நான் இப்போது கன்னித்தன்மை இல்லாத பெண். எனது கன்னித்தன்மையை 23 வயதிலேயே இழந்து விட்டேன். அதற்காக வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார் இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே.மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.கல்லூரிப் படிப்பை முடித்ததுமே நான் உறவில் ஈடுபட்டு விட்டேன். வேலையிலும் சேர்ந்தேன்.என்னுடன் உறவு வைத்துக் கொண்டவன் கல்லூரியில் எனக்கு சீனியர். ஆனால் வயதில் என்னை விட 3 மாதம் சிறியவன்.எப்போதுமே நான் மற்றவர்களிடம் அதிக பாசம் வைப்பேன். ஆனால் அவர்கள்தான் என்னை விட்டு சீக்கிரமே விலகிப் போய் விடுவார்கள். எனது இதயத்தை நேசித்தவர்களை விட நொறுக்கியவர்களே அதிகம்.ஆனால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகள்தான் என்னை பட்டை தீட்டியது. பக்குவப்படுத்தியது. நான் போல்ட் ஆக இருக்கவும் இதுவே காரணம் என்றார் நிகிதா.நிகிதா, பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தவர். அதன் மூலம் பிரபலமானவர்.நிகிதா இந்தக் காலத்து இளசுகள் குறித்துக் கூறுகையில், இப்பெல்லாம் பெண்கள் ரொம்ப வேகமாக இருக்கிறார்கள். 18 வயதிலேயே பலர் கன்னித்தன்மையை இழந்து விடுகிறார்கள். நான் தான் ரொம்ப லேட் என்று நினைக்கிறேன் என்றார் சிரித்தபடி.
29 மார்ச் 2014
06 மார்ச் 2014
ஷகீலாவாக நடிக்கும் அவசியம் இல்லை!
ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படம் ஹிட் ஆனது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ஷகிலா வாழ்க்கை படத்தில் நான் நடிப்பதாக கிசுகிசு வருகிறது. நிச்சயம் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவது எப்படி என்பது தெரியும். அதற்காக ஆபாசமாக நடித்து முன்னணி இடத்தைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என அவர் கோபமாக கூறியுள்ளார்.
06 பிப்ரவரி 2014
விஜயின் ஜோடிக்கு காலில் காயம்!
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.நடிகை பிரியங்கா சோப்ரா குண்டே இந்தி படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோருடன் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்து தெரிய வந்தது.காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்காவின் வலது காலில் பேன்டேஜ் இருந்தது. அவர் காயத்தை பொருட்படுத்தாமல் குண்டே விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.காலில் அடிபட்டிருந்தபோதிலும் அவர் அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடினார். அதுவும் ஹை ஹீல்ஸ் அணிந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.காயமடைந்த முழங்கால், காயமடைந்த மனம், ம்ம்ம்ம்ம்ம் என்று பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.காயம் ஏற்பட்டதால் ஓய்வு எடுக்காமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பிரியங்கா டெல்லி சென்றார். ஐஸ் பையை முழங்காலில் வைத்துக் கொண்டே டெல்லி செல்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.விஜய் தான் என் முதல் ஹீரோ. அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்று அண்மையில் ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். அதன்படி மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.விஜய்யும் சரி, பிரியங்காவும் சரி நன்றாக பாடுவார்கள். சிம்புதேவன் படத்தில் அவர்கள் சொந்தக் குரலில் டூயட் பாடி ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
13 ஜனவரி 2014
நடிகை அஞ்சலிதேவி காலமானார்!

பழம் பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை அஞ்சலிதேவி இன்று திங்கள் சென்னையில் காலமானார். அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு வயது 86.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம். நடன நாடகங்களில் புகழ் பெற்ற அஞ்சலிதேவி நாற்பதுகளில் முதலில் தெலுங்கிலும் பின்னர் தமிழ்த் திரைப் படங்களிலும் நடிக்கத் துவங்கினார். பி.யூ.சின்னப்பா, டி.ஆர்,மகாலிங்கம் போன்றவர்களுடன் தோன்றிய அஞ்சலிதேவிக்கு 1955-ல் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. சிவாஜி கணேசனுடன் ‘முதல் தேதி’, ‘நான் சொல்லும் ரகசியம்’ படங்களிலும், எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்‘, ‘மன்னாதி மன்னன்’ ஆகிய படங்களிலும் நடித்தார் அவர். ஆனால் தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார் அஞ்சலிதேவி. அவருடன் நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ குறிப்பிடத்தக்க ஒரு வெற்றிப்படமாகும். அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்திலும், நாகேஸ்வரராவுடன் ‘அனார்கலி‘யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அவரது கணவர் ஆதிநாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்து இன்னமும் இரசிகர்களை ஈர்க்கும் நகைச்சுவைப் படம் ‘அடுத்த வீட்டுப் பெண்’. தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது ‘லவகுசா’. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. அஞ்சலிதேவியின் மறைவுக்கு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
01 டிசம்பர் 2013
மிரட்டலால் தயாரிப்பாளர் ஓட்டம்!
![]() |
| மஞ்சு வாரியர் |
28 நவம்பர் 2013
ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை!
ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.
ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம்.
அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.
இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம்.
இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.20 நவம்பர் 2013
ரதியின் மகனும் கமலின் மகளும் காதல்!
14 நவம்பர் 2013
"அஞ்சலி உயிருக்கு ஆபத்து"உயர்நீதிமன்றத்தில் மனு!
உயிருக்கு ஆபத்து உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரி நடிகை அஞ்சலி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் போலீசார் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.அங்காடி தெரு, சேட்டை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவர், தனது சொத்துக்களை சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக புகார் கொடுத்தார். இதுபோல, இயக்குனர் களஞ்சியமும் அஞ்சலி மீது புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி
ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:முதலில் தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அஞ்சலி என நான் அழைக்கப்பட்டேன். சென்னைக்கு அடிக்கடி வந்து நடிக்க தொடங்கினேன். இதனால் சித்தி பாரதி தேவியை என்னுடன் எனது தாய் அனுப்பினார். வளசரவாக்கத்தில் வீடு எடுத்து சித்தியுடன் தங்கினேன்.கடந்த 2012ல் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கினேன். நான் அடிக்கடி சூட்டிங் செல்வதால் இந்த வீட்டை சித்தியும் அவரது கணவர் சூரியபாபுவும் பராமரித்து வந்தனர்.இயக்குனர் களஞ்சியம் அவரது படத்தில் என்னை அறிமுககப்படுத்த நினைத்தார். அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவரால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தில் புகுந்து எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று சித்தியிடம் கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து எனது வீட்டை அபகரித்துக்கொண்டார். மேலும் என்னை மிரட்டி வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் வீட்டு செலவுக்கு எனது சித்தியிடம் பூர்த்தி செய்யாத செக்கில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி பல லட்சத்தை எனக்கு தெரியாமல் எடுத்துள்ள னர். இதுதவிர தொடர்ந்து பணம் கேட்டு சொந்தரவு செய்கிறார்கள். எனது உயிருக்கு பயந்து ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். எனது 50 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து கொண்டனர். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்து, இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:முதலில் தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அஞ்சலி என நான் அழைக்கப்பட்டேன். சென்னைக்கு அடிக்கடி வந்து நடிக்க தொடங்கினேன். இதனால் சித்தி பாரதி தேவியை என்னுடன் எனது தாய் அனுப்பினார். வளசரவாக்கத்தில் வீடு எடுத்து சித்தியுடன் தங்கினேன்.கடந்த 2012ல் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கினேன். நான் அடிக்கடி சூட்டிங் செல்வதால் இந்த வீட்டை சித்தியும் அவரது கணவர் சூரியபாபுவும் பராமரித்து வந்தனர்.இயக்குனர் களஞ்சியம் அவரது படத்தில் என்னை அறிமுககப்படுத்த நினைத்தார். அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவரால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தில் புகுந்து எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று சித்தியிடம் கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து எனது வீட்டை அபகரித்துக்கொண்டார். மேலும் என்னை மிரட்டி வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் வீட்டு செலவுக்கு எனது சித்தியிடம் பூர்த்தி செய்யாத செக்கில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி பல லட்சத்தை எனக்கு தெரியாமல் எடுத்துள்ள னர். இதுதவிர தொடர்ந்து பணம் கேட்டு சொந்தரவு செய்கிறார்கள். எனது உயிருக்கு பயந்து ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். எனது 50 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து கொண்டனர். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்து, இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
11 நவம்பர் 2013
பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை மரணம்!
பிரபல நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர்கதைகளையும் அவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து ஸ்டைல் வாசகர்களிடையே மிகவும் பிரபலமானது.புஷ்பா தங்கதுரைக்கு 82 வயதாகிறது. இவர் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.உடல் நலப் பாதிப்பு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் புஷ்பா தங்கதுரை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.தனது விறுவிறுப்பான, சிலாகிப்பான எழுத்தின் மூலம் 2 தலைமுறை வாசகர்களை மகிழ்வித்தவர் புஷ்பா தங்கதுரை.புஷ்பா தங்கதுரையின் எழுத்து ஸ்டைல் பிரபலமானது. சீரியாஸாகவும் எழுதுவார். கலகலப்பான கதைகளையும் கொடுப்பார்.ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறு. நீ என் நிலா, நந்தா என் நிலா, திருவரங்கன் உலா, மதுரா விஜயம் ஆகியவை அவரது சிறந்த நாவல்களுக்கு சில எடுத்துக் காட்டுகள். காதல் அல்ல காதலி, சரிதா பிளஸ் சரிதா, சிகப்பு ரோஜா கதைகள், துள்ளுவது இளமை, தாய்ப்பூ தாமரைப்பூ ஆகியவை அவரது படைப்புகளில் சில.இவரது திருவரங்கன் உலா நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நூலை எழுதியதற்காக புஷ்பா தங்கதுரையை, ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளவரப்படுத்தினர்.புஷ்பாவின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமம் ஆகும். ஆரம்பத்தில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளர் ஆனார்.இவரது ஊதாப்பு கண்சிமிட்டுகிறது திரைப்படமாகவும் உருவானது. இவர் எழுதிய ஆண்டவன் இல்லா உலகம் எது,நல்ல மனம் வாழ்க ஆகிய திரைப்படப் பாடல்களும் பிரபலானவை.
08 நவம்பர் 2013
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்!
நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது அவரது உடல்நிலை.இன்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை; தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
27 அக்டோபர் 2013
நடிகைகளிடம் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி?
நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள். தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது. நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர். இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார். 'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார். அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே... "நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்.
19 அக்டோபர் 2013
இனி நடிக்கமாட்டாரம் திரிஷா!
தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷா, இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்து கொண்டு செட்டிலாகத் திட்டமிட்டுள்ளதாலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக 'ஆயிரத்தோராவது முறையாக' கொளுத்திப் போட்டுள்ளனர் கோடம்பாக்கத்தில். 30 வயதைத் தாண்டிவிட்ட த்ரிஷா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படம். கிட்டத்தட்ட இந்தப் படங்களின் ஷூட்டிங்குகள் முடியும் கட்டத்தில் உள்ளன. திரிஷாவுடன் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் இப்போது வெளிப்படையாகவே நெருக்கம் காட்ட ஆரம்பித்துளளனர். இருவரும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதால், த்ரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருவதாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற தயாரிப்பாளருக்கு, 'இனி படம் நடிக்கிறதா இல்ல' என்று கூறிவிட்டாராம் த்ரிஷா.
16 அக்டோபர் 2013
எனக்கு இதுவெல்லாம் செய்தார் அஷ்மித்-வீணா
![]() |
| வீணா&அஷ்மித் |
09 அக்டோபர் 2013
நஸ்ரியா பகிரங்க மன்னிப்பு!
உண்மை தெரியாமல் இயக்குநர் சற்குணம் மீது புகார் கொடுத்துவிட்டேன். நான் ஆட்சேபித்த காட்சி எதுவுமே நய்யாண்டி படத்தில் இல்லாததால் சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார் நஸ்ரியா. 'நய்யாண்டி' படத்தில் நஸ்ரியாவுக்கு பதிலாக பெண்ணை வைத்து அவரது தொப்புளை தனுஷ் தடவுவது மாதிரி காட்சி வைத்து விட்டதாக இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது நஸ்ரியா புகார் கூறி வந்தார். முதலில் நடிகர் சங்கத்திலும் பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் புகார் கூறி பரபரப்பு கிளப்பினார். எனக்கு காட்டாமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் நஸ்ரியா, அவரது அப்பா நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் 'நய்யாண்டி' படத்தை பார்த்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, டூப் யாரையும் சற்குணம் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானதாம். அந்த தொப்புள் காட்சி ட்ரைலரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம். இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டாராம். அவசரப்பட்டு சற்குணத்தை அவமானப்படுத்திய குற்றத்துக்காக தானே முன்வந்து பத்திரிகையாளர்கள் முன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவதாக நஸ்ரியா கூறியுள்ளாராம். நாளை மறுநாள் ரிலீசாகும் படத்துக்கு இதை விட ஹெவி பப்ளிசிட்டி வேறு கிடைக்குமா என்ன!!
23 செப்டம்பர் 2013
18 செப்டம்பர் 2013
அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு வாழ்க்கை?
நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் நடிகை அஞ்சலி திடீர் என்று தலைமறைவாகிவிட்டு பின்னர் அவராகவே வந்து காவல் நிலையத்தில் ஆஜரானார். அதன் பிறகு அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி நடிப்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லையாம். அஞ்சலி இந்நிலையில் அஞ்சலிக்கு திருமணமாகிவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அஞ்சலி மறுத்தார். இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தமிழ் இயக்குனர்கள் விரும்புகிறார்களாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.14 செப்டம்பர் 2013
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்!
இன்னும் இரு ஆண்டுகளில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். பருத்தி வீரன் மூலம் பரபரப்பானவர் ப்ரியாமணி. அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார். சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ப்ரியாமணி தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் எதுவும் திருப்தியாக அமையவில்லை என்றும் தெரிவித்த ப்ரியாமணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியசா
க சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் . ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.
க சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் . ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.
08 செப்டம்பர் 2013
நடிகை சிந்து தற்கொலை முயற்சி!
அங்காடித்தெரு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்த சிந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காமெடி, குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் நடிப்பவர் சிந்து. இவர் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். நேற்று அவர் அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் சிந்துவுக்கு நினைவு திரும்பியது.
விருகம்பாக்கம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சிந்து கடந்த ஓராண்டாக கணவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனது அப்பா வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.14 ஆகஸ்ட் 2013
என் பையன் தங்கமானவன்யா-ராஜேந்தர்
என் பையன் தங்கமானவன்யா... அவன் யாரை காதலிச்சாலும் ஏத்துக்குவேன்னுதான் சொன்னேனே தவிர ஹன்சிகாங்கிற பேரை நான் சொல்லவே இல்லை. இப்படிதான் நயன்தாரா கூடவும் என் பையனை இணைச்சி எழுதிட்டாங்க...
சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் டி.ஆர். புலம்பியதை கேட்டு அதிர்ந்தது கூட்டம். சிம்புவும், நயன்தாராவும் டைட்டா உதட்டை கடிச்சுகிட்ட போட்டோவை உலகமே பார்த்தது. அதுக்கப்புறமுமா இப்படியொரு பேசசு..? சிம்பு ஹன்சிகாவை இளவரசி என்று இணையத்தில் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். ஹன்சிகா ஒருபடி மேலே போய் இருவரும் பார்ட்டியில் கட்டிப் பிடித்து நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு தமிழகத்தின் காதில் புகை வர வைக்கிறார். டி.ஆர். பேப்பரே படிக்கிறதில்லையா. இல்லை தாடி வச்ச பச்சக் குழந்தையா...?
விசேஷத்துக்கு நாள் பார்க்கிறதை விட்டுட்டு இது என்ன பொய் புலம்பல் டி.ஆர். சார்...?
07 ஆகஸ்ட் 2013
பள்ளி தாளாளர் வீட்டில் இயக்குனர் சேரன் மகள்!
காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள சேரனின் மகள் தாமினி தந்தையுடன் செல்ல விருப்பமிலை என்று கூறியதையடுத்து இரண்டு வாரங்களுக்கு பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சேரன் மகள் தாமினி, சினிமா டான்சர் சந்துருவை காதலித்தார். மகளின் காதலை மறுத்தார் சேரன். இதனால் சந்துருவின் வீட்டுக்கு தாமினி சென்றுவிட்டார்.
பின்னர் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால், தாமினியை அரசு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமினியை, நீதிபதிகள் மேடைக்கு அழைத்து பேசினர். சந்துருவுடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஆனால் சேரனும், அவரது மனைவி செல்வராணியும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். எனவே ஒருநாள் மட்டும் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் பாதுகாப்பில் தாமினியை அனுமதித்து நீதிபதிகள் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.
நேற்று பிற்பகல் நீதிபதி வி.தனபாலனின் அறையில் விசாரணை நடத்தப்பட்டது.
சேரன், செல்வராணி, உறவினர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக வந்திருந்தனர். சந்துருவின் தாயார் ஈஸ்வரி, சகோதரிகள் மற்றும் உறவினர்கள், வக்கீல் ஏ.ரமேசின் உதவியுடன் நீதிபதி அறைக்கு முன்பு வந்தனர்.
சந்துருவின் தாயார் மற்றும் சகோதரிகள் தாங்கள் கடுமையாக மிரட்டப்படுவதாகவும், கோர்ட்டுக்கு வரும் வரை தொடர்ந்து மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
முதலில் தாமினியை நீதிபதிகள் அழைத்து பேசினர். சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது. அதன் பின்னர் மனுதாரர் ஈஸ்வரி அம்மாள் அழைக்கப்பட்டார். அவர் தெலுங்கு பேசுபவர், தமிழ் சரிவர தெரியாது என்பதால், மகள் பத்மாகவுரியை உடன் அழைத்து சென்றார். அவர்களிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது.
பின்னர் சேரன் தனியாக அழைக்கப்பட்டார். ஒரு மணி நேரம் அவர், நீதிபதிகளுடன் பேசினார். பின்னர் அனைத்து தரப்பினரின் வக்கீல்களையும் நீதிபதிகள் அழைத்து பேசினர். அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இரண்டு தரப்பினரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டோம். இப்படிப்பட்ட சூழ்நிலை வந்ததை ஒவ்வொருவரும் விவரித்தனர். தாமினியின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை இரண்டு தரப்பினரும் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன சில விஷயங்கள், இந்த வழக்கின் பிற்பகுதியில் விசாரிக்கப்படும்.
சமுதாயத்தில் பிரபலமானவர்கள் என்பதால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேறு யாரும் புகுந்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கூடாது.
இரண்டு தரப்பினரும் கொடுத்துள்ள கருத்துகளை பரிசீலித்தோம். இரண்டு தரப்பினர் வீட்டிலும் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையின்படி, தாமினி நல்ல பாதுகாப்புடன் கூடிய வீட்டில் தங்குவதுதான் சிறந்தது என்று கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ ஷெரைன் வேளாங்கண்ணி மேல் நிலைப்பள்ளியின் (தாமினி படித்த பள்ளி) தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பி.கே.கே.பிள்ளையின் வீட்டில் இரண்டு வாரங்களுக்கு தங்குவதற்கு உத்தரவிடப்படுகிறது. இதற்கு தாமினியும், மற்ற தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். 21-ந் தேதி கோர்ட்டில் தாமினி ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தாமினியை பி.கே.கே.பிள்ளை அழைத்துச் சென்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














