நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா.
முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடி விட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன், பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள்.
இந்த நிலையில் சகுணி படம் மூ்லம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புகளுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம்.
அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்து விட்டாராம்.அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம்.
முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை, அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் 'சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச்' சேர்ந்தவர்கள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக