பக்கங்கள்

09 அக்டோபர் 2013

நஸ்ரியா பகிரங்க மன்னிப்பு!

உண்மை தெரியாமல் இயக்குநர் சற்குணம் மீது புகார் கொடுத்துவிட்டேன். நான் ஆட்சேபித்த காட்சி எதுவுமே நய்யாண்டி படத்தில் இல்லாததால் சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார் நஸ்ரியா. 'நய்யாண்டி' படத்தில் நஸ்ரியாவுக்கு பதிலாக பெண்ணை வைத்து அவரது தொப்புளை தனுஷ் தடவுவது மாதிரி காட்சி வைத்து விட்டதாக இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது நஸ்ரியா புகார் கூறி வந்தார். முதலில் நடிகர் சங்கத்திலும் பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் புகார் கூறி பரபரப்பு கிளப்பினார். எனக்கு காட்டாமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் நஸ்ரியா, அவரது அப்பா நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் 'நய்யாண்டி' படத்தை பார்த்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, டூப் யாரையும் சற்குணம் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானதாம். அந்த தொப்புள் காட்சி ட்ரைலரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம். இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டாராம். அவசரப்பட்டு சற்குணத்தை அவமானப்படுத்திய குற்றத்துக்காக தானே முன்வந்து பத்திரிகையாளர்கள் முன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவதாக நஸ்ரியா கூறியுள்ளாராம். நாளை மறுநாள் ரிலீசாகும் படத்துக்கு இதை விட ஹெவி பப்ளிசிட்டி வேறு கிடைக்குமா என்ன!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக