டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்திக்கு வந்ததால் எனக்கு எந்த கோபமும் இல்லை
என்றார் அசின்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "தமிழிலிருந்து என்னைப் போலவே நிறைய நடிகைகள் இந்திக்கு வருவதாகவும், இதனால் நான் கோபமடைந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையில்லை.
யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. திறமையான நடிப்பைக் காட்டினால் யாரும் எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்," என்று கூறியுள்ளார்.
'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை," என்றார்.
தமிழில் யாரும் அணுகவில்லையா என்ற கேள்விக்கு, "அதற்கென்ன, நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் இன்னும் பாலிவுட்டில் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. அங்கு செட்டிலான பிறகு தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக