிகை, சேலையைக் கழற்றிப் போட்டால்தான் பேசுவார்கள். அதை நான் செய்வேன் என்று பேசிக் கொண்டே போகிறார் ராக்கி.
சென்சார் அதிகாரிங்களே எப்படிப்பா சமாளிக்கப் போறீங்க இந்த வங்கத்து சில்க்கை...!?!
29 ஏப்ரல் 2012
நான் ரெடி என்கிறார் நிகிதா!
கன்னட டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க மறுத்து விட்ட கன்னட நடிகை நிகிதா துக்ரால்,
தற்போது தமிழில் எடுக்குப்படும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிக்க தயாராக
இருப்பதாக அறிவித்துள்ளார்.இந்தியில் வித்யா பாலனின் எடுப்பான கவர்ச்சியால் பெரும் வெற்றி பெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும். இப்படத்தை தற்போது தமிழிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளனர்.
தமிழில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. கன்னடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கவுள்ளார்.
முதலில் இந்த வேடத்தில் நடிக்க பூஜா காந்தி மற்றும் நிகிதாவை அணுகினர். ஆனால் இருவரும் நடிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து நிகிதா கூறுகையில், இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக இருக்குமானால் நிச்சயம் நான் ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் இது ஒரு விபச்சாரியின் கதையாக உள்ளது. இதில் நான் நடித்தால் அது சில்க்கையும், கன்னட மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும் என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் தயார் என்று திடீரென கூறியுள்ளார் நிகிதா. சில்க் ஸ்மிதா தமிழில்தான் பிரபலமானார். தமிழ் நடிகையாகவே இருந்தவர் அவர். எனவே தமிழில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நிகிதா.
ஆனால், கன்னடத்தில் படு கவர்ச்சியாக இப்படத்தை எடுக்கவிருப்பதால்தான் நிகிதா நடிக்க மறுத்து விட்டார் என்றும், தமிழில் அந்த அளவுக்கு கவர்ச்சி இருக்காது என்பதால்தான் தமிழில் நடிக்க விரும்புகிறார் என்றும் ஒரு டாக் உலவுகிறது.
24 ஏப்ரல் 2012
ஆசை ஆசையாய் கதை சொல்லலாம்..!
காஜல் அகர்வால் காலம் போய் விட்டது. அடுத்து தங்கச்சி நிஷா அகர்வால் டர்ன். இஷ்டம் படத்தில் விமலுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நிஷா, தமிழ் சினிமாவில் நங்கூரம் பாய்ச்சி தனது இடத்தை பக்கவாக போட்டு விட துடிப்போடு இருக்கிறாராம்.
காஜல் அகர்வாலுக்கே தற்போது தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லைதான். இருந்தாலும் அவரது தங்கச்சியான நிஷா அகர்வாலையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார். தமிழிலும், தெலுங்கிலுமாக தற்போது நடித்து வரும் காஜல், தங்கச்சிக்கும் அவ்வப்போது ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளிக் கொடுத்து ஊக்கமளித்து வருகிறார்.
இருப்பினும் கைவசம் ஓரிரு படங்களே நிஷா வசம் இருக்கிறதாம். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்துள்ளனர் அக்காவும், தங்கச்சியும். அப்போதுதான் நம்மைத் தேடி கதை சொல்ல வருவோருடன் அமர்ந்து 'டிஸ்கஸ் செய்து கதையை முடிவு செய்ய சரியான இடம்' இல்லை என்று அவர்களுக்குப் புரிந்ததாம்.
இதையடுத்து தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவை - ஸ்விம்மிங் பூல் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பங்களவாம் அது, வாடகை எவ்வளவு என்று தெரியவில்லை - வாடகைக்குப் பிடித்துள்ளாராம் நிஷா. இப்போது கதை சொல்ல வரும் இயக்குநர்களுக்கும், காசு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வசதியாக இந்த பங்களா அமைந்துள்ளதாம்.இங்கிருந்தபடிதான் இனி இயங்கப் போகிறாராம் நிஷா. எனவே இனிமேல் நிஷாவிடம் கதை சொல்ல விரும்புவோருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. பங்களாவுக்குப் போய் விட்டால் போதும் ஆற அமர கதை சொல்லி படத்திற்குப் 'புக்' செய்து விட்டு வர முடியும்.
20 ஏப்ரல் 2012
பூலோகத்தில் நயன்!
ஜெயம் ரவியின் அடுத்த படமான பூலோகத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்புகள் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுமுக இயக்குனரின் பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டார்களாம். கதையைக் கேட்ட அவர் எனக்கு ஸ்டோரி ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த படத்தில் நயனை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் துவங்குகிறது. இதில் நயன் தான் ஹீரோயினா என்பது விரைவில் தெரிய வரும்.
அடடா அத்தனை இயக்குனர்களும் நயன் திரும்ப நடிக்க வரமாட்டாரா என்று காத்திருந்தார்கள் போலும். நயன் ரிட்டர்ன் ஆனவுடனேயே அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகிறார்களே.
எதுவாக இருந்தால் என்ன, நயன் காட்டில் வாய்ப்பு மழை 'சோ'வென்று பெய்கிறது.
25 மார்ச் 2012
அல்வா கொடுக்கிறார் திஷா!
வட இந்திய நடிகை திஷா பாண்டே படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்து வருவதால் ரூ.
20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில், மயங்கினேன் தயங்கினேன்
படத் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்தவர் திஷா பாண்டே. தற்போது மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் பெரும்பகுதியை முடித்து விட்டனராம். ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி உள்ளதாம். இந்த நிலையில் திஷா பாண்டே டேக்கா கொடுத்து வருகிறாராம். அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக் கூட்டியுள்ளார் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன்.
தனது புகாரில், மயங்கினேன் தயங்கினேன் படத்தில் ஒரு பாடல் காட்சி தவிர மற்ற அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்தது. படத்தில் ஒரு முக்கியமான இடத்தில், கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே என்று தொடங்கும் பாடல் காட்சி இடம்பெற இருந்தது. இந்த பாடலை, யுகபாரதி எழுதினார்.
இந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக, மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திஷா பாண்டே மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை.
அவருக்கு போன் செய்து கேட்டபோது, மலேசியாவில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் இருப்பதாகவும் நாட்களை கடத்தி வந்தார். கடைசியாக கேட்டபோது, நான் பழைய மானேஜரை மாற்றி விட்டேன். புது மானேஜர் சொன்னால்தான் மும்பையில் இருந்து சென்னை வருவேன் என்று கூறிவிட்டார்.
அந்த புது மானேஜரை தொடர்புகொண்டபோது, அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கடைசி வரை திஷா பாண்டே வராததால், திட்டமிட்டபடி பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜேஸ்வரி.
விரைவில் பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிகாரர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திஷா பாண்டேவால் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.
24 மார்ச் 2012
தடையை விலக்கினார் ஸ்ரேயா!
ஸ்ரேயா தான் நடித்த மலையாளப் படமான போக்கிரி ராஜா படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவதற்கு தடை செய்யக் கோரி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
மம்முட்டி, ப்ருத்விராஜ், ஸ்ரேயா நடித்த இப்படத்தை தமிழில் டப் செய்து ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் வெளியிட அதன் தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் திட்டமிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரேயா, நடிகர் சங்கத்திலும், ஸ்ரேயாவின் நடவடிக்கையைக் கண்டித்து மலேசியா பாண்டியன் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையிலும், இருவரும் பேசி சமாதானமாகியுள்ளனர். இந்த படத்தை தடை செய்வதால் தனக்கு ஏற்படும் நஷ்டத்தை பாண்டியன் ஸ்ரேயாவிற்கு எடுத்துக் கூறியதை அடுத்து நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து ஸ்ரேயா-பிருத்விராஜ் நடித்துள்ள இப்படம் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.
கோபப்படாத அசின்!
டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்திக்கு வந்ததால் எனக்கு எந்த கோபமும் இல்லை
என்றார் அசின்.இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "தமிழிலிருந்து என்னைப் போலவே நிறைய நடிகைகள் இந்திக்கு வருவதாகவும், இதனால் நான் கோபமடைந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையில்லை.
யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. திறமையான நடிப்பைக் காட்டினால் யாரும் எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்," என்று கூறியுள்ளார்.
'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை," என்றார்.
தமிழில் யாரும் அணுகவில்லையா என்ற கேள்விக்கு, "அதற்கென்ன, நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் இன்னும் பாலிவுட்டில் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. அங்கு செட்டிலான பிறகு தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.
16 மார்ச் 2012
மீண்டும் வனிதா!
கடந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை
சர்ச்சைகளை பொதுவில் வைத்து பெரும் பரபரப்பு கிளப்பிய வனிதா விஜயகுமார் இப்போது
மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
மாணிக்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகாவில் நடித்தார்.
ஆனால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனதால், டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார்.
பின்னர் விவாகரத்து பெற்ற வனிதா, ராஜன் என்பவரை திருமணம் செய்தார். முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை தருமாறு கோரி நீதிமன்றம் போனார் வனிதா. ஆனாலும் குழந்தயை தன்னிடம் கொடுக்க ஆகாஷும், தன் தந்தை விஜயகுமாரும் மறுப்பதாகக் கூறி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என போய் பரபரப்பு கிளப்பினார் வனிதா.
ஆனாலும் குழந்தைப் பிரச்சினை தீரவில்லை. வனிதாவின் மூத்த மகன் விஜயஸ்ரீஹரி வர மறுத்துவிட்டான். எனவே இரண்டாம் கணவரைப் பிரிந்த வனிதா, தற்போது குழந்தைக்காக மீண்டும் முதல் கணவருடனேயே சேர்ந்துள்ளார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சினிமாவில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.
மீண்டும் நடிப்பது குறித்து வனிதா கூறுகையில், "குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாலும் சொந்த பிரச்சினைகளாலும் 11 வருடங்களாக சினிமா பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மீண்டும் நல்ல வேடங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து சினிமாவுக்கு வருகிறேன். கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் புதுப் படம் குறித்து அறிவிப்பேன்.
ஆறு மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தேன். எந்த அறுவைச் சிகிச்சையும் செய்யவில்லை," என்றார்.
மாணிக்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகாவில் நடித்தார்.
ஆனால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனதால், டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார்.
பின்னர் விவாகரத்து பெற்ற வனிதா, ராஜன் என்பவரை திருமணம் செய்தார். முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை தருமாறு கோரி நீதிமன்றம் போனார் வனிதா. ஆனாலும் குழந்தயை தன்னிடம் கொடுக்க ஆகாஷும், தன் தந்தை விஜயகுமாரும் மறுப்பதாகக் கூறி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என போய் பரபரப்பு கிளப்பினார் வனிதா.
ஆனாலும் குழந்தைப் பிரச்சினை தீரவில்லை. வனிதாவின் மூத்த மகன் விஜயஸ்ரீஹரி வர மறுத்துவிட்டான். எனவே இரண்டாம் கணவரைப் பிரிந்த வனிதா, தற்போது குழந்தைக்காக மீண்டும் முதல் கணவருடனேயே சேர்ந்துள்ளார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சினிமாவில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.
மீண்டும் நடிப்பது குறித்து வனிதா கூறுகையில், "குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாலும் சொந்த பிரச்சினைகளாலும் 11 வருடங்களாக சினிமா பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மீண்டும் நல்ல வேடங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து சினிமாவுக்கு வருகிறேன். கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் புதுப் படம் குறித்து அறிவிப்பேன்.
ஆறு மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தேன். எந்த அறுவைச் சிகிச்சையும் செய்யவில்லை," என்றார்.
24 பிப்ரவரி 2012
சினிமா பின்னணி இல்லாத தீபிகா படுகோன்
ரேஸ் 2 படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் தீபிகா. சினிமாவில் எந்தப்
பின்னணியும் இல்லாத தன்னால் யாரையும் எதிர்த்துக் கொள்ள முடியாது என்பதால் சுமூகமாக
பிரச்சினையை முடித்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கோச்சடையானிலிருந்து விலகக் கூடும் என்று வரும் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' படத்தில் நடிப்பதற்காக நான் 'ரேஸ்-2' படத்திலிருந்து விலக வில்லை.
நான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் 'ரேஸ்-2' நடிக்க தேதிகள் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நடத்தாமல் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்தனர்.
நானும் வேறு சில படங்களுக்கு தேதி கொடுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ரஜினி சார் படமும் வந்ததால் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால் ‘ரேஸ்-2′ படத்தின் சார்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். இதற்கு நான் சங்கத்திற்கு நேரில் போய் விளக்கம் கூறிவிட்டேன். யோசித்துப் பார்த்தேன். எந்த பிரச்சினையும் வேண்டாம் என்பதால், மீண்டும் ரேஸ்-ல் நடிக்க சம்மதித்துவிட்டேன். எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்... வேறு வழியில்லை. அதற்காக 'கோச்சடையான்' படத்தில் நான் நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.
மேலும் கோச்சடையானிலிருந்து விலகக் கூடும் என்று வரும் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' படத்தில் நடிப்பதற்காக நான் 'ரேஸ்-2' படத்திலிருந்து விலக வில்லை.
நான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் 'ரேஸ்-2' நடிக்க தேதிகள் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நடத்தாமல் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்தனர்.
நானும் வேறு சில படங்களுக்கு தேதி கொடுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ரஜினி சார் படமும் வந்ததால் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால் ‘ரேஸ்-2′ படத்தின் சார்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். இதற்கு நான் சங்கத்திற்கு நேரில் போய் விளக்கம் கூறிவிட்டேன். யோசித்துப் பார்த்தேன். எந்த பிரச்சினையும் வேண்டாம் என்பதால், மீண்டும் ரேஸ்-ல் நடிக்க சம்மதித்துவிட்டேன். எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்... வேறு வழியில்லை. அதற்காக 'கோச்சடையான்' படத்தில் நான் நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.
21 பிப்ரவரி 2012
இரும்பு வீராங்கனை எஸ்.என்.லட்சுமி!
பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்,நேற்று முன்தினம்(19.02.2012) நள்ளிரவில் காலமானார்.
இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஜெமினி பட நிறுவனம் தயாரித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை எஸ்.என்.லட்சுமி. தொடர்ந்து எம்ஜிஆர் நடித்த பாக்தாத் திருடன், மாட்டுக்கார வேலன், விவசாயி, சங்கே முழங்கு, தாய்க்கு தலைமகன், இதய வீணை, சிவாஜி நடித்த பாபு, தேவன் மகன், ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன், மகாநதி மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
பாக்தாத் திருடன் படத்தில் படைத் தளபதி வேடத்தில் நடித்தவர் டூப் போடாமல் நிஜப் புலியுடன் சண்டையிட்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் இரும்பு வீராங்கனை என்ற பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 6 ஆயிரம் நாடகங்களுக்கு மேல் குறிப்பாக கலைவாணர் என்எஸ்கே நாடக மன்றத்திலும், கே.பாலச்சந்தர் நடத்திய நாடகத்திலும் நடித்து புகழ் பெற்ற எஸ்என் லட்சுமி, கார் ஓட்டுவதிலும் வல்லவராக இருந்தவர்.18 பிப்ரவரி 2012
ஹன்ஸிகாவை உரசிப்பார்த்த ரசிகர்கள்!
கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்ஸிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.
நேற்று கோவை நகருக்கு வந்திருந்தார் ஹன்ஸிகா. அப்போது அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர்.
இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர்.இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், "ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும்," என்றார்.ஏற்கெனவே சென்னையில் இதே அனுபவத்துக்குள்ளானார் ஹன்ஸிகா என்பது குறிப்பிடத்தக்கது.17 பிப்ரவரி 2012
பூஜா காந்தியும் புது வீடும்.
மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி எனக்கு ஒரு வீடும் வாங்கிக் கொடுக்கவில்லை என்று கன்னட நடிகை பூஜா காந்தி தெரிவி்ததுள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா காந்தி அண்மையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு மாவட்டம், மாவட்டமாகச் சென்று பொதுக் கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் குமாரண்ணா மூலம் தனக்கு புதிய வீடு கிடைத்துள்ளது என்று கூட்டந்தோறும் கூறி வந்தார். பூஜா கட்சித் தலைவர் குமாரசாமியை குமாரண்ணா என்று தான் அழைப்பார்.
அடடா, மறுபடியும் குமாரசாமிக்கு சிக்கல் வந்து விட்டதே என்று நினைத்த பத்திரிகைக்கார்கள் எங்கே அந்த வீடு என்று வலை வீசி லென்ஸ் கண்களோடு தேட ஆரம்பித்தனர். பாஜகவினருக்கும் கூட அந்தப் புது வீடு குறித்து 'ஆர்வம்' பிறந்தது. மக்களும் கூட மறுபடியுமா என்று குமாரசாமி குறித்த 'ரீவைண்ட்' சிந்தனைக்குப் போக ஆரம்பித்தனர்.
இந்த குழப்பமெல்லாம் பூஜா காதுக்கும் போனது. பதறிப் போன அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாகப்பட்டது என்னவென்றால்,
ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி எனக்கு புதிய வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியைப் பார்த்தேன். நான் வடநாட்டுப் பெண். எனக்கு அவ்வளவாக கன்னடம் வராது. ஜனதா தளம் என்னும் பெரிய குடும்பத்தில் இணைந்ததைத் தான் நான் அப்படி கூறினேன்.
அதாவது புது குடும்பம் கிடைத்திருக்கு என்பதற்குப் பதிலாக புது வீடு கிடைத்துள்ளது என்று பாஷை தெரியாமல் மாற்றிக் கூறிவிட்டேன். அதனாலேயே இத்தனை குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் தான் நான் எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறேன் என்றார்.
(அப்பாடா, குமாரசாமி தப்பித்தாரப்பா...!)14 பிப்ரவரி 2012
அனன்யாவை ஏமாற்றிய தொழிலதிபர்!
நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த திடீர் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடோடிகள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் இந்த திருமணம் தற்போது பெரும் பிரளயத்தை சந்தித்துள்ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவராம். தனது முதல் திருமணத்தை மறைத்து விட்டார். இதையடுத்து அனன்யாவின் குடும்பம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து தனது மகளை ஏமாற்றிய ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல் திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்தபோது தனக்கு ஏற்கனவே திருமணமானதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
திருமணம் செய்து கொண்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்றிருந்த அனன்யா மனமுடைந்து நொறுங்கிப் போயுள்ளாராம்.
10 பிப்ரவரி 2012
கோச்சடையானில் சினேகா இல்லை!
கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினியின் கோச்சடையான் படத்திலிருந்து நடிகை சினேகா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
அவர் மே மாதத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதம் அவருக்கும் பிரசன்னாவுடன் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே சினேகாவும் பிரசன்னாவும் மாறி மாறி இதனை பத்திரிகைப் பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
எனவே அந்த நேரத்தில் அவர் கோச்சடையானில் நடிக்க முடியாது என்பது தெரிந்து, அவருக்குப் பதில் ருக்மணியை ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ருக்மணி சிறந்த நடனக் கலைஞர். பாரதிராஜா இயக்கத்தில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முக்கிய கலை நிகழ்ச்சிகளில் இவரது நடனம்தான் இப்போதெல்லாம் ஹைலைட். கோச்சடையானுக்காக நேற்று நடந்த 'போட்டோ சூட்'டிலும் (புகைப்பட ஷூட்டிங்) கலந்து கொண்டார்.
ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கவிருந்து, திடீரென கடைசி நேரத்தில் அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
05 பிப்ரவரி 2012
வாடா செல்லம் நாயகி கைதானார்!
வாடா செல்லம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவரான நடிகை கரோலின் மரியத், புனேவில் விபச்சாரம் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலி்ல வைத்து அவரை கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர்.
22 வயதான கரோலின் மரியத், 2 தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளாராம். இதுதவிர சில நகைக் கடை, துணிக்கடை விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளாராம்.
இவருடன் ஒரு இரவை செலவிட ரூ. 3 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டுமாம். இதுகுறித்து மூத்த இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே கூறுகையில், வலை விரித்து இந்தப் பெண்ணை நாங்கள் பிடித்துள்ளோம். சென்னையில் இவர் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. சில படங்களில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளாராம்.
மரியத்துடன் அவரது மேலாளர் ராஜ்குமார் என்பவரும் சிக்கியுள்ளார். மரியத் மீது வி
மான் நகர் போலீஸில் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது என்றார்.வாடா செல்லம் என்ற தமிழ்ப் படத்தில் கரோலின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.
02 பிப்ரவரி 2012
இரசிகர்களால் கசங்கிய அமலா!
காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்குப் பதிப்பு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமலா பாலை ரசிகர்கள் கையைப் பிடித்து இழுத்து, இடுப்பைக் கிள்ளியதில் உடலில் நகக்கீறல்கள் ஏற்பட்டன.இந்தப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார் அமலா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. சென்னையில் கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அவ்விழாவுக்கு அமலாபால் வரவில்லை.
பட விழாவை திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. அன்றைய தினம் பரீட்சை இருப்பதாக அவர் பொய் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஹைதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார்.
தெலுங்கில் ஏற்கெனவே அறிமுகமானவர் அமலா. மேலும் அவரது தமிழ்ப் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலம்.
எனவே அமலா பாலை காணபடவிழா நடந்த அரங்கம் எதிரில் தெலுங்கு ரசிகர்கள் குவிந்தனர். விழா முடிந்து அமலாபால் வெளியே வந்த போது ஆட்டோ கிராப் வாங்குவது போல் சுற்றி வளைத்தனர்.
இதனால் கூட்டத்தில் அவர் சிக்கிக் கொண்டார். சிலர் அமலாபாலின் கையை பிடித்து இழுத்தனர். இடுப்பில் கை போட்டனர். இதனால் அவர் உடம்பில் நகக்கீறல்கள் பட்டு காயமும் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து சென்று ரசிகர்கள் பிடியில் இருந்து அமலாபாலை மீட்டு போலீஸ் வண்டியில் அனுப்பி வைத்தனர்!
30 ஜனவரி 2012
திரிஷாவா நானா?கோபப்பட்ட தமன்னா.
இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் தன் மார்க்கெட் அடியாகவில்லை என்று நடிகை தமன்னா கொதித்து விட்டாராம்.வாமனன் பட இயக்குனர் அகமது, ஜீவாவை வைத்து படம் ஒன்று எடுக்கிறார். இதில் ஜீவாவுக்கு 2 ஜோடிகள். முதல் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜீவா, த்ரிஷா முதல் முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.
இரண்டாவது நாயகியையும் பெரிய ஆளாகப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர் தனது மேனேஜரை தமன்னா வீட்டுக்கு அனுப்பியுள்ளர்.
மேனேஜரும் தமன்னாவை சந்தித்து கதை சொல்லியுள்ளார். கதையை கேட்ட அவர் த்ரிஷாவுக்கு பதிலாக நான் நடிக்க வேண்டுமா அல்லது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டுமா என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.
அதற்கு மேனேஜர் சேர்ந்து தான் ஆக்ட் கொடுக்கோணும் என்று சொல்லியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்து விட்டாராம் தமன்னா.
இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் எனது மார்க்கெட் அடியாகவில்லை. மேலும் எனக்கு அந்த நிலையும் வராது என்று போய் உங்கள் இயக்குனரிடம் கூறுங்கள் என்று விரட்டி விட்டாராம்.
அத்..சரி...!
26 ஜனவரி 2012
வசீகர அமலா!
தமிழ் திரை உலகின் அழகு நிலா அமலா பால். ஒல்லியான தேகம், வசீகரிக்கும் தோற்றம். இன்றைய இளைய தலைமுறை நடிகைகளிலேயே இளைஞர்கள் மட்டுமல்லாது கல்லூரி மாணவிகளிடமும் அதிக மதிப்பெண் பெற்று அழகு நிலாவாக திகழ்கிறார் அமலா பால். மைனாவில் பாவடை தாவணியில் ஆகட்டும், சமீபத்திய வேட்டையில் மாடர்ன் உடையில் கலக்கியது ஆகட்டும் அவரது உடலமைப்பிற்கு அனைத்துமே கச்சிதாமாக பொருந்தியது. அவரது உடல் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. அது குறித்து அவரே பகிர்ந்து கொண்டது.ஜங்க் புட் கூடாது:
பசிக்கிறது என்பதற்காக ஜங்க் புட் வகைகளை எந்த சூழ்நிலையிலும் தொடவே கூடாது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் இதுதான் என்னுடைய முதல் அட்வைஸ். குண்டான பெண்கள் கண்ட கண்ட ரசாயணங்கள் அடங்கிய மருந்துகளை உட்கொள்வதை விட ஆயுர்வேதா மருந்துகளை உட்கொள்ளவது அவசியம்.
நீச்சல் பயிற்சி:
மனதையும், உடலையும் லேசாக்குவது நீச்சல்தான். எத்தனை வேலை இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது நீந்துவது மிகவும் பிடித்தமானது.
நோ டென்சன், கூல்:
சில வருடங்களுக்கு முன்வரை சரியான டென்சன் பார்ட்டி நான். அது முகத்தில் பிரதிபலித்து சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இப்பொழுது இடியே விழுந்தாலும் டென்சன் பற்றி கவலைப்படாமல் கூலாக சுற்றிக்கொண்டிருப்பேன். அது அழகில் அப்படியே பிரதிபலிக்கிறது.
அழகும் ஆரோக்கியமும்:
எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எனவே எப்பவுமே மகிழ்ச்சியோட இருந்தா உடலும், மனசும் ஆரோக்கியமாகும். இதுவே என்னோட அழகு ரகசியம் என்று கூறிவிட்டு புன்னகை சிந்தினார் அமலாபால்.
24 ஜனவரி 2012
வருகிறார் நயன்!
பிரபு தேவாவுடன் இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் நடிகை நயன்தாரா.இத்தனை நாள் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்த அவர், இன்று புதிதாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் அவர் நாகார்ஜூனாவின் காதலியாக நடிக்கிறார். தசரத் இயக்கும் இந்தப் புதிய படம் முழுக்க முழுக்க காதல் கதையாகும். நாகார்ஜுனாவுடன் ஏற்கெனவே பாஸ் ஐ லவ்யூ படத்தில் நடித்துள்ளார் நயன்.
மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் நடிப்புக்கு தான் குட்பை சொல்லவில்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவி்த்துள்ளார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும் அவர் தயாராகி வருகிறார்.
21 ஜனவரி 2012
ரஜனிக்கு ஜோடி சோபனா!
சிவா, தளபதி படங்களில் ரஜினியின் ஜோடியாகி ரசிகர்களைக் கவர்ந்தவர், நடிகை ஷோபனா. தேசிய விருதுபெற்ற நடிகை. பின்னாளில் பரத நாட்டியமே போதும் என சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.இப்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ஷோபனா, கோச்சடையானில்.
இந்தப் படத்தில் ஏற்கெனவே பல முக்கிய நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த நிலையில் உள்ள கத்ரீனா கைஃப் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழ் நடிகை சினேகா ரஜினியின் தங்கையாக வருகிறார். ஆதியும், ப்ருத்விராஜும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மோகன்பாபுவின் மகளும், நடிகை-மற்றும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு ஒரு முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.
இந்த நட்சத்திரங்களுடன் புதிதாக இணைந்திருப்பவர் ஷோபனா.
படத்துக்கு ஏற்கெனவே ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் மேற்பார்வை செய்ய, சௌந்தர்யா இயக்கும் படம் இது!
18 ஜனவரி 2012
கொலை வெறி"கேட்கிறதாம் காங்கிரஸ்!
உத்தர பிரதேசத்தில் இடம்பெற இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின்போது புகழ்பெற்ற தனுஷின் 'கொல வெறி' பாடலை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த பாடலின் உரிமையைப் பெற நடிகர் தனுஷுடன் காங்கிரஸார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பாடல் உரிமையைக் கொடுக்க முதலில் தனுஷ் மறுத்ததாகவும் அதன் பிறகு ராஜ்பாபர் எம்.பி. அவரை சம்மதிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பில் தனுஷ் கருத்து தெரிவிக்கையில் 'பாடல் உரிமையை வாங்கும் முயற்சி நடப்பது பற்றி எனக்கு தெரியாது. அந்த பாடலின் உரிமை சோனி நிறுவனத்திடம் உள்ளது.
பாடல் தொடர்பில் அந்நிறுவனத்தாரிடம் பேசினார்களா என்றும் எனக்கு தெரியாது இருப்பினும் அது அரசியல் பாடல் அல்ல என தனுஷ் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
14 ஜனவரி 2012
நான் நடித்ததில் தவறில்லை!
கன்னட நடிகை ரிஷிகா நிர்வாணமாக போஸ் கொடுத்ததைக் கண்டித்து கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் வில்லி வேடத்தில் நடிக்கும் கன்னட படம் ‘யாராத்ரே நானாகெனு’. எஸ்.கே.பஷித் இயக்குகிறார்.
இதில் பிரபல நடிகை நிஷா கோதாரி (ஜேஜே படத்தில் நடித்த அமோகா) போலீசாக நடிக்கிறார். ரிஷிகா சிங்தான் இந்தப் படத்தின் ஹீரோயின். இப்படத்தின் தொடக்க விழா பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு கன்னட பத்திரிகைகளில் நேற்று விளம்பரங்களும் வெளியாயின. அதில் ரிஷிகா சிங் ஆடை எதுவும் இல்லாமல் உடல் முழுவதும் பெயின்ட் அடித்துக்கொண்டு நிர்வாண போஸ் கொடுப்பதுபோன்ற போட்டோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆபாச போஸ் கொடுத்ததற்காக ரிஷிகாவுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தன. பட விழா நடந்த ஸ்டுடியோ முன்பு எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால் இதற்காக ரிஷிகா கவலைப்படவில்லை. அவர் கூறுகையில், "நான் போஸ் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. படத்துக்கு இக்காட்சி தேவைப்பட்டதால் போஸ் தந்தேன். பரபரப்புக்காக கொடுக்கவில்லை" என்றார். சமீபத்தில் தண்டுபால்யா என்ற படத்தில் பூஜாகாந்தி நிர்வாணமாக நடித்தற்கு கன்னட அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தான் அப்படி நடிக்கவில்லை என அவர் மறுத்திருந்தது நினைவிருக்கலாம்!
09 ஜனவரி 2012
சம்பளம் கேட்டு நிக்கோல் முறைப்பாடு.
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்த எனக்கு ரூ. 50,000 சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். அதை வசூலித்துத் தர வேண்டும் என்று அந்தப் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டதாக கூறப்பட்டவரான நடிகை நிக்கோல் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.ராஜ்கிருஷ்ணா என்பவர் இயக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். ஒரு நடிகையின் கதையாக இது தயாராகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இதில் 2வது நாயகியாக நடித்தவர் நிக்கோல்.
ஆனால் படத்தின் பாதியிலேயே இவர் ஒத்துழைப்பு தராமல் விலகிப் போய் விட்டதாகவும், இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ராஜ்கிருஷ்ணா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் நிக்கோல் நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், இப்படத்தில் நடித்த எனக்கு ரூ. 50,000 சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். அதை வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்தைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று தெரிகிறது.
07 ஜனவரி 2012
நட்பு மட்டும்தான்..வேறொன்றுமில்லை.
தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு காதல் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் பேசிக் கொள்வோம், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.தெலுங்கில் லீடர் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் டக்குபதி ராணா. இந்திப் படங்களிலும் நடிக்கிறார். தமிழில் 'வடசென்னை' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.
இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர். இப்போதும் யாராவது ஒருவருடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வருவது சகஜமாகிவிட்டது. பிபாஷா பாசு, ஸ்ரேயா, தமன்னா என நிறைய பேருடன் கிகிசுக்கப்பட்டுவிட்டார்.
இப்போது இந்த லிஸ்டில் வந்திருப்பவர் த்ரிஷா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடி விட்டு திரும்பியுள்ளனர். ராணாவை காதலிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் கூறுகையில், "சினிமாவில் அறிமுகமானதிலிருந்து என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்துவிட்டன.
முதலில் எனக்கு அது கஷ்டமாக இருந்தாலும் பிறகு ஈஸியாக எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அந்த நடிகருடன் சுற்றுகிறேன். இந்த நடிகருடன் சுற்றுகிறேன் என்றுதான் செய்திகள் வந்தன. இப்போது காதல், திருமணம் என்று வருகிறது.
ராணாவுடன் காதலா?
தெலுங்கு நடிகர் ராணாவை எனக்கு பத்து வருடமாக தெரியும். எனக்கு அவர் முக்கியமான நண்பர். அதனால் அவருடன் சேர்ந்து வெளியே போகிறேன். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கும் ராணாவுக்கும் காதல் என்று வதந்திகள் பரவியிருப்பது அடிப்படை இல்லாதது.
ராணா இனிமையானவர். விருந்துகளில் அதிகாலை மூன்று மணிவரை என்னுடன் இருக்கும் நண்பர் அவர். அவருடன் இருப்பது இனிமையாக இருக்கும். 10 வருஷமாக நாங்கள் பழகுகிறோம். இந்த மாதிரி எத்தனை நண்பர்களை பார்க்க முடியும்? ஒரு நண்பராக அவரை நான் 'லவ்' பண்றேன்!
சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. திருமணம் முடிவானதும் அதை பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக தெரிவிப்பேன். ரகசிய திருமணம் செய்து கொள்ளமாட்டேன்," என்றார்.
05 ஜனவரி 2012
நமீதாவும் காதலும்.
வக்கீல் ஒருவருடன் காதல் என பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்துள்ள செய்தி இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் நடிகை நமீதா. அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது நல்ல கதையுள்ள வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிஸியாக உள்ளார்.
நடிப்புத் தொழிலுடன் கூடவே, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால்பதித்துள்ளார். இதற்கென மும்பையில் பெரிய அலுவலகம் அமைத்துள்ளார். ஆம்பி வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ள நமீதா, பெரும்பாலும் தங்குவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில்தான்.
இந்த நிலையில் நமீதா தனது நண்பர் பரத் கபூரைப் பிரிந்து, வக்கீல் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து நமீதாவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
செய்தியைக் கேட்டு சிரித்த நமீதா, அடுத்து இப்படிச் சொன்னார்:
"சினிமாவில் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் இதுவாகத்தான் இருக்கும். என் அலுவலகத்தில் மூன்று வக்கீல்கள் இருக்கிறார்கள். மூவருக்கும் வயது 60க்கும் மேல்!
60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் சுற்ற வேண்டிய அவசியம் எனக்கு ஏன் வரப்போகுது... எழுதுவதற்கு முன் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்களா?
தயவு செய்து எங்கப்பா கிட்ட இந்த சமாச்சாரத்தை சொல்லிடாதீங்க. ஏன்னா எங்க ஆபீஸ்ல இருக்கிற மூன்று வக்கீல்களின் வேலையும் போயிடும். வயசானவங்க பாவம் சும்மா விடாது!" என்றார் மாறாத சிரிப்புடன்.
02 ஜனவரி 2012
முதல்வரின் நடன ஆசிரியை மரணம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரபல நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்டோருக்கு நடனம் கற்றுத் தந்த கே ஜே சரஸா இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72.சென்னை மந்தவெளியில் சரசாலயா என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வந்தார் சரஸா.
நடிக்க வரும் முன்பும், நடிகையான பின்பும் இவரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டாராம் இன்றைய முதல்வர் ஜெயலலிதா. பிரபல நடிகர் கமல்ஹாஸனுக்கும் ஆரம்ப நாட்களில் நடன ஆசிரியை சரஸாதான்.
இவர்களைத் தவிர, பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம், பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடிகை ஷோபனா, சொர்ணமால்யா போன்றவர்களும் நடனம் கற்றுக் கொண்டனர்.
இன்று காலை மலர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
சரஸா கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இந்த ராஜலட்சுமி முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.
29 டிசம்பர் 2011
விரலை நீட்டி சர்ச்சை ஏற்படுத்திய சோனம்!
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார் இந்தி நடிகை சோனம் கபூர்.அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இந்தியில் நாயகியாக வலம் வரும் சோனம், வெளிப்படையாக பேசக் கூடியவர். தைரியமாக பேசக் கூடியவர்.ஆனால் தற்போது அவர் நடுவிரலைக் காட்டி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ஆனாலும் சோனம் இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது என்று பாலிவுட்டில் பேச ஆரம்பித்துள்ளனர்.
பிளேயர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் சோனம் கபூர். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த சோனம் கபூர், பிரஸ் மீட் முடிந்து கிளம்பியபோது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார்.
நடுவிரலைக் காட்டியது குறித்து சோனத்திடம் கேட்டபோது, நடுவிரலைக் காட்டுவது என்பதில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மொழியாக அது உள்ளது. திரைப்படங்களுக்கு சென்சார் செய்வது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதைத்தான் நான் நடுவிரலைக் காட்டி வெளிப்படுத்தினேன். வேறு எந்தக் காரணமும் இதற்கு இல்லை.
இளைஞர்கள் இப்போது நடுவிரலை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வது சாதாரண விஷயம். ஒருவரது பேச்சு அல்லது செயல் பிடிக்காவிட்டால் நடுவிரலைக் கொள்வது சகஜமானதுதான்., இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினையாக்கக் கூடாது. அதுவும் கலை, திரைப்படங்களில் ஈடுபட்டிருப்போருக்கு இதெல்லாம் சாதாரணம். மேலும் இந்தியா பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குப் பெயர் போனது. அப்படிப்பட்ட நாட்டில் நான் நடுவிரலைக் காட்டியதை பெரிதாகப் பேசுவது வியப்பாக உள்ளது என்றார்.
27 டிசம்பர் 2011
மன்மோகனையும் பிடித்த கொலைவெறி!
ஊரே திட்டித் தீர்க்கிற அளவுக்கு விமர்சனங்களை கிளப்பியுள்ள தனுஷின் கொலவெறி பாட்டு, அவரை பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'.மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.
இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர். 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளும் 'நிதானத்தில்' தனுஷ் இல்லை. டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நகரம் நகரமாக மதுவிருந்துகளில் இந்தப் பாட்டை சக நடிகைகளுடன் பாடி ஆடி வருகிறார்.
இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.
ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார். அர்த்தமில்லாத தனது பாட்டுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்துக் கூறி வருகிறார்.
அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன. இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.
23 டிசம்பர் 2011
அமைதி வேண்டுகிறார் சிம்பு.
உலக அமைதிக்காக பாடல் ஒன்றை தமிழ் திரையுலக நாயகன் சிம்பு எழுதியுள்ளார். +தமிழ் திரையுலகில் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பல தளங்களில் வலம் வரும் சிம்பு, உலக அமைதிக்காக ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இது அன்புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem- ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.தனது ஃபேஸ்புக் இணையத்தில் அவர், சிலர் 2012-ல் உலகம் அழிந்துவிடும் என நம்புகிறார்கள். வாய்ப்புள்ளது. அன்புக்கு பஞ்சம் பெருகுவதால், உலகம் முடிவுக்கு வந்துவிடலாம்.
நாம் அன்பை பரிமாறிக்கொள்வதில் மொழி தடையாக இருக்கிறது. 96 மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு..
சீக்கிரம் வருகிறது.. உலகத்துக்கான Love Anthem ! என்று தெரிவித்துள்ளார்.
22 டிசம்பர் 2011
மது வெறியில் கொலவெறி பாடிய தனுஸ்.
தமன்னா பிறந்த நாள் விழாவில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற தனுஷ் குடித்துவிட்டு பூனம் பாஜ்வாவுடன் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வெளியாகியுள்ளது.தனுஷ் எழுதிப் பாடி பெரிய ஹிட்டாகியுள்ள பாட்டு ஒய் திஸ் கொல வெறிடி. இந்தப் பாடல் ஹிட்டான அளவுக்கு, இசை ரசிகர்களிடம் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், பார்ட்டிகளில் இந்தப் பாட்டுக்கு ஏக மவுசு.
சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் நடந்துள்ளது. இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு, கொலவெறி பாட்டைப் பாடுகிறார் தனுஷ்.
அவருடன் அந்தப் பாட்டுக்கு, ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும், இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போடுகிறார்கள்.
யுட்யூபிலும், பேஸ்புக்கிலும் இப்போது ஹாட்டான டாபிக் இந்த வீடியோதான்!
16 டிசம்பர் 2011
நோர்வேயில் பாலை.
ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ப் படமான ‘பாலை’, இந்தியாவுக்கு வெளியே உலகிலேயே முதல்முறையாக நார்வே நாட்டில் திரையிடப்படுகிறது.சங்க கால தமிழர்களின் வாழ்க்கை, போர்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பாலை. தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றின் கருமையையும் இந்தப் படம் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெளியானது.
பாலையை இப்போது சர்வதேச அரங்கில் கொண்டுபோகும் முயற்சி நடக்கிறது. முதல் முறையாக நார்வேயில் பாலை படத்தை வெளியிடுகிறார்கள். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஃபில்மென்ஸஸ் கினோ அரங்கில் இந்தப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
நார்வே தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் விஎம் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை நார்வேயில் வெளியிடுகிறது.
12 டிசம்பர் 2011
அசினை ரஜனி ஜோடியாக்கக் கூடாது.
மலையாள நடிகையான அசின், கோச்சடையான் படத்தில் நடிக்கக் கூடாது. மீறி நடிக்க வைத்தால் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மிரட்டியுள்ளது.ரஜினி நடிக்க கோச்சடையான் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குகிறார். இதில் ஜோடியாக நடிக்க யாரைப் போடலாம் என்று பெரிய டிஸ்கஷனே நடக்கிறதாம். சினேகாவைத் தங்கையாக நடிக்க வைக்கவுள்ளனர் என்று தகவல்கள் கூறின.
அதேசமயம், ஹீரோயினாக நடிக்க அசினை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அசினை நடிக்க வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் கண்ணன் கூறுகையில், நடிகை அசின், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை சென்று வந்தார். அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை தமிழ் சினிமாப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. ஆனால் நடிகர் சங்கம் குறுக்கிட்டுப் பஞ்சாயத்துப் பேசி அமைதியாக்கி விட்டது.
தற்போது முல்லைப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான அசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம். ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.
இதனால் அசினை கோச்சடையான் ஹீரோயினாக்க சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. ரஜினியின் தங்கையாக சினேகா நடிக்கவிருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்கா தயங்கியதைத் தொடர்நதே அசினை கோச்சடையான் குழு அணுகியதாக ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
10 டிசம்பர் 2011
ரஜனிக்கு ஜோடி அசின்?
கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான், மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்படும் 3 டி சினிமாவாகும். ரஜினி இதில் கோச்சடையான் என்ற பாண்டிய மன்னனாக வருகிறார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் 2012 வரை படுபிஸி என்பதால், கால்ஷீட் ஒதுக்க முடியாமல் திணறினார்.
இந்த நிலையில், இப்போது அசினுடன் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது. அசினுக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. இந்தியல் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார்.
எனவே அவர் ரஜினியுடன் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
06 டிசம்பர் 2011
ஆபத்தின்றி தப்பினார் பிரியாமணி!
கன்னடப் படப்பிடிப்புக்காக சென்றபோது காட்டுக்குள் நடந்த விபத்தில் சிக்கினார் பிரியாமணி ஆனால் அவர் காயமின்றி தப்பித்தார். படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.பருத்திவீரன் புகழ் பிரியாமணிக்கு இப்போது கன்னடப் படவுலகம்தான் கைகொடுத்து வருகிறது.
அங்கு ஓரளவு வாய்ப்புகள் வருவதால் பெரும்பாலும் பெங்களூரில்தான் வாசம் செய்கிறார். தமிழில் அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் கன்னடப் படம் ஒன்றின் படப்பிடிபு்புக்காக கர்நாடகத்தில் உள்ள முத்தாநதி காட்டுக்கு காரில் சென்றார். அவருடன் மேக்கப் கலைஞர்களும் இருந்தனர்.
படப்பிடிப்பு நடந்த இடத்தை நெருங்கிய போது கார் திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கியது.
அருகாமையிலிருந்து பொதுமக்கள் ஓடிச்சென்று காருக்குள் இருந்த பிரியாமணியையும் மற்றவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் பிரியாமணி காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தால் படப்பிடிப்பு சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக வந்து சேர்ந்தார் ப்ரியாமணி. படப்பிடிப்பு பின்னர் தொடர்ந்தது.
04 டிசம்பர் 2011
நடிகையால் வந்தது குழப்பம்!
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், இந்திய டி.வி.யின் பிக்பாஸ் டி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனார். இந்த நிலையில் அவர் இந்தியாவில் இருந்து வெளிவரும் எப்.எச்.எம். என்ற ஒரு பத்திரிகையின் டிசம்பர் மாத இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். அதில் தனது வலது கையின் தோள்பட்டை அருகே பாகிஸ்தானின் உளவுத்துறை முத்திரையான ஐ.எஸ்.ஐ. என்று பச்சைகுத்தியுள்ளார்.இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது.
அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.
வீணாமா லிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது, வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



