பக்கங்கள்

30 செப்டம்பர் 2011

நடிப்பாரா ஸ்ரீதேவியின் மகள்?

“படத்துக்கு படம் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ படம் மூலமாக அறிமுகமாகிறார் நடிகர் பிரபு மகன் விக்ரம். மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்க பேச்சு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கியவர் ஸ்ரீதேவி. அவரது மகள் ஜான்வி தெலுங்கு படத்தில் ராம்சரண் தேஜா ஜோடியாக நடிப்பார் என்று தகவல் பரவியது.
இதைக்கேட்டு கோபம் அடைந்த ஸ்ரீதேவி, எந்த துறையில் ஈடுபடுவது என்பது பற்றி இன்னும் ஜான்வி முடிவு செய்யவில்லை. இப்போது படித்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு பிறகுதான் அவளிடம் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்றே கேட்பேன்” என்றார். மீடியாதான் என் மகள் நடிக்கிறாள் என்று கிளப்பிவிட்டிருக்கின்றன. நடிப்பாரா? இல்லையா? என்பதை சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
அப்படி நடிப்பதென்றால் அவரை பாலிவுட்டிலேயே என்னால் அறிமுகப்படுத்த முடியும். அதைவிட்டு ஏன் தெலுங்கு படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.
அம்மா ஒன்னு சொல்றாங்க; அப்பா ஒன்னு சொல்றாரு.. யாரு சொல்றதத்தான் நம்புறது…?

25 செப்டம்பர் 2011

சோனாவிற்கு மகளிர் அமைப்பு துணை!

மது விருந்தில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி. பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். சோனா சென்னை கமிஷனரை சந்தித்து வீடியோ ஆதாரம் ஒன்றையும் கொடுத்தார். இந்த வழக்கில் எஸ்.பி. பி. சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சோனாவுக்கு ஆதரவு தெரிவித்து எஸ். பி. பி. சரண் வீட்டுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத் தலைவி கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர் 2011

ஸ்ரேயா கோஷலும் நடிகையாகிறார்!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிப்பு சேவையை துவக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார்.
எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
ஏற்கனவே உள்ள ஒரு ஸ்ரேயா வழங்கும் 'நடிப்புச் சேவையில்' திளைத்து வரும் ரசிகர்களுக்கு கலை சேவையாற்ற இன்னோரு ஸ்ரேயா வருகிறார். 'டபுள் டிலைட்'தான். இனி நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா, முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்ற பழைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஸ்ரேயா கோஷலும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

18 செப்டம்பர் 2011

சேலை கட்ட இஷ்டமில்லை!

மைனா புகழ் அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அவரைப் புடவையில் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டுமே அது சாத்தியம். காரணம் அவருக்கு சேலை கட்டுவதில் இஷ்டம் இல்லையாம், அது கஷ்டமான வேலை என்கிறார்.
அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம். புடவை கட்ட நேரமாகும். அதனால் தான் விழாக்களுக்கு நான் புடவை கட்டி வருவதில்லை என்றார்.
யாராவது விழா ஏற்பாட்டாளர்கள் அம்மணியை புடவையில் வரச் சொன்னாலும் கூட ஸாரிங்க என்று 'சாரி' கட்ட மறுத்து விடுகிறாராம்.
தெய்வத் திருமகள் படத்தில் வண்ண வண்ண புடவைகளில் வந்து அசத்தினாரே, நிஜத்திலும் அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
என்ன பண்றது, கொசுவம் வைத்து சேலை கட்ட அமலாவுக்கு கஷ்டமா இருக்குதாமே...!

14 செப்டம்பர் 2011

ரஜனியிடம் அடிவாங்க ஆசை!

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.
அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"என்றார் அஜித்.

11 செப்டம்பர் 2011

த்ரிஷாவை கடுப்பாக்கிய லட்சுமி ராய்!

அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.
மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.

06 செப்டம்பர் 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்.

முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் தெலுங்குக்கும் போகும் அமலா பால் நடிகை அமலா பாலின் டோலிவுட் ஆசை நிறைவேறியுள்ளது. இதனால் அவர் படு குஷியாக உள்ளார்.
மலையாள நடிகையான அமலா பாலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது கோலிவுட் அதுவும் மைனா தான். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் அமலா. இந்நிலையில் டோலிவிட்டிலும் ஒரு ரவுண்ட் வர அவர் ஆசைப்பட்டார். அதற்காக நிறைய தெலுங்கு படங்களைப் பார்க்குமாறு தோழி அனுஷ்கா கூட அறிவுரை வழங்கியிருந்தார்.
அமலா தெலுங்கு படங்கள் பார்த்தாரோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவரது ஆசை நிறைவேறியுள்ளது. எப்படி என்கிறீர்களா? முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி.
அமலா பால் காட்டில் மழை தான். இந்த படம் ஹிட்டானால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே மைனா, தெய்வத்திருமகள் வெற்றியால் பூரித்துள்ள அமலாவுக்கு இந்த செய்தி மேலும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

05 செப்டம்பர் 2011

பிரபுதேவாவின் வெடி!

பிரபாகரன் எனும் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார்.
விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர்.
இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா.
இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.
இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது.
விஷால், சமீரா ரெட்டி இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டனர். அருமையாக வந்துள்ளது படம்," என்றார்.

02 செப்டம்பர் 2011

இதிலென்ன தப்பு?

கால் மேல் கால் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்தவள் என்பதால் அது எனக்கு பழகி விட்டது, என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எல்லோருக்கும் நல்ல பொண்ணாத்தான் இருக்கேன். மரியாதை தெரியாத பொண்ணுன்னு கூட சிலர் சொல்றாங்க. உதாரணத்துக்கு சில சினிமா ஃபங்ஷன்களில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன். அதுவும் நாகரிகமான ஆடையில்தான். ஆனால் அதைப் பெரிய பிரச்னையாக்கி விட்டார்கள். இந்தப் பொண்ணுக்கு "மேனர்ஸ் இல்லை; மேடையில் இருப்பவர்களை இன்சல்ட் செய்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்த பெண். அங்கு கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அதனால் அப்படியே பழகிவிட்டேன். இருந்தாலும் தமிழ் சினிமா ஃபங்ஷன்களில் அதற்குப் பிறகு அதைத் தவிர்த்துவிட்டேன். ஆண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் மேன்லினஸ்; பெண்கள் அப்படி அமர்ந்தால் தவறா? எங்கள் குடும்பம் படித்த குடும்பம். வீட்டில் பெரியவர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எனக்கு நல்ல பண்புகளைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.
காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியதால் தமிழில் பட வாய்ப்புகளை இழந்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஸ்ரேயா, வடிவேலு சார் படத்துல நான் ஆடிய அயிட்டம் ஸாங் நல்ல ரீச். ஸ்ரேயாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயம் அது. இப்போ மார்க்கெட் குறைஞ்சு போனதால் உடனே அந்தப் பாட்டை குறைசொல்ல வந்துட்டாங்க. எந்த விஷயமும் என்னை குறைத்து விட முடியாது, என்று கூறியுள்ளார்.

27 ஆகஸ்ட் 2011

பங்களா கட்டுகிறார் சமீரா.

மும்பையின் பெருமைக்குரிய கடற்கரையான ஜூஹுவில் சொந்த பங்களா கட்டுகிறார் நடிகை சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா. தெலுங்கு, இந்தியிலும் பிஸியாக உள்ளார். அவர் மும்பையின் புகழ்மிக்க ஜூஹு கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து சமீரா அளித்துள்ள பேட்டியில், மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூஹு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர். எனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம், என்று கூறியுள்ளார்.
தமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வரும் சமீரா, தனது இந்த நிலைக்குக் காரணம் இயக்குநர் கவுதம் மேனன் தான். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன், என்றும் கூறியிருக்கிறார்.

24 ஆகஸ்ட் 2011

கமலின் ஜோடி அனுஷ்கா.

கமல் இயக்கி, நடிக்க இருக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயின் யார் என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். "மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு கமல் நடிக்க இருக்கும் படம் "விஸ்வரூபம்". இப்படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். படத்தின் நாயகியாக முதலில் பாலிவுட்டின் இளம்நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தநிலையில், டைரக்டர் மாற்றம், விசா பிரச்சனை என்று தொடர்ந்து விஸ்வரூபம் படத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டையும் தாண்டி படம் ஆரம்பிக்காததால், இந்தியில் பல வாய்ப்புகள் பறிபோவதாக கூறி, விஸ்வரூபம் படத்தில் இருந்து விலகுவதாக சோனாக்ஷி அறிவித்தார். இதனால் கமலின் படம் மீண்டும் தொங்கலில் விழுந்தது.
இந்நிலையில் சோனாக்ஷிக்கு பதிலாக தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க கமல் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் கைகூடாததால், கடைசியாக தமிழ், தெலுங்கின் முன்னணி நாயகியான அனுஷ்காவை நாடினார். அவரும் உடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் விஸ்வரூபம் படத்திற்காக நாயகி பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்தமாதம் ஐரோப்பா மற்றும் கனடாவில் சூட்டிங் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.

19 ஆகஸ்ட் 2011

சின்னப்பொண்ணு தமன்னா!

நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.
நேற்று வேலூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார் நடிகை தமன்னா. தமன்னா வருவதை அறிந்த ரசிகர்கள் கடைக்கு முன் குவிந்துவிட்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்த தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.
கூட்டம் அதிகமாகவதை உணர்ந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது லேசான தடியடியும் நடத்தப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமன்னா கூறுகையில்,
நான் வேலூருக்கு வந்துள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.
தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் சின்ன பெண் தான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார்.
மெதுவா யோசிங்க, ஒன்னும் அவசரம் இல்லை...!

17 ஆகஸ்ட் 2011

ஐஸ்வர்யாவுடன் சண்டையில்லை.

ஐஸ்வர்யா தனுஷுடன் தனக்கு சண்டை எதுவும் இல்லை என்றும் சமாதானமாகவே பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தேடி வருகின்றனர் ஐஸ்வர்யாவும் தனுஷும்.
இதற்கிடையே, பெரிய படத்திலிருந்து அமலா நீக்கப்பட்டதால், அவரை ஒப்பந்தம் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழில் அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான். இன்னொன்று அறிமுகமான தமிழ் சினிமாவை விட, தெலுங்குப் படங்களில் நடிப்பதையே அவர் கவுரவமாகக் கருதுகிறார்.
சமீபத்தில் தனது முதல் தெலுங்குப் படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பேட்டி கொடுத்திருந்தார். மேலும் மேலும் அதிக தெலுங்குப் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். '3' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்," என்றார்.

14 ஆகஸ்ட் 2011

சினிமாவே வேண்டாம்!

தூத்துக்குடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா. தற்போது சினிமா சங்காத்தமே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம்.
தூத்துக்குடி படத்தில் பாவாடை, தாவணியில் அழகாய் வலம் வந்தவர் கார்த்திகா. அந்த படத்தில் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு அத்தனை பிரபலம். அதைத்தொடர்ந்து நாளைய பொழுதும் உன்னோடு, மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
கொஞ்ச நாளாக கார்த்திகாவை ஆளையே காணோமே என்று நினைத்து தேடிய போது தான் அவர் சினிமாவுக்குக் குட்பை சொல்லிய தகவல் கிடைத்தது. அம்மணி சினிமாவே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம். சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்ட அவர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டாராம். சினிமா சம்பந்தப்பட்ட யாருடனும் அவருக்கு பேச விருப்பமில்லையாம்.
ஏன் இந்த திடீர் முடிவு? அப்படி என்ன கசப்பான அனுபவத்தை சந்தித்தார் கார்த்திகா?

11 ஆகஸ்ட் 2011

அனுஷ்காவிற்கு போட்டி அனுஷ்கா!

பாலிவுட்டில் ஒரு அனுஷ்கா இருக்கிறார்.... அனுஷ்கா சர்மா... பிரபலமான நடிகையும் கூட. இப்போது அவருக்குப் போட்டியாகப் போகிறார் இங்கே டாப் இடத்தில் உள்ள அனுஷ்கா அதாவது அனுஷ்கா ஷெட்டி!
இன்றைய தேதிக்கு அனுஷ்காவுக்கு தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனாலும் அவர் இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இரண்டு பெரிய படநிறுவனங்கள் அவரிடம் கதை சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டனவாம்.
இதில் ஒரு படத்துக்கு தேதி கூட கொடுத்து விட்ட அனுஷ்கா, அட்வான்ஸ் மட்டும் இப்போது வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
தெற்கிலிருந்து அனுஷ்கா வருகிறார் என்றதுமே, கடுப்பாகிவிட்டாராம் பாலிவுட்டில் ஏற்கெனவே உள்ள அனுஷ்கா சர்மா. தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு, இங்கே ஒரு அனுஷ்கா இருக்கும்போது தெற்கிலிருந்து அவரை வேறு அழைத்து வருகிறீர்களே, சரியா என சிணுங்குகிறாராம்.
என்ன செய்வது... சினிமாவில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால்தானே சுவாரஸ்யம்!

07 ஆகஸ்ட் 2011

கல்யாணம் பற்றி முடிவு செய்யவில்லை.

என் கல்யாணம் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை; எனக்கு மாப்பிள்ளையாக பார்த்திருப்பதாக கூறப்படும் தொழில் அதிபர் என் நண்பர்தான், கணவர் இல்லை என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கல்யாணம் பற்றி அடுத்த வருடம்தான் சிந்திப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். 28 வயதாகும் நடிகை த்ரிஷாவுக்கு செப்டம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரது கணவர் சென்னையை சேர்ந்த தொழில் அதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினியராகவோ இருக்கலாம் என்று முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. பின்னர் சென்னையை சேர்ந்த இளம் தொழிலதிபர் அம்ருத்தைத்தான் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று கூறப்பட்டது. ஏனென்றால் அம்ருத்தும், த்ரிஷாவும் ஹோட்டல் பார்ட்டிகளுக்கு ஒன்றாக சென்று வந்ததால் அப்படி கூறப்பட்டது. இதற்கிடையில் மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக த்ரிஷாவுக்கும், அவரது தாய் உமாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இத்தனை குழப்பங்களுக்குப் பிறகு த்ரிஷா ஒரு அதிரடி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், எனக்கு திருமணம் என்று எத்தனை தடவைதான் செய்திகள் வருமோ தெரியவில்லை. அம்ருத் என் நண்பர்தான். கணவர் அல்ல. பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. என் திருமணம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். அப்போது பார்த்து கொள்ளலாம், என்று கூறியிருக்கிறார்.

03 ஆகஸ்ட் 2011

அனுயாவுக்கு முப்பது இலட்சம்!

ரூ.30 லட்சம் இருந்தா வாங்க; இல்லாட்டி என் வீட்டுப்பக்கமே வந்துடாதீங்க... என்று டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை விரட்டியடித்து வருகிறாராம் நடிகை அனுயா. "சிவா மனசுல சக்தி" மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. எப்படிப்பட்ட கவர்ச்சியான வேடத்திலும் நடிக்க தயங்காத அனுயா, அந்த படத்தை தொடர்ந்து "மதுரை சம்பவம்", "நகரம்" போன்ற படங்களில் நடித்தார். அனுயா படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.
இந்நிலையில்தான் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "நண்பன்" படத்தில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் பட வாய்ப்பு என்றதும் ஓ.கே., சொன்ன அனுயா படத்தில் விஜய்க்கு அக்கா கேரக்டர் என்றதும் சம்பளத்தை ரூ.30 லட்சம் வரை உயர்த்தி விட்டாராம். அக்கா வேட விஷயத்தை வெளியே கசிய விடக்கூடாது என்று படக்குழுவினருக்கு அன்புக்கட்டளை விதித்தாலும், விஷயம் கசிந்து, பல டைரக்டர்கள் அக்கா கேரக்டர்களோடு அனுயா வீட்டு வாசலுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களையெல்லாம் நோ சொல்லி திருப்பி அனுப்பி விட்டதோடு, ரூ.30 லட்சம் சம்பளம் என்றால் வாருங்கள்; இல்லாட்டி வேறு ஆளை பாருங்கள் என்று கூறி வருகிறாராம்.
அக்கா வேடம் பற்றி அனுயா அளித்துள்ள் பேட்டியில், விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?, என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது சரி!

01 ஆகஸ்ட் 2011

கோடிகளை வெறுத்த தீபிகா!

பாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்… எதற்காக தெரியுமா… அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.
ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்ததும் அவர்கள் மறுப்பு தெரிவித்து அது செய்தியாக வந்ததும் தெரிந்திருக்கும்.
இப்போது அப்படியொரு வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை தொழிலதிபர்ளிடமிருந்தல்ல… உலகப் புகழ்பெற்ற ப்ளேபோய் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபாய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக… அதாவது டாப்லெஸ்ஸாக போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.
ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.
பிளேபாய் வாய்ப்புக்காக ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பாலிவுட் நடிகைகளை.

28 ஜூலை 2011

கிருஷ்ணலீலைக்கு ஏங்கும் மேக்னா.

கிருஷ்ண லீலை படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க என்று அப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை மேக்னாராஜ் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார். டைரக்டர் ஸெல்வன் இயக்கத்தில் நடிகர் ஜீவன் - புதுமுக நடிகை மேக்னா ராஜ் நடித்திருக்கும் படம் கிருஷ்ண லீலை. படத்தை முடித்து இரண்டு ஆண்டுகளாகியும் ரிலீஸ் ஆகாததால் படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த படம் ரிலீஸ் ஆனால்தான் என் திரையுலக வாழ்க்கையே பிரகாசமாகும். கிருஷ்ண லீலை பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு ஐங்கரன் நிறுவனம்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய டைரக்டர் ஸெல்வன், படத்தை ரிலீஸ் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறவித்தார். பின்னர் திரையுலக பிரமுகர்கள் சிலரின் தலையீட்டால் அந்த முடிவை இப்போதைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகியான நடிகை மேக்னா ராஜ் அளித்துள்ள பேட்டியொன்றில், கிருஷ்ண லீலை படம் சிறப்பாக வந்துள்ளது. அப்படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர் நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பெல்லாம் அதில் இருக்கிறது. படம் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். எனக்கு அதுதான் முதல் படம், எனவே அது விரைவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குனருக்கும் அந்த படத்தை வைத்துதான் புதுப்பட வாய்ப்புகள் வரும். எனவே உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ், கிருஷ்ண லீலையைத் தொடர்ந்து சினேகன் ஜோடியாக நடித்துள்ள உயர்திரு 420 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அதனைத்தொடர்ந்து கள்ள சிரிப்பழகா, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களிலும் மேக்னா நடித்துக் கொண்டிருக்கிறார்.

21 ஜூலை 2011

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் அவசர சிகிச்சைப்பிரிவில்.

நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தேவகி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரவிச்சந்திரனுக்கு சிறு நீரகங்கள் பாதித்து இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர் இதையடுத்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரு தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. இதனால் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிசிச்சை அளிக்கின்றனர். செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அதே கண்கள்,இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின.
விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார்.
ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.