ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ப் படமான ‘பாலை’, இந்தியாவுக்கு வெளியே உலகிலேயே முதல்முறையாக நார்வே நாட்டில் திரையிடப்படுகிறது.
சங்க கால தமிழர்களின் வாழ்க்கை, போர்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பாலை. தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றின் கருமையையும் இந்தப் படம் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெளியானது.
பாலையை இப்போது சர்வதேச அரங்கில் கொண்டுபோகும் முயற்சி நடக்கிறது. முதல் முறையாக நார்வேயில் பாலை படத்தை வெளியிடுகிறார்கள். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஃபில்மென்ஸஸ் கினோ அரங்கில் இந்தப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
நார்வே தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் விஎம் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை நார்வேயில் வெளியிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக