பக்கங்கள்

14 நவம்பர் 2013

"அஞ்சலி உயிருக்கு ஆபத்து"உயர்நீதிமன்றத்தில் மனு!

உயிருக்கு ஆபத்து உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரி நடிகை அஞ்சலி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் போலீசார் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.அங்காடி தெரு, சேட்டை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவர், தனது சொத்துக்களை சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக புகார் கொடுத்தார். இதுபோல, இயக்குனர் களஞ்சியமும் அஞ்சலி மீது புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி
ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:முதலில் தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அஞ்சலி என நான் அழைக்கப்பட்டேன். சென்னைக்கு அடிக்கடி வந்து நடிக்க தொடங்கினேன். இதனால் சித்தி பாரதி தேவியை என்னுடன் எனது தாய் அனுப்பினார். வளசரவாக்கத்தில் வீடு எடுத்து சித்தியுடன் தங்கினேன்.கடந்த 2012ல் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கினேன். நான் அடிக்கடி சூட்டிங் செல்வதால் இந்த வீட்டை சித்தியும் அவரது கணவர் சூரியபாபுவும் பராமரித்து வந்தனர்.இயக்குனர் களஞ்சியம் அவரது படத்தில் என்னை அறிமுககப்படுத்த நினைத்தார். அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவரால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தில் புகுந்து எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று சித்தியிடம் கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து எனது வீட்டை அபகரித்துக்கொண்டார். மேலும் என்னை மிரட்டி வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் வீட்டு செலவுக்கு எனது சித்தியிடம் பூர்த்தி செய்யாத செக்கில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி பல லட்சத்தை எனக்கு தெரியாமல் எடுத்துள்ள னர். இதுதவிர தொடர்ந்து பணம் கேட்டு சொந்தரவு செய்கிறார்கள். எனது உயிருக்கு பயந்து ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். எனது 50 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து கொண்டனர். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்து, இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக