கன்னட டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க மறுத்து விட்ட கன்னட நடிகை நிகிதா துக்ரால்,
தற்போது தமிழில் எடுக்குப்படும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிக்க தயாராக
இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியில் வித்யா பாலனின் எடுப்பான கவர்ச்சியால் பெரும் வெற்றி பெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும். இப்படத்தை தற்போது தமிழிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளனர்.
தமிழில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. கன்னடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கவுள்ளார்.
முதலில் இந்த வேடத்தில் நடிக்க பூஜா காந்தி மற்றும் நிகிதாவை அணுகினர். ஆனால் இருவரும் நடிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து நிகிதா கூறுகையில், இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக இருக்குமானால் நிச்சயம் நான் ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் இது ஒரு விபச்சாரியின் கதையாக உள்ளது. இதில் நான் நடித்தால் அது சில்க்கையும், கன்னட மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும் என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் தயார் என்று திடீரென கூறியுள்ளார் நிகிதா. சில்க் ஸ்மிதா தமிழில்தான் பிரபலமானார். தமிழ் நடிகையாகவே இருந்தவர் அவர். எனவே தமிழில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நிகிதா.
ஆனால், கன்னடத்தில் படு கவர்ச்சியாக இப்படத்தை எடுக்கவிருப்பதால்தான் நிகிதா நடிக்க மறுத்து விட்டார் என்றும், தமிழில் அந்த அளவுக்கு கவர்ச்சி இருக்காது என்பதால்தான் தமிழில் நடிக்க விரும்புகிறார் என்றும் ஒரு டாக் உலவுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக