பக்கங்கள்

28 பிப்ரவரி 2011

சேவை செய்யும் ஜெனிலியா!

வேலாயுதம், உருமி, தெலுங்கு-இந்திப் படங்கள் என பிஸியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது தன்னால் முடிந்த சேவையையும் செய்கிறாராம் ஜெனிலியா.
தற்போது நைட் கிளப் பார் ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அபலை பெண்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளாராம் ஜெனிலியா.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், "ஆதரவற்ற பெண்களுக்கும், கஷ்டப்படுகிற பெண்களுக்கும் உதவி செய்கிற அமைப்பு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நைட் கிளப்பில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிவு செய்துள்ளேன். அங்கு வருபவர்களை வரவேற்பேன், கலந்துரையாடவும் செய்வேன். இது போன்ற சமூக சேவை பணிகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.
கொடுமைகள், கஷ்டங்களை எதிர்த்து போராடும் பலம் பெண்களிடம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவு கொடுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதனால்தான் என்னால் முடிந்த இந்த உதவியைச் செய்கிறேன்", என்றார்.

25 பிப்ரவரி 2011

தணிக்கைக்குழு கத்தரித்த வசனம்!

சிவசிவா’ படத்தில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதற்கு சென்சார் குழு ஆட்சேபம் தெரிவித்தது.
சிவாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாயகர்களாக குமரன் கார்த்திக், சிவாஷ் ஆகியோரும் நாயகிகளாக சுகானி, நட்சத்திராவும் நடித்துள்ளனர்.
இந்த படம் நேற்று தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தில் காஞ்சீபுரம் கோவில் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் காட்சிகள் இடம் பெற்றிருந்ததற்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே அந்த வசனங்களை நீக்கிவிட்டு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதுபற்றி இயக்குனர் சிவாஷ் கூறுகையில், “நாம் சாமி என்று கடவுளையும் கோவில் குருக்களையும்தான் ஒப்பிடுகிறோம். அந்த குருக்களே தப்பாக நடந்து கொள்ளும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவே குருக்களுக்கு வந்தால் சமுதாயம் எப்படி பாதிக்கப்படும் என்பதைத்தான் இந்தப் படத்தில் காட்சிபடுத்தியுள்ளோம்.
இப்படத்தில் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலைகள் பற்றி இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்து நீக்கிவிட்டனர். வேறு என்ன சொல்வது?” என்றார்.

24 பிப்ரவரி 2011

ஸ்ருதிக்கு சிபார்சு செய்த சித்தார்த்!

தெலுங்கு படத்தில் ஸ்ருதி அறிமுகமானதிலிருந்து வாய்ப்புகள் வந்தாலும், தனக்கு பொருத்தமான ரோலை எதிர்பார்த்தாராம்.
இதற்கிடையில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த 'பாய்ஸ்' சித்தார்த், ஸ்ருதி இருவரையும் இணைத்து கிசுகிசு பரவியது.
தெலுங்கில் அறிமுக டைரக்டர் வேணு ஸ்ரீ ராம் இயக்க உள்ள படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனனிடம் பேசியிருந்தார்களாம்.
சித்து படத்தின் டைரக்டர் மற்றும் புரொட்யூசரிடம் பேசி நித்யாவை கழட்டி விட்டாராம். படத்தில் ஸ்ருதியை இணைத்து கொள்ள ஏற்பாடும் செய்தாராம் சித்தார்த்.
இந்த கூத்தெல்லாம் நடப்பதற்கு முன்பு அம்ரிதா ராவை நாயகியாக நடிக்க வைக்கும் யோசனையில் இருந்தார்களாம்.
சில கருத்து வேறுபாடுகளால் அம்ரிதாவையும் கடைசியில் தூக்கி கடாசி விட்டார்களாம்.

23 பிப்ரவரி 2011

த்ரிஷா நடிக்கும் மொழிமாற்றுப் படம்.

மதுர் பண்டார்கர் இந்தியில் இயக்கிய ஃபேஷன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் இந்திப் பதிப்பில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இன்னொரு நாயகியாக கங்னா ரனவத் நடித்திருந்தார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை யுடிவி நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு நாயகியாக த்ரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னொரு நாயகி வேடத்தில் ப்ரியாமணி நடிக்கிறாராம்.
தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகிறது. முன்னணி இயக்குநர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்கிறார்கள்.
மாடல் உலக அழகிகளைப் பற்றிய படம் என்பதால், மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கிறார்கள்.
திருமணம், புதுப்படங்களில் நடிக்க மறுப்பு என்று த்ரிஷா பற்றி செய்திகள் வந்த நிலையில், இப்போது பெரிய பட வாய்ப்பை அவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

21 பிப்ரவரி 2011

ரஜனிகாந்த் ஜோடி சினேகா!

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள். நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலானாலும் ரஜினிக்கு மட்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை சினேகாவுக்கு. குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு காட்சியில் மட்டும் தோன்றினார். இப்போது ராணாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் இப்படத்தில் தீபிகா படுகோன் மட்டுமே ஹீரோயினாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் இரு நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அசின் நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் அசின் நடிக்க ரசிகர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே நிச்சயம் அசின் நடிக்கமாட்டார் என்கிறார்கள். இப்போது அந்த வேடத்துக்குதான் சினேகாவிடம் பேசியுள்ளனர் ராணா தரப்பிலிருந்து. ஏற்கெனவே ரஜினி மகள் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோ தயாரித்த கோவா படத்தில் நாயகியாக நடித்தவர் சினேகா. எனவேதான் மீண்டும் சினேகாவையே அணுகியுள்ளனராம்.

18 பிப்ரவரி 2011

த்ரிஷாவிற்கு முத்தம் கொடுத்த அஜித்!

முத்தக் காட்சி மட்டுமல்ல மத்தக் காட்சி எதிலும் ஆர்வம் காட்டாதவர் அ‌‌ஜீத். அவரையே மல்லுக்கட்டி முத்தம் கொடுக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
மங்காத்தாவில் அ‌‌ஜீத், த்‌ரிஷா காதல் எபிசோட் அவ்வளவு க்யூட்டாக வந்திருக்கிறது என ஆனந்தப்படுகிறார்கள். முத்தம் இல்லாத காதல் முந்தி‌ரி இல்லாத பாயாசம்தானே? அதனால் ஒரு முத்தக் காட்சி அவசியம் என அ‌‌ஜீத்தையும், த்‌ரிஷாவையும் முத்தமிட வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
முதலில் தயங்கினாலும் அ‌‌ஜீத் நன்றாகவே கொடுத்திருக்கிறாராம் முத்தம்.

17 பிப்ரவரி 2011

விக்ரம் நடிக்கும் பிதா!

இயக்குநர் விஜய் டைரக்ஷனில் விக்ரம் அடுத்து நடிக்கும் படத்துக்கு தெய்வமகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது இந்தப் படத்தின் தலைப்பு பிதா என மாற்றப்பட்டுள்ளது.
தெய்வமகன், சிவாஜி கணேசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம். இந்தப் பெயரில் மீண்டும் படமெடுக்க சிவாஜி பிலிம்ஸ் முடிவு செய்துள்ளதால், அந்த தலைப்பு விக்ரம் படத்துக்குக் கிடைக்கவில்லையாம்.
எனவே பிதா என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். இந்தப் படத்தில் அனுஷ்காவும் அமலா பாலும் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காதல் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் அடிப்படையில் உருவாகும் படம் இது. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

15 பிப்ரவரி 2011

ரஜனியுடன் நடிப்பதில் பெருமை என்கிறார் தீபிகா!

ரஜினியின் ராணா படத்தி்ல் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் எனது திரையுலக வாழ்க்கைக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது, என்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன்.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் இளைஞராக வரும் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா படுகோன் கூறுகையில், "ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது இத்தனை சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் நான் பிஸாயாக இருந்தேன். ஆனாலும், யாருக்கு நான் விசிறியாக இருந்தேனோ, அவருடன் ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்துக்கே முன்னுரிமை தந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, எனது கேரியருக்குப் பெருமையும் அங்கீகாரமும் ரஜினி சாருடன் நடிப்பதால் கிடைத்துள்ளது என நம்புகிறேன்", என்றார்.
ரஜினியின் மற்ற இரு ஹீரோயின்கள் குறித்து இன்னும் மவுனம் காக்கிறது ராணா தரப்பு.

13 பிப்ரவரி 2011

ஒன்றையே திரும்பத் திரும்ப எத்தனை நாளைக்கு!

ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லோருக்கும் மாறுதல் தேவைப்படும். அப்போது நான் முதலிடத்தை பிடிப்பேன், என்று ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான அழகுப்பெண் ரம்யா நம்பீசன், இளைஞன் படத்தின் அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நடித்திருந்தார். அவரது அழகுக்காகவே படங்கள் அணிவகுத்து நிற்கும் என்று பாமர ரசிகன் போட்ட கணக்கு பொய்த்துப் போகும் அளவுக்கு வாய்ப்புகள் வரவே இல்லை. இருந்தாலும் அம்மணிக்கு தன்னம்பிக்கை ரொம்பவே ஜாஸ்தி. இன்னமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் ரம்யாவிடம், தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்துக்கு உங்களால் உயர முடியுமா? என்று கேட்டால், நிதானத்துடன் பதில் சொல்கிறார்.
அனுஷ்கா, அசின், நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா மோத்வானி, தப்சி உள்ளிட்ட ஹீரோயின்ஸ் போலவேதான் நானும் கவர்ச்சியை காட்டுறேன். ஆனால் என் முறை இன்னும் வரவில்லை. அவ்வளவுதான். ஒரே கவர்ச்சியை எத்தனை நாட்கள்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லாருக்கும் ஒரு மாறுதல் தேவைப்படும். அப்போது நானும் அவர்களின் இடத்தை பிடிப்பேன். அதுவும் கொஞ்ச நாளைக்குதான். அப்புறம் நானும் ரசிகர்களுக்கு அலுத்துப் போவேன். எனக்கு பின்னால் வேறொரு நடிகை வருவார். இதுதானே சர்க்கிள் என்கிறார், மிகத்தெளிவாக! பொண்ணு பொழச்சிக்கும்!!

10 பிப்ரவரி 2011

காதல் வலையில் தமன்........?

ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.
தமிழில் முன்னணி இடத்தில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் தமன நடிகை, தமிழ் சினிமா வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஆரம்பத்தில் தகவல் கசிந்தது. அதனை மறுத்து வந்த நிலையில் அம்மணியின் பார்வை ஆந்திரதேசம் பக்கம் வீசியிருக்கிறது.
ஆந்திராவின் பிரபல நடிகரும், அரசியல் கட்சி ஆரம்பித்து, அதனை சமீபத்தில் ஆளும் மத்திய கட்சியுடன் இணைத்துக் கொண்டிருக்கும் சீவி நடிகரின் மகன்தான் தமனத்தின் வலையில் விழுந்தது.
இப்போது இரண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆந்திர பத்திரிகைகளின் கிசுகிசு பகுதி.

07 பிப்ரவரி 2011

திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்!

ஸ்ரேயா இன்றைக்கு வெறும் நடிகை மட்டுமல்ல, பல கல்வி மையங்களில் கவுரவ விரிவுரையாளர் ரேஞ்சுக்கு சினிமா பற்றி பாடங்கள் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் அகமதாபாத் ஐஐஎம்மில் கூட உரையாற்றினார். சென்னை ஐஐடியில் கூட பேசியிருக்கிறார்.
சினிமாவின் வெற்றி தோல்வி, மார்க்கெட்டிங் முறைகள் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார், நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில்,
"தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் என்ற ஆங்கில படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இது எனக்கு மூன்றாவது ஆங்கில படம். தமிழ், ஹாலிவுட் படங்களில் பெரிய வித்தியாசம் இல்லை.
இயக்குனர்கள், கதைகள் மற்றும் படங்களை எடுக்கும் முறைகள் போன்றவைகளே படத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன. வெற்றி-தோல்வி கடவுள் கையில் உள்ளது. சில நேரம் திறமையான நடிகர்கள் கூட பிரபலமாக முடியாமல் உள்ளனர்.
கலைஞர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். எவ்வளவு கஷ்டத்திலும் எழுந்து நிற்பேன் என்று நம்ப வேண்டும். வாரிசு நடிகர்களால் மட்டுமே நிலைக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இந்தியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் யாரும் வாரீசு நடிகர்கள் இல்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்", என்றார்.

04 பிப்ரவரி 2011

திரிஷாவிற்கு திருமணம்!

இந்த ஆண்டு இரு முன்னணி நடிகைகளின் திருமணத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். ஒன்று நயன்தாரா. அடுத்து? த்ரிஷா! ஆம்... த்ரிஷாவுக்கு போரடித்து விட்டதாம் சினிமா.
ரசிகர்களும் கிட்டத்தட்ட அதே மனநிலைக்கு வந்துவிட்டதை அவரும் உணர்ந்து விட்டதால், திருமணம் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம்.
இந்திப் படங்களில் பெரிதாகக் கலக்கலாம் என்ற ஆசையில் மும்பையில் ஃப்ளாட் எடுத்துக் கூட தங்கிப் பார்த்தார். ஆனால் நடித்த ஒரே படமும் தோல்வியடைந்து விட்டதால் வேறு வாய்ப்புகள் இல்லாத நிலை. சில பாலிவுட் உப்புமா கம்பெனிகள் தான் அவரைத் தேடி வந்தார்களாம். இனி மும்பை வேலைக்காகாது என்று உணர்ந்து ஃப்ளாட்டைக் காலி செய்து விட்டு சென்னைக்கு வந்தார்.
அப்போதே த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கி விட்டாராம். மாப்பிள்ளை சரியாக அமையும் பட்சத்தில் இந்த ஆண்டே திருமணம் என்கிறார்கள் த்ரிஷா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
இப்போதைக்கு தெலுங்கில் இரு படங்கள், தமிழில் அஜீத்துடன் மங்காத்தா என மூன்று படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. வேறு புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படங்கள் முடிந்ததும், திருமண அறிவிப்பை வெளியிடக் கூடும் என்கிறார்கள்.

31 ஜனவரி 2011

ரசிகர்கள் தொல்லையால் தேர்வு எழுதாமல் திரும்பிய செளந்தர்யா!

ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார்.
சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார்.
அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார்.
பின்னர் அவர் அந்த கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கல்லூரி முதல்வர் மறுத்தார். பிரபலங்களின் வாரிசுகளுக்கு தேர்வு எழுத ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சவுந்தர்யா அவரிடம் வாதாடினார்.
ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தியுடன் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

28 ஜனவரி 2011

சுருதியால் உள்ளுக்குள் நடுங்கும் முருகதாஸ்!

அகநக ஓ தீரடு என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்திருந்தவருக்கு அந்த நம்பிக்கையில் விழுந்திருக்கிறது சரியான இடி!
படம் முதல் வாரத்திலேயே மூட்டை கட்டப்பட்டுவிட்டதாம்.
இவர் அறிமுகமான முதல் இந்திப்படமும் இதே மாதிரிதான் அமைந்தது. இந்த தொடர் தோல்விகளால் ஸ்ருதி கவலைப்பட்டாரோ இல்லையோ? இவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஏழாம் அறிவு முருகதாசுக்கு சின்ன நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அப்பா கமல் போலவே சகல திறமைகளும் கொண்ட ஸ்ருதிக்கு நல்ல குரல் வளம், நாலு பேரை மயங்க வைக்கும் இசை என்று பல்வேறு கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே இப்போது வரும் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை அவர். ஏழாம் அறிவுக்கு பின்புதான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறாராம். இது முருகதாஸ் ஸ்கிரிப்டின் மீதிருக்கும் நம்பிக்கையாக கூட இருக்கலாம்.
இதற்கிடையில் தினமும் படப்பிடிப்புக்கு லேட்டாக வந்து கொண்டிருந்தவர் இப்போது டாண் என்று குறித்த நேரத்திற்கு வந்துவிடுகிறாராம். எலி உட்கார எலந்த பழம் விழுந்திருக்கும். இதற்கும் தெலுங்கு பட தோல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது?

24 ஜனவரி 2011

நீதுவால் எழுந்த ஆடைப்பிரச்சனை!

உள்ளாடை இல்லாமல் நிகழ்ச்சியில் நடிகை நீத்து சந்திரா பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடிகர் மாதவனுடன் யாவரும் நலம் படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை நீதுசந்திரா. மும்பையைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நீதுசந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட நீதுசந்திரா, மேடையில் கால் மேல் கால் போட்டு ஹாயாக அமர்ந்திருந்தார். அப்போது அவர் உள்ளாடை அணியாமல் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. நீதுசந்திரா பங்கேற்ற அந்த பொது நிகழ்ச்சி சம்பந்தமான படங்களை பார்த்து கேரள மாதர் சங்கம், மகளிர் கூட்டமைப்பு மற்றும் சோசலிச பெண்கள் குழுவினர் கொதிப்படைந்துள்ளனர்.
நடிகை நீதுசந்திரா, பொது நிகழ்ச்சியில் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது ஒட்டுமொத்த பெண் இனத்தை அவமானப்படுத்துவதாகும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை மலையாள படங்களில் நடிக்க விட மாட்டோம் என்று கூறி போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
கேரளாவில் தனக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் நீதுசந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தெரியாமல் நடந்து விட்டது என்று அவர் கூறி உள்ளார்.

21 ஜனவரி 2011

புதுப் பொலிவுடன் நமீதா!


விரைவில் புத்தம் புதிய பொலிவுடன் என்னைப் பார்ப்பீர்கள் என்று குதூகலமாக கூறுகிறார் நடிகை நமீதா. எல்லாம் எடைக் குறைப்பு நடவடிக்கை காரணமாகவாம்.
நமீதா என்றவுடன் அந்த பெருத்த உடலும், பிரமாண்ட கவர்ச்சியும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதை அப்படியே மாற்றியமைக்கப் போகிறாராம் நமீதா.
இடையில் கன்னடப் படத்தில் நடிக்கப் போன நமீதா அப்படத்துக்காக எடையை வெகுவாகக் குறைத்திருந்தாராம். ஆனால் இளைஞன் படத்தில் நடிக்க வந்தபோது மீண்டும் எடையைக் கூட்டிக் கொண்டாராம். ஆனால் தற்போது மீண்டும் எடையைக் குறைக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கணிசமான அளவில் எடை குறைந்து சிக்கென மாறி வருகிறாராம். இன்னும் சில நாட்களில் மேலும் சில கிலோவைக் குறைத்து புது மாதிரியான தோற்றத்திற்கு வரப்போகிறேன் என்கிறார் நமீதா.
கரீனாவின் சிக் உடம்புக்குக் காரணமான பிரபலமான டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி இப்போடு டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம் நமீதா. இதுதான் அவரது உடல் மெலிவுக்கு காரணமாம். கூடவே யோகாவையும் துணைக்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். பிறகு என்னைப் பார்த்தால் யாருமே நான்தான் நமீதா என்றால் நம்ப மாட்டார்கள்.
ரசிகர்களுக்கு எனது புதிய பொலிவு ஆச்சரியத்தை அளிக்கும். இப்போதே என்னைப் பார்க்கும் பலரும் நம்ப மறுக்கிறார்கள். நீங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். இன்னும் முழுமையாக எடைக் குறைப்பு முடியவில்லை. அதற்குள்ளேயே இவ்வளவு ஆச்சரியம் என்றால் நான் முழுமையாக மெலிந்து அழகானால் எப்படியெல்லாம் ஆச்சரியப்படப் போகிறார்களோ என்று கூறிச் சிரிக்கிறார் நமீதா.
தனது உடல் எடை மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் கூறி வந்தபோதிலும் அதில் அதிக அக்கறை காட்டாமல்தான் இரு்நது வந்தார் நமீதா. ஆனால் யோகா செய்யத் தொடங்கிய பின்னர் அவருக்கே எடையைக் குறைக்கும் ஆசை வந்து விட்டதாம். இதனால்தான் தற்போது தீவிரமாக எடைக் குறைப்பில் இறங்கியிருக்கிறாராம்.
இளைஞன் படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்தது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறும் நமீதா, இருப்பினும் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தில் நடித்தது பெருமை தருவதாக கூறிப் பூரிப்படைகிறார்.

18 ஜனவரி 2011

ஐயோ!என்னை அதுக்கு கூப்பிடுறாங்களே....!!!

‘ஐயோ என்னை ‘அதுக்கு’ கூப்பிடறாங்களே…? ஷாக்கான கவர்ச்சி நடிகை நீது. எந்த மொழி படமாக இருந்தாலும் கவர்ச்சி முத்திரை காட்டி நடிக்க தயங்காதவர்தான் பாலிவுட் நடிகை நீது சந்திரா.
எனக்கு ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, போஜ்பூரி, தெலுங்கு ஆகியவற்றுடன் வட மாநில மொழிகள், வெளிநாட்டு மொழிகளையும் தெரிந்து வைத்துள்ளேன். யாவரும் நலம் படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் மொழியை கற்க ஆர்வம் காட்டியுள்ளேன்.
ஆதிபகவன் படத்தில் நடிக்க துவங்கியபோதே சரளமாக தமிழோடு விளையாடி பார்ப்பது என முடிவு செய்தேன்.
ஆர்வமாக தமிழைக் கற்று வருகிறேன். டைரக்டர் அமீரும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளார்.
பட யூனிட்டில் உள்ளவர்களிடம் பேசி, தப்பிருந்தால் திருத்திக்கொள்கிறேன். ஆதிபகவன் பட சூட்டிங் முடிவதற்குள் தமிழை நன்றாக கற்றுக்கொள்வேன்\’ என்கிறாராம்.
பாலிவுட் டைரக்டர் பிரியதர்சன் சினிமாவுக்கு வந்து முப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி துபாயில் விழா கொண்டாடினார்கள்.
அதில் கலந்து கொண்ட நீது, பாடல்களுக்கு வளைந்தும் நெளிந்தும் நளினமாக ஆட்டம் போட, கூடி ரசித்தவர்களுக்கு ஒரே கிளுகிளுப்பு ஆட்டம் முடிந்து, நடந்து வந்த நீதுவை சுற்றி நெருக்கி தள்ளியதாம் ரசிகர் கும்பல்.
அதில் தமிழ், மலையாளம் மொழிகளில் பேசியவர்கள், ‘கல்யாணம் கட்டிக்கலாமா…?! அதுக்கு சம்மதமா?! என்று முணுமுணுத்தார்களாம். ‘அதுக்கு ரெடின்னு சொல்லு, உன்னை நல்லா வெச்சுக்கிறேன்’ என்றும் கூட்டத்திலிருந்து குரல் வர, நீதுக்கு ஷாக்.
கொஞ்சமும் அதிர்ச்சி அடங்காமல், ‘ஆங்.. நான் அதுக்கு ஒத்து வர மாட்டேன்\’ என்று லேசாக கதறியவர், கமுக்கமாக இடத்தை காலி பண்ணினாராம்.

17 ஜனவரி 2011

முன்னணி நடிகை பட்டியலில் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் அடுத்த முன்னணி நடிகைகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுபவர்களில் முக்கியமானவர் என்றால் அது அஞ்சலிதான் என்று கோடம்பாக்கத்தில் யாரைக் கேட்டாலும் டக்கென சொல்லிவிடுவார்கள்.
சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை அங்காடித்தெரு படத்தில் பெற்ற அஞ்சலிதான் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் இப்போதைய ஏகோபித்த தேர்வாக இருக்கிறார். மகிழ்ச்சி படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாகவே நடித்த அஞ்சலி, விமல் நடிக்கும் தூங்கா நகரத்தில் துடுக்குத்தனமான மதுரைக்காரப் பெண்ணாக நடித்துவருகிறார்.
அதோடு அஜீத்தின் மங்காத்தா ஆட்டத்திலும் ஒருகை போடுகிறார் அஞ்சலி. மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடி வைபவ்தான் என்றாலும், தல படம் என்பதால் டபுள் சந்தோஷத்தோடு தலையாட்டிவிட்டாராம். அஜீத்தின் படத்தில் நடிக்கும் குஷியில் இருக்கும் அஞ்சலிக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளும் குவிகின்றன.
விக்ரமின் அடுத்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவிருக்கிறார். ‘மைனா’ புகழ் அமலா பாலுக்கு கிடைக்கவிருந்த இந்த வாய்ப்பு அஞ்சலிக்கு கைமாறி இருப்பதுதான் இதில் ஸ்பெஷல். விக்ரம், அனுஷ்கா நடித்துவரும் 'தெய்வமகன்' படத்தில் அமலா பாலும் இன்னொரு கதாநாயகி. தெய்வமகனுக்கு அடுத்து சுசீந்திரனின் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்திலும் அமலா பாலையே நாயகியாக்குவதாக அவருக்கு உறுதியளித்திருந்தாராம் விக்ரம்.
ஆனால் அந்த வாய்ப்புதான் இப்போது அஞ்சலிக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் அமலா பாலையே நாயகியாக்கலாம் என்பது விக்ரமின் விருப்பமாக இருந்தாலும், இந்தக் கதைக்கு அஞ்சலிதான் மிகவும் பொருத்தமானவர் என்று கூறிவிட்டாராம் இயக்குனர் சுசீந்திரன். இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்திற்கான மற்றொரு நாயகிக்காக மும்பை பக்கம் வலைவிரித்திருக்கிறார்கள்.

14 ஜனவரி 2011

சிலோன் சின்னையா காலமானார்!

பிரபல திரைப்பட நடிகர் சிலோன் சின்னையா லண்டனில் காலமானார். அவருக்கு வயது 70. பைலட் பிரேம்நாத், பொண்ணு ஊருக்கு புதுசு, அகல்விளக்கு, ஆணிவேர், கரைகடந்த ஒருத்தி, நீயின்றி நானில்லை உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இதுதவிர இலங்கையில் புதியகாற்று உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தவர்.
தீவிர சிவாஜி ரசிகரான சிலோன் சின்னையா, எனக்குள் ஒரு சிவாஜி என்ற படத்தை தயாரிக்க தீவிர முயற்சியில் இறங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென இறந்தார்.
சிலோன் சின்னையாவிற்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

12 ஜனவரி 2011

பெண்களை குளிர்விக்க இந்த வழிகளை பின்பற்றினால் போதுமாம்!

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.