ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.
ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம்.
அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.
இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம்.
இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக