பிரபல சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள், சென்னையில்
நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
ஜானகி அம்மாள் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் தகனம் பெசன்ட்நகரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
ஜானகி அம்மாள் உடலுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரணம் அடைந்த ஜானகி அம்மாளுக்கு, கோபி, முரளி, பிரகாஷ், அரிதாஸ் ஆகிய 4 மகன்களும், லதா, மது, சாந்தி ஆகிய 3 மகள்களும் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக