|
வீணா&அஷ்மித் |
தனது முன்னாள் காதலர் அஷ்மித் படேல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனது உள்ளாடையைத் துவைத்துப் போட்டதாகவும், தான் கோபத்தில் செருப்புக் காலால் உதைத்தபோது அதைப் பொறுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார் வீணா மாலிக். வீணா மாலிக் வாயைத் திறந்தாலே ஏதாவது சர்ச்சையில்தான் முடிப்பார். அதேபோல இப்போதும் தனது முன்னாள் காதலர் குறித்து அவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது முன்னாள் காதலர் அஷ்மித் படேல், அதிகப் பிரியமாக இருந்ததாகவும், தனது உள்ளாடையைக் கூட அவர் துவைத்துப் போட்டார் என்றும் கூறியுள்ளார் வீணா. மேலும் தான் செருப்புக் காலால் உதைத்தபோது அதைக் கூட அவர் பொறுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து கவர்ச்சிகரமாக வந்து இறங்கியவர்தான் வீணா மாலிக்.பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில்தான் இவர் முதலில் புயல் கிளப்பினார்.பிக் பாஸ் ஷோவின்போது அதில் இவருடன் பங்கேற்ற அஷ்மித் படேலுடன் படு நெருக்கமாக பழகினார். முத்தம் கொடுத்தார், கட்டி அணைத்தார்,நிறைய ஏடாகூடங்களை இருவரும் அரங்கேற்றினர்.ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டனர். சரியாக பேசிக் கொள்வது கூட கிடையாதாம்.ஆனாலும், தனக்கும் அஷ்மித்துக்கும் இடையிலான அன்பு அப்படியேதான் இருப்பதாக கூறியுள்ளார் வீணா மாலிக். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. அது சரியாக இருந்தால் அன்பும் எப்போதும் இருக்கும்.அஷ்மித் மற்றவர்களைப் போலவே என் மீது அதிகம் பாசம் காட்டினார். எனது உள்ளாடையைக் கூட துவைத்துப் போட்டார். நான் கோபமாக இருக்கும்போதெல்லாம் அமைதி காத்தார். நான் எனது ஹைஹீல்ஸ் போட்ட காலால் அவரை உதைத்தபோது கூட அமைதி காத்தார்.அவர் ஜட்டியை நான் துவைத்ததை மட்டும்ஷோவில் காட்டினார்கள். உண்மையில் எனது உள்ளாடையை அவர் துவைத்தார்...எங்களுடையது எல்லாமே பரஸ்பரமாக இருந்தது என்று கூறியுள்ளார் வீணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக