ஸ்ரேயா தான் நடித்த மலையாளப் படமான போக்கிரி ராஜா படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவதற்கு தடை செய்யக் கோரி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
மம்முட்டி, ப்ருத்விராஜ், ஸ்ரேயா நடித்த இப்படத்தை தமிழில் டப் செய்து ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் வெளியிட அதன் தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் திட்டமிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரேயா, நடிகர் சங்கத்திலும், ஸ்ரேயாவின் நடவடிக்கையைக் கண்டித்து மலேசியா பாண்டியன் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையிலும், இருவரும் பேசி சமாதானமாகியுள்ளனர். இந்த படத்தை தடை செய்வதால் தனக்கு ஏற்படும் நஷ்டத்தை பாண்டியன் ஸ்ரேயாவிற்கு எடுத்துக் கூறியதை அடுத்து நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து ஸ்ரேயா-பிருத்விராஜ் நடித்துள்ள இப்படம் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக