பக்கங்கள்

29 டிசம்பர் 2012

உல்லாசமாக இருக்க ரூ.5000 கேட்டார் புவனேஸ்வரி!

உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள். அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை. இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர். அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது. அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார். மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.

26 டிசம்பர் 2012

மறுக்காத ரியா சென்!

ரியா சென் 
நடிகை ரியாசென் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தில் நடித்தார். இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருக்கும். அஸ்மத் படேலும், ரியா சென்னும் நெருக்கமாக இருப்பது போன்ற செக்ஸ் படங்கள் இன்டர்நெட்டிலும் மொபைலிலும் ஏற்கனவே பரவின. மும்பையில் போதை விருந்தில் அரைகுறை உடையுடன் ஆண்களோடு ஆட்டம் போட்ட இளம் பெண்களை சமீபத்தில் போலீசார் பிடித்தனர். அதில் ரியாசென்னும் இருந்தார் என்று கூறப்பட்டது. இப்போது இளம்பெண் ஒருத்தியை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளன. இரவு விருந்தில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படம் மும்பை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் குறித்து ரியாசென்னிடம் கேட்டபோது அவர் மறுக்கவில்லை. மேலும், எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.

23 டிசம்பர் 2012

லக்ஷ்மி ராயின் மேலாடை கிழிந்தது!

புதுச்சேரியில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்த நடிகை லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்ததில் அவரது மேலாடை கிழிந்தது. பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், லஷ்மி ராய் நடித்து வரும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு டூயட் பாடலை புதுச்சேரியில் படமாக்கினர். ஷூடிட்ங் இடைவேளையில் லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது கூட்டம் கூடியதுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் லக்ஷமி ராயிடம் சில்மிஷம் செய்தனர். இதில் அவரது மேலாடை கிழிந்தது. நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த படக்குழுவினர் ஓடிவந்து லக்ஷ்மி ராயை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு லக்ஷ்மி ராய் அவரது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படப்பிடிப்பில் நடிகைகளிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்வது இது முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதுல குரு படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஞ்சலி, ச்தயன், மந்த்ரா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

15 டிசம்பர் 2012

அசின் மீது பைத்தியமாக உள்ள ரசிகர்!

தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை அசினுக்கு ஒரு தீவிர ரசிகர் உள்ளார். அந்த நபர் அசின் மீது பைத்தியமாகவே உள்ளார். மேலும் அசினையே மணக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காதல் பைத்தியம் முற்றவே அந்த நபர் பெங்களூரில் அசினுக்காக ஒரு பங்களாவை வாங்கிப் போட்டுள்ளார். மேலும் அசின் எப்பொழுது பெங்களூர் வந்தாலும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த தீவிர ரசிகர் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். தனது பிரிய நடிகைக்கு அந்த நபர் பூக்கள், சாக்லேட் மற்றும் பேஷன் ஐட்டங்களை அனுப்பி வைத்துள்ளார். அவர் அசின் மேல் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அசினோ பாலிவுட் மீதல்லவா பைத்தியமாக இருக்கிறார். எப்படியாவது அங்கு பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று போராடி வரும் அவர் இந்த ரசிகரின் அன்புக்கு அடங்குவாரா என்ன? இதற்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாதியாத்வாலாவின் மகன் சுபான் அசினுக்கு லாலிபப், சாக்லேட், கரடி பொம்மை மற்றும் ரோஜாப் பூக்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 டிசம்பர் 2012

இயக்குநர் கர்ணன் மரணம்!

Veteran Cinematographer Karnan Passes Away காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. அமரர் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கர்ணன். காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவு கௌபாய் படங்களை இயக்கியவர் கர்ணன். சண்டை, சாகசக் காட்சிகளைப் படமாக்குவதில் தனித் திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அமரர் எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம். அதேபோ மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்தின் போர்க்கள காட்சி, குதிரையேற்றக் காட்சிகள் இவர் படமாக்கியதுதான். எம்ஜிஆருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளரும் கூட. தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார்களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை எடுத்தாராம். அதேபோல தண்ணீருக்கடியில் படம் பிடிப்பதில் அந்தக் காலத்திலேயே அசத்தியவர் இவர். கர்ணன் தமிழக அரசின் 2003-ம் ஆண்டுக்கான 'ராஜா சாண்டோ வர்த்தக விருது' பெற்றவர். புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கர்ணன்தான். இன்று (13-12-12) அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. கர்ணனின் மனைவி பெயர் சகுந்தலா. இந்த தம்பதிகளுக்கு பாமா, தாரா என்று 2 மகள்கள். பொதுமக்கள் பார்வைக்காக 38, பெருமாள் கோவில் தெரு, சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை 14 ந் தேதி சேத்துப்பட்டு மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு - கர்ணன் மருமகன் சந்திரனை தொடர்பு கொள்ளவும். எண்: 9443385180

09 டிசம்பர் 2012

உன் சமையல் அறையில்!

நடிகை சினேகா பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உன் சமையல் அறையில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர், இயக்குனர் பிரகாஷ் ராஜ் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரகாஷ் ராஜ் இதற்கு முன்பு கன்னடத்தில் அபியும், நானும் மற்றும் தோணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா பிரகாஷ் ராஜ் நிச்சயம் நல்ல படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கையில் அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு இந்த படத்தில் கிடைத்துள்ள கதாபாத்திரத்தை நினைத்து சினேகா குஷியாக உள்ளார் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு சமையல் தெரியாத நான் தற்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். கடவுள் அருளால் எனது திருமண வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் சினேகா.

03 டிசம்பர் 2012

சிம்புவுடன் அப்படி எதுவுமில்லை"லேகா மறுப்பு!

Lekha Washingtonஹோட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் ஒன்றாக வெளியே வந்தார் லேகா வாஷிங்டன்... இதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா. லேகா வாஷிங்டன் அதிக அளவில் படங்களில் நடிப்பதில்லை. ரொம்ப செலக்ட் செய்தே நடிக்கிறார். விளம்பர படங்களில்தான் தற்போது அதிக அளவில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் விரைவில் அவர் சிம்புவுடன் ஒரு படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின. மேலும் லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறின. அதை விட பரபரப்பானது, லேகாவும் சிம்புவும் ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், அறைக்குள்ளிருந்து இருவரும் ஜோடியாக வெளியே வந்ததாகவும் வந்த கிசுகிசுதான். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது இயக்கத்தில் உருவாகும் குறும்படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக சமீபத்தில் ஒரு நியூஸ் வந்தது. அதேபோல நானும், சிம்புவும் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்ததாகவும் இன்னொரு செய்தி வெளியானது. இரண்டுமே பொய்யானது, தவறானது. நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஹோட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன். கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான் என்றார் லேகா.

30 நவம்பர் 2012

நண்பர்கள் கவனத்திற்கு!

கே.ஜெயக்குமார் என்பவர் இயக்கும் படம்தான் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தில் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். மனீஷாஜித் நாயகியாக நடிக்கிறார். அதேபோல இன்னொரு நாயகனாக வர்ஷன் என்பவரும் தலை காட்டுகிறார்.கம்பீரம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் சரத்குமாரின் மகளாக ஒரு குட்டிப் பாப்பா நடிப்பிலும், பேச்சிலும் வெளுத்துக் கட்டியிருப்பார். அந்த பேபி நடிகைதான் இந்த மனீஷாஜித். குமரியான பின்னர் முதல் முறையாக ஹீரோயின் அவதாரம் எடுக்கிறார்.இப்படத்தில் நாயகியாக நடிக்கும் மனீஷாஜித் நடிப்போடு, கவர்ச்சியையும் சரிவிகித சமானத்தில் கலந்து தரத் தயாராக இருக்கிறாராம். அதேசமயம் முழுமையான கவர்ச்சிக்கு இவர் உடன்பட மாட்டாராம்.ஏற்கனவே சரத்குமாரின் ஒரிஜினல் மகள் வரலட்சுமி சிம்புவுடன் ஜோடி போட்டு ஹீரோயினாகி விட்டார். அடுத்து விஷாலுடன் ஜோடி சேரப் போகிறார். இந்த நிலையில், தற்போது சரத்குமாரின் மகளாக நடித்த மனீஷாஜித்தும் ஹீரோயினாகி விட்டார்.இந்தப் படம் நண்பர்கள் பற்றிய கதையாம். அதனால் ஏற்படும் உணர்வுப் போராட்டத்தைத்தான் படத்தில் சொல்லியுள்ளார்களாம்.

11 நவம்பர் 2012

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியா ராய்?

இந்தியாவின் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் டிவி ரியாலிடி ஷோ என்ற இடத்தைப் பிடித்தது "பிக் பாஸ்” நிகழ்ச்சி. இப்போது இந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கவர்ச்சி கூட்டப்பட்டிருக்கிறது. பிரபல 'ஆபாச’ நட்சத்திரமான பிரியா ராய், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் என்று கூறப்படுகிறது. சென்ற வருடம் சல்மான் கான் கிளப்பிய சர்ச்சைகளுக்குப் பின்னர், இந்த நிகழ்ச்சியின் குடும்ப அங்கத்தினருக்கான ஆறாவது பாகத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், அதன் பிறகான டிஆர்பி ரேட்டிங்கில் இந்த பாகம் பெரும் வரவேற்பு பெறவில்லை. இதை அடுத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மிகவும் யோசித்து, பிரியா ராயைக் கொண்டு வர தீர்மானித்தனராம். அவர்களின் தகவல் படி, பிரியா ராய் இந்த நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராகத் தலைகாட்டுவாராம். பிரியா ராய், அவருடைய 2 வயதில், பெற்றோரால் கைவிடப்பட்டு பின்னர் அமெரிக்க தம்பதியால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.

07 நவம்பர் 2012

கவலையில்லாத சமீரா!

படங்களில் வாய்ப்பு குறைவதால் கவலை இல்லை என்றார் சமீரா ரெட்டி. ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: ராணா, நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். இந்த வாய்ப்பை ஏற்றது ஏன் என்கிறார்கள். குத்து பாடலுக்கு மட்டும் ஆட வேண்டுமென்றால் ஆடி இருக்க மாட்டேன். கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இது அமைந்திருக்கிறது. என்னுடன் வெங்கடேஷும் ஆட உள்ளார். இதுவொரு கவுரவ தோற்றம் என்பதால் ஏற்றேன். இந்தி படங்களில் கரீனா கபூர், கேத்ரினா, வித்யா பாலன் ஆகியோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். அதெல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. அவைகளில் தேசிய விருது இயக்குனர் பிரகாஷ் ஜா படத்தில் வந்த வாய்ப்பை மட்டும் ஏற்றேன். ‘டோலிவுட் படங்களில் ஹீரோயின்கள் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்களே?’ என்கிறார்கள். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படவுலகில் அப்படித்தான் இருக்கும். இதை மாற்றுவதற்காக நான் வரவில்லை. கிளாமர் வேடங்களை நான் தவிர்ப்பதில்லை. படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டதுபற்றி கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் பிடித்ததை மட்டுமே ஏற்கிறேன். விரைவில் குடும்பத்தினருடன் கிரிஸுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

29 அக்டோபர் 2012

அனுஷ்கா, கிரிஷ் உறவு டமால்..!

'யோகா டீச்சர்' அனுஷ்காவிற்கும் தெலுங்கு இயக்குநர் கிரிஷுக்கும் இடையிலான காதல் புட்டுக் கொண்டு விட்டதாம். இதற்குக் காரணம் நயனதாரா மற்றும் ஆர்யா என்று சூடான பேச்சு அடிபடுகிறது.இந்த கிரிஷ் வேறு யாருமல்ல வானம் படத்தை இயக்கியவர்தான். அதில் கிரிஷ் கேட்டுக் கொண்டதால்தான் விலைமாது கேரக்டரில் நடித்துக் கலக்கினார் அனுஷ்கா. இவர்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு கல்யாணப் பேச்சு வரை வந்து விட்டதாம். விரைவில் டும்டும்தான் என்றும் தெலுங்குத் திரையுலகில் பேசி வந்தனர்.இந்த நிலையில்தான் திடீரென இவர்களது உறவில் விரிசல் விழுந்து விட்டதாம். அனுஷ்கா இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் படங்களில் பிஸியாக இருக்கிறார். ஜார்ஜியாவில் இரண்டாம் உலகம் சூட்டிங் முடித்துவிட்டு காதலர் கிரிஷை ஆசையாய் பார்க்கபோன இடத்தில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். கிரிஷ் இப்போது ராணா, நயன்தாராவை வைத்து கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அனுஷ்காவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.கிரிஷ் திடீரென இப்படி பாராமுகம் காட்டுதவற்குக் காரணம் நயனதாரா என்கிறார்கள். கிரிஷுக்கும், நயனதாராவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம். இதனால்தான் அனுஷ்காவை கண்டுகொள்ளவில்லையாம் கிரிஷ்.அதேசமயம், ஜார்ஜியா போன இடத்தில் அனுஷ்காவுடன் ஆர்யா நெருக்கமாகி விட்டதால்தான் கிரிஷ் அப்செட்டாகி விட்டதாக இன்னொரு காரணத்தைக் கூறுகிறார்கள். இருவரும் சேர்ந்து ஜார்ஜியாவையே சுற்றித் தீர்த்து விட்டதாகவும் கிரிஷுக்கு அவரது நலம் விரும்பிகள் போட்டுக் கொடுத்து விட்டனராம்.அப்படியானால் இவர்களுக்கிடையே என்ன உறவுதான் உள்ளது என்று சிலர் மண்டையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றனர். அது குறித்துக் கேட்டால், ஆர்யா, அனுஷ்கா இடையே என்ன நட்போ அதேதான் கிரிஷ், நயனதாராவுக்கும் என்று ரொம்பத் தெளிவாக குழப்புகிறார்கள்.வில்லு படப்பிடிப்பு சமயத்தில்தான் பிரபுதேவாவுடன் நெருங்கினார், நெருக்கம், காட்டினார், காதலிலும் வீழ்த்தினார் நயனதாரா. தற்போது அது கிரிஷ் விவகாரத்திலும் நடந்து விடுமோ என்று நிறையப் பேர் எதிர்பார்க்கிறார்களாம்.

19 அக்டோபர் 2012

த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மரணம்!

Actress Trisha Father Krishnan Passes Away நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று காலமானார். ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்த அவருக்கு வயது 68. நடிகை த்ரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வசிக்கின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக இருந்த கிருஷ்ணன், மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாதுக்குப் போய்விட்டார். ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் த்ரிஷா. த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் எவ்வளவோ முறை அழைத்தும் கிருஷ்ணன் இவர்களோடு வசிக்கவில்லை. தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கூறி அவர் தனியே வசித்து வந்தாராம். தான் வேலை பார்க்கும் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலுக்கு த்ரிஷா வந்தால் கூட, அவரை தன் மகள் என்று காட்டிக் கொள்ள மாட்டாராம். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் ஹைதராபாதில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே ஹோட்டல் ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

18 அக்டோபர் 2012

எங்கிருந்தாலும் வாழ்க!

பாலிவுட் பிரபலங்களான, சயீப் அலி கானுக்கும், கரீனா கபூருக்கும், தடபுடலாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. புதுமணத் தம்பதி, தேனிலவுக்காக விரைவில் வெளிநாட்டுக்கு பறக்க தயாராகி வருகின்றனர். கரீனாவின் மாஜி காதலரும், ஜாப் வி மீட் நாயகனுமான, ஷாகித் கபூர் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என கேட்டபோது, கரீனாவும், சயீப்பும், பாலிவுட்டின் பொக்கிஷங்கள். பொருத்தமான ஜோடிகள் கூட. கரீனாவுக்கு என் வாழ்த்துக்கள் என, வாய் நிறைய வாழ்த்துகிறார். அதெல்லாம் சரி, உங்களுக்கு எப்போது திருமணம் என, கேட்டால்,திருமணம் பற்றி, இன்னும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால், மனதுக்கு பிடித்த பெண், கண்ணில் பட்டு, என் தலையைச் சுற்றி, பட்டாம் பூச்சிகள் பறந்தால், உடனடியாக திருமணம் தான் என, உற்சாகத்துடன் கூறுகிறார். இதேபோல் பிரபல நடிகையும், நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியுமான கஜோல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி பேசிய கஜோல், அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சைப் ஒரு சிறந்த மனிதர். இருவரும் நீண்டகாலம் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வாழ வாழ்த்துகிறேன், என்றார்.

14 அக்டோபர் 2012

குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம்!

Sameera Reddy Photo Shoot Stillகுத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. பிரகாஷ் ஜா உருவாக்கத்தில் தயாராகி வரும் சக்ரவியூக் என்ற இந்திப் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா. இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது என்று பெருமையான ஒன்றாக மாறியுள்ளது. அதில் ஆடும்போது தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது. எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு படத்தில் குத்துப் பாட்டு இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது வரவேற்புக்குரியது. மேலும் ஒரு படத்தை தள்ளிக் கொண்டு போகும் சக்தி குத்துப்பாட்டுகளுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி. ஹீரோயின் வரிசையில்தான் கெட்டியாக இல்லை சமீரா ரெட்டி, குத்துப் பாட்டிலாவது கொடி கட்டிப் பறக்கட்டும்....

12 அக்டோபர் 2012

தன்மானம் இருந்தால்....?

தன்மானம் இருந்தால் பதவியை விட்டு விலகுங்கள்! - எஸ்.ஏ.சி.-க்கு முக்தா சீனிவாசன் கோரிக்கை!!தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணியினர் பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது நிர்வாக திறமை சரியாக இல்லை என்று கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் முக்தா சீனிவாசன் தலைமையிலான எதிர் அணியினர். அதன் விவரம் வருமாறு... சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டடத்தில் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன் தலைமையில், பஞ்சு அருணாசலம், கேயார், ஜி.சேகர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். முக்தா சீனிவாசன் பேசும்போது, இந்த சங்கம் 1971-ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்த ஏழு பேரில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். 83வயதாகிவிட்டது. 40 படங்களுக்கு மேல் செய்துவிட்டேன். எத்தனையோ அனுபவம் இருந்தாலும் இப்படி ஒரு சங்கத்தில் இருப்பது மிக வருத்தமாக உள்ளது. எஸ்.ஏ.சி., மீது எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது. ஆனால் அவர் ஒரு சங்கத்துக்கு தலைவராக எந்த தகுதியும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த சங்கத்திற்கு ஏற்ற தகுதியும், திறமையும், பேச்சாற்றல், நிர்வாக திறமை, அனுசரித்து செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்றாவது இருக்கனும். இதில் எதுவுமே அவரிடம் கிடையாது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்ய வேண்டியது என்பது அவருக்கு சுத்தமாக தெரியவில்லை. அந்தகாலத்தில் சங்கம் ரொம்பவே பொறுப்புடன் செயல்பட்டது. காரணம் தலைவர்கள் அப்படி அமைந்தனர். வாசன், ரெட்டி போன்றவர்கள் தலைமை வகித்த இடம் இது. இவர் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. சங்கம் பக்கம் வருவதே இல்லை. பழைய உறுப்பினர்களை மதிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் போலீஸ்க்கு போகிறார். மொத்தத்தில் அவரது பணி சங்கத்திற்கு பூஜ்யம். இவர் இந்த இடத்தை பிடித்துக்கொண்டு செய்ய முடியாத விஷயங்களை அடுத்தவர்களுக்காவது அந்த வாய்ப்பை கொடுக்கலாம். அதுவும் செய்யமாட்டார். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கூட அனுப்புவது இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் என்னவென்று தெரிவது இல்லை. என்னால் இந்த சங்கத்தை விட்டு விலகி புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்க முடியும். அது நன்றாக இருக்காது. முடிவாக எஸ்.ஏ.சி.க்கு ஒன்று சொல்கிறேன். தன்மானம் இருந்தால் நீங்கள் இந்த பதவியை விட்டு விலகுங்கள், அடுத்தவர்களுக்கு வழிவிடுங்கள் என்றார். மேலும் எஸ்.ஏ.சி., அவரது மகன், அதாவது விஜய் அரசியலில் வரவேண்டும் என்பதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார். இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்கு வழக்கு சரியாக காட்டவில்லை, முறையாக பொதுக்குழு கூட்டவில்லை என்றும், வருகிற 28ம் தேதி பொதுக்குழு கூட்டி அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்யப‌ோவதாக கேயார், சேகர் உள்ளிட்டோர் கூறினர்.

08 அக்டோபர் 2012

மயங்கிவிழுந்த நடிகை!

Actress Divya Depression வீட்டில் கொடுமை தாங்காமல் வெளியேறிய தெலுங்கு நடிகை திவ்யா, ரயில் நிலையத்தில் உணவு தண்ணீரின்றி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தெலுங்கில் ஒக ரொமான்டிக் க்ரைம் கதா படத்தில் கவர்ச்சியாக நடித்தவர் திவ்யா. இந்தப் ப டம் அங்கே பெரிய வெற்றியைப் பெற்றது. சினிமாவில் ஜெயித்தாலும் வீட்டில் பல தொல்லைகளுக்கு ஆளாகிவந்தார் திவ்யா. அவர் சொத்துக்களை உறவினர்கள் அபகரித்துக் கொள்ள, சொந்த சித்தப்பாவே ஏகப்பட்ட கொடுமைகளை செய்து வந்தாராம். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல், வீட்டை விட்டே ஓடிவிட்டாராம் திவ்யா. அப்படி ஓடியவர், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கிறார். அங்கே சாப்பாடு தண்ணீர் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டவர், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். அவரைப் பின்னர் அடையாளம் தெரிந்து கொண்ட சிலர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனிருக்கும் திவ்யாவின் அம்மா, "இனி என் மகள் மனசு கெடாமல் பாத்துக்கறோம்...," என்று சொல்லி வருகிறாராம்.

05 அக்டோபர் 2012

சிவகார்த்திகேயன் ஜோடி நந்திதா!

Nandhitha In Sivakarthikeyan Movie நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார் அட்டகத்தி ஹீரோயின் நந்திதா. அட்டகத்தி படத்தின் நாயகிகளுள் பளிச்சென்று வெளியில் தெரிந்தவர் இந்த நந்திதாதான். பெங்களூரைச் சேர்ந்த இந்த இளம் நடிகை இப்போது தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த வேடத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. எதிர்நீச்சல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்குகிறார். கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். நந்திதாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பும் வந்துள்ளது. அது வெங்கட்பிரபுவின் உதவியாளர் இயக்கும் நளனும் நந்தினியும் பட ஹீரோயினாக அவர் நடிப்பதுதான்!

27 செப்டம்பர் 2012

கவர்ச்சிக் கடலில் குதித்த ராணி முகர்ஜி!

Rani Turns Too Sexy Aiyyaa பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு வாய்ப்பு குறைவதால் அவர் அய்யா படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று பேசப்படுகிறது. பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 34 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது. பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அய்யா படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா என்று பார்க்கிறாரோ என்னவோ. மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியுள்ளாராம். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான். ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியுள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவிட்டு இன்னொரு நடிகை தன் படத்தில் அதைவிட படுகவர்ச்சியாக ஆடுகிறார். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல?

18 செப்டம்பர் 2012

இனி ஓவியா கூட நடிக்கமாட்டேன்!

Vimal Decides Not Act With Oviya In Future
ஓவியா-விமல்
தொடர்ந்து நானும் ஓவியாவும் சேர்ந்து நடிக்கிறதால, ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. அதனால நான் ஓவியா கூட நடிக்க மாட்டேன், என்றார் நடிகர் விமல். எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. மற்றொரு நாயகியாக தீபாஷா நடிக்கிறார். இப்படத்தை ஆர்.ரவி லல்லின் இயக்குகிறார். இதில் ‘பஸ்ஸே பஸ்ஸே' என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் விமலிடம், தொடர்ந்து ஓவியாவுடனே நடிக்கிறீர்களே என கேள்வி எழுப்ப, உடனே சடாரென்று, "இனி நான் ஓவியா கூட நடிக்க மாட்டேன். இதே முடிவை அவங்களும் எடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்," என்றார். இதை கொஞ்சமும் எதிர்ப்பாராத ஓவியா, திடுக்கிட்டு விமலைப் பார்த்தார். பின்னர் நடிகை ஓவியா கூறுகையில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமலுடன் நடிக்கிறேன். இது அவருடன் நான் நடிக்கும் 3-வது படம். இதில் மாணவி கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து ‘மூடர் கூடம்' என்ற படத்தில் நடிக்க உள்ளேன். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். ‘கலகலப்பு' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை ரசிகர்கள் வரவேற்றார்கள். ‘கலகலப்பு' படத்தில் நடித்தபோது எனக்கும் அஞ்சலிக்கும் போட்டி ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்," என்றவர் கடைசிவரை விமல் பேசியதற்கு பதிலே சொல்லவில்லை!

16 செப்டம்பர் 2012

டூயட் பாட தூது!

தமன்னா
தமன்னாவை பார்த்து அவரது அழகில் மயங்கிய ரித்திக் ரோஷன் அவரை தன்னுடன் ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகை தமன்னாவுக்கு தமிழில் தான் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் ஆந்திராவில் அவருக்கு ஏக கிராக்கியாகத் தான் உள்ளது. அதிலும் சிரஞ்சீவி குடும்பத்தார் ஆதரவில் அவர் அமோகமாக இருக்கிறார். இந்நிலையில் இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் சேர்ந்து நடிக்கிறார். இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற தமன்னாவை பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பார்த்துள்ளார். தமன்னாவின் அழகில் மயங்கிவிட்டாராம். அதன் பிறகு வீட்டுக்கு சென்ற அவர் தமன்னாவுக்கு தூது அனுப்பியுள்ளார். அதாவது தன்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை வைத்துள்ளார். ரித்திக்குடன் நடிக்க நான், நீ என்று நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது அவரதே தனக்கு தூதுவிட்டதில் அம்மணிக்கு ஏக சந்தோஷமாம். உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது. சில நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகையில் தமன்னாவுக்கு வாய்ப்பு வீடு தேடி வருகிறது. இது தான் அதிர்ஷ்டம் என்பதோ...