பக்கங்கள்

18 செப்டம்பர் 2013

அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு வாழ்க்கை?

நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் நடிகை அஞ்சலி திடீர் என்று தலைமறைவாகிவிட்டு பின்னர் அவராகவே வந்து காவல் நிலையத்தில் ஆஜரானார். அதன் பிறகு அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி நடிப்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லையாம். அஞ்சலி இந்நிலையில் அஞ்சலிக்கு திருமணமாகிவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அஞ்சலி மறுத்தார். இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தமிழ் இயக்குனர்கள் விரும்புகிறார்களாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக