பக்கங்கள்

01 டிசம்பர் 2013

மிரட்டலால் தயாரிப்பாளர் ஓட்டம்!

மஞ்சு வாரியர்
மஞ்சுவாரியர் ஜோடியாக மம்மூட்டி நடிக்க மறுத்ததையடுத்து மஞ்சு நடிக்கும் படத்தை தயாரிக்கவில்லை என்று ஓட்டமெடுக்கிறார் கீது மோகன்தாஸ். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது மஞ்சுவின் கணவர் திலீப்தான் என கூறப்படுகிறது. மல்லுவுட் ஹீரோ திலீப்பின் மனைவி மஞ்சுவாரியர். இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க உள்ளார். ஆனால் இதை திலீப் ஏற்கவில்லை. திலீப்பும், மல்லுவுட் ஹீரோ மம்மூட்டியும் நெருங்கிய நண்பர்கள். மம்மூட்டி நடிக்கும் தெய்வத்தின்டே சுவாதம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு நடிப்பதாக இருந்தது. ஆனால் திலீப் கேட்டுக்கொண்டதையடுத்து மஞ்சுவுடன் ஜோடியாக நடிக்க மம்மூட்டி மறுத்துவிட்டார். தற்போது மோகன்லால் ஜோடியாக ரஞ்சித் இயக்கும் மேன் ஃப்ரை டே படத்தில் மஞ்சு நடிக்கிறார். இந்த படத்திலிருந்தும் மஞ்சுவை நீக்க திலீப் முயற்சித்து வருகிறாராம். இந்நிலையில் மஞ்சுவாரியர் நடிக்கும் புதிய படத்தை கமல் தயாரிப்பில் நள தமயந்தி, பாலசந்தரின் பொய் படங்களில் ஹீரோயினாக நடித்த கீது மோகன்தாஸ் தயாரிக்கிறார் என்று தகவல் பரவியது.இதையறிந்து ஷாக் ஆன கீது அவசர அவசரமாக அந்த தகவலை மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, சம்யுக்த வர்மா, மஞ்சுவாரியர் நடிக்கும் படத்தை நான் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த படத்தையும் நான் தயாரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். திலீப் விடுத்த மிரட்டல் காரணமாகவே கீது பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக