பக்கங்கள்

08 நவம்பர் 2013

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்!

நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது அவரது உடல்நிலை.இன்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை; தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக