பக்கங்கள்

17 பிப்ரவரி 2012

பூஜா காந்தியும் புது வீடும்.

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி எனக்கு ஒரு வீடும் வாங்கிக் கொடுக்கவில்லை என்று கன்னட நடிகை பூஜா காந்தி தெரிவி்ததுள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா காந்தி அண்மையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு மாவட்டம், மாவட்டமாகச் சென்று பொதுக் கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் குமாரண்ணா மூலம் தனக்கு புதிய வீடு கிடைத்துள்ளது என்று கூட்டந்தோறும் கூறி வந்தார். பூஜா கட்சித் தலைவர் குமாரசாமியை குமாரண்ணா என்று தான் அழைப்பார்.
அடடா, மறுபடியும் குமாரசாமிக்கு சிக்கல் வந்து விட்டதே என்று நினைத்த பத்திரிகைக்கார்கள் எங்கே அந்த வீடு என்று வலை வீசி லென்ஸ் கண்களோடு தேட ஆரம்பித்தனர். பாஜகவினருக்கும் கூட அந்தப் புது வீடு குறித்து 'ஆர்வம்' பிறந்தது. மக்களும் கூட மறுபடியுமா என்று குமாரசாமி குறித்த 'ரீவைண்ட்' சிந்தனைக்குப் போக ஆரம்பித்தனர்.
இந்த குழப்பமெல்லாம் பூஜா காதுக்கும் போனது. பதறிப் போன அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாகப்பட்டது என்னவென்றால்,
ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி எனக்கு புதிய வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியைப் பார்த்தேன். நான் வடநாட்டுப் பெண். எனக்கு அவ்வளவாக கன்னடம் வராது. ஜனதா தளம் என்னும் பெரிய குடும்பத்தில் இணைந்ததைத் தான் நான் அப்படி கூறினேன்.
அதாவது புது குடும்பம் கிடைத்திருக்கு என்பதற்குப் பதிலாக புது வீடு கிடைத்துள்ளது என்று பாஷை தெரியாமல் மாற்றிக் கூறிவிட்டேன். அதனாலேயே இத்தனை குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் தான் நான் எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறேன் என்றார்.
(அப்பாடா, குமாரசாமி தப்பித்தாரப்பா...!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக