![Nisha Aggarwal Nisha Aggarwal](http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2012/02/&file=nisha-aggarwal_132816439016.jpg)
காஜல் அகர்வாலுக்கே தற்போது தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லைதான். இருந்தாலும் அவரது தங்கச்சியான நிஷா அகர்வாலையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார். தமிழிலும், தெலுங்கிலுமாக தற்போது நடித்து வரும் காஜல், தங்கச்சிக்கும் அவ்வப்போது ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளிக் கொடுத்து ஊக்கமளித்து வருகிறார்.
இருப்பினும் கைவசம் ஓரிரு படங்களே நிஷா வசம் இருக்கிறதாம். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்துள்ளனர் அக்காவும், தங்கச்சியும். அப்போதுதான் நம்மைத் தேடி கதை சொல்ல வருவோருடன் அமர்ந்து 'டிஸ்கஸ் செய்து கதையை முடிவு செய்ய சரியான இடம்' இல்லை என்று அவர்களுக்குப் புரிந்ததாம்.
இதையடுத்து தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவை - ஸ்விம்மிங் பூல் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பங்களவாம் அது, வாடகை எவ்வளவு என்று தெரியவில்லை - வாடகைக்குப் பிடித்துள்ளாராம் நிஷா. இப்போது கதை சொல்ல வரும் இயக்குநர்களுக்கும், காசு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வசதியாக இந்த பங்களா அமைந்துள்ளதாம்.இங்கிருந்தபடிதான் இனி இயங்கப் போகிறாராம் நிஷா. எனவே இனிமேல் நிஷாவிடம் கதை சொல்ல விரும்புவோருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. பங்களாவுக்குப் போய் விட்டால் போதும் ஆற அமர கதை சொல்லி படத்திற்குப் 'புக்' செய்து விட்டு வர முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக