பக்கங்கள்

30 மே 2012

மாற்றம் செய்ததால் விலகிய கார்த்திகா!

இயக்குநர் சுந்தர் சி இயக்க விஷால் நடிக்கும் எம்ஜிஆர் (மத கஜ ராஜா) படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை கார்த்திகா. இந்தப் படத்தின் கதையில் இயக்குநர் சுந்தர் சி செய்த மாறுதல் தனக்கு திருப்தியாக இல்லாததால் விலகுவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னிடம் இயக்குநர் சுந்தர் சொன்ன கதை ஒன்றாகவும், இப்போது அவர்கள் எடுக்கவிருப்பது வேறு கதை என்றும் தெரிய வந்தது. என்னை வெறும் கவர்ச்சிக்காக மட்டும்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். மேலும் முதலில் சொன்ன கதையில் விஷால் மூன்று வேடங்களில் நடிப்பார் என்றார்கள். இப்போது அதிலும் மாறுதல். இரண்டு ஹீரோயின்கள் வேறு. எனவே எனக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. இந்தப் படத்தில் நான் விலகினாலும், சுந்தர் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன்," என்றார். ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் விலகிக் கொண்டார் ஹன்சிகா. இப்போது சரத்குமார் மகள் வரலட்சுமி இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள். இன்னும் வராத லட்சுமியாகவே இருக்கும் வரலட்சுமிக்கு இந்தப் படமாவது அமையுமா.. பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக