பக்கங்கள்

14 செப்டம்பர் 2013

பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்!

இன்னும் இரு ஆண்டுகளில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். பருத்தி வீரன் மூலம் பரபரப்பானவர் ப்ரியாமணி. அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார். சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ப்ரியாமணி தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் எதுவும் திருப்தியாக அமையவில்லை என்றும் தெரிவித்த ப்ரியாமணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியசா
க சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் . ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக