பிரபல நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர்கதைகளையும் அவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து ஸ்டைல் வாசகர்களிடையே மிகவும் பிரபலமானது.புஷ்பா தங்கதுரைக்கு 82 வயதாகிறது. இவர் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.உடல் நலப் பாதிப்பு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் புஷ்பா தங்கதுரை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.தனது விறுவிறுப்பான, சிலாகிப்பான எழுத்தின் மூலம் 2 தலைமுறை வாசகர்களை மகிழ்வித்தவர் புஷ்பா தங்கதுரை.புஷ்பா தங்கதுரையின் எழுத்து ஸ்டைல் பிரபலமானது. சீரியாஸாகவும் எழுதுவார். கலகலப்பான கதைகளையும் கொடுப்பார்.ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறு. நீ என் நிலா, நந்தா என் நிலா, திருவரங்கன் உலா, மதுரா விஜயம் ஆகியவை அவரது சிறந்த நாவல்களுக்கு சில எடுத்துக் காட்டுகள். காதல் அல்ல காதலி, சரிதா பிளஸ் சரிதா, சிகப்பு ரோஜா கதைகள், துள்ளுவது இளமை, தாய்ப்பூ தாமரைப்பூ ஆகியவை அவரது படைப்புகளில் சில.இவரது திருவரங்கன் உலா நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நூலை எழுதியதற்காக புஷ்பா தங்கதுரையை, ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளவரப்படுத்தினர்.புஷ்பாவின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமம் ஆகும். ஆரம்பத்தில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளர் ஆனார்.இவரது ஊதாப்பு கண்சிமிட்டுகிறது திரைப்படமாகவும் உருவானது. இவர் எழுதிய ஆண்டவன் இல்லா உலகம் எது,நல்ல மனம் வாழ்க ஆகிய திரைப்படப் பாடல்களும் பிரபலானவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக