பக்கங்கள்

08 செப்டம்பர் 2013

நடிகை சிந்து தற்கொலை முயற்சி!

அங்காடித்தெரு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்த சிந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காமெடி, குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் நடிப்பவர் சிந்து. இவர் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். நேற்று அவர் அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் சிந்துவுக்கு நினைவு திரும்பியது. விருகம்பாக்கம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சிந்து கடந்த ஓராண்டாக கணவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனது அப்பா வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக