
பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்புகள் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுமுக இயக்குனரின் பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டார்களாம். கதையைக் கேட்ட அவர் எனக்கு ஸ்டோரி ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த படத்தில் நயனை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் துவங்குகிறது. இதில் நயன் தான் ஹீரோயினா என்பது விரைவில் தெரிய வரும்.
அடடா அத்தனை இயக்குனர்களும் நயன் திரும்ப நடிக்க வரமாட்டாரா என்று காத்திருந்தார்கள் போலும். நயன் ரிட்டர்ன் ஆனவுடனேயே அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகிறார்களே.
எதுவாக இருந்தால் என்ன, நயன் காட்டில் வாய்ப்பு மழை 'சோ'வென்று பெய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக