பக்கங்கள்

27 ஏப்ரல் 2013

இனியாவின் முத்தக் கோபம்!

இனியா 
‘முத்தக்காட்சியில் நடித்தால் சர்ச்சை கிளப்புவது ஏன்?‘ என்றார் இனியா. வாகை சூடவா, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் இனியா. அவர் கூறியதாவது: மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான டிராபிக் படம் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்‘ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ‘டிராபிக்‘ல் ரம்யா நம்பீசன் ஏற்று நடித்த வேடத்தை தமிழில் நான் நடித்தேன். இதைத் தொடர்ந்து ரம்யா நம்பீசன் நடித்த ‘சாப்பா குரிஷு‘ என்ற படம் தமிழ் ரீமேக்காக புலிவால் என்ற பெயரில் உருவாக உள்ளது. கிராமத்து வேடங்களில் என்னை பார்த்தவர்கள் மாடர்னாக துணிச்சலான வேடங்களில் நடிக்கும்போது அதை சர்ச்சையாக்குகிறார்கள். ‘அம்மாவின் கைப்பேசி‘ படத்தில் ஹீரோவுடன் நடித்த முத்தக்காட்சி விமர்சிக்கப்பட்டது. ‘புலிவால்‘ படத்திலும் முத்தக்காட்சி இருக்குமா என்கிறார்கள். மலையாளத்தில் இப்படம் வெளியானபோது ஹீரோ பஹத் பாசலுடன் ரம்யா நம்பீசன் நடித்த முத்தக்காட்சி இடம்பெற்றது. தமிழில் அப்படியே ரீமேக் செய்வார்களோ என்ற சந்தேகம் இருந்தது. ‘புலிவால்‘ படம் சீன் பை சீன் அப்படியே காப்பி அடித்து எடுக்கப்போவதில்லை. இவ்வாறு இனியா கூறினார்.

24 ஏப்ரல் 2013

தமிழில் நடிக்காமல் ஒதுங்கும் பிரணிதா!

பிரணிதா 
‘சகுனி‘ படத்தில் நடித்தவர் பிரணிதா. இப்படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் பட வாய்ப்புகள் வந்தும் ஏற்காமல் ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இது பற்றி பிரணிதா கூறியதாவது: தமிழில் உருவான ‘சகுனி‘ தெலுங்கில் ‘ஷக்குனி‘ என்ற பெயரில் வெளியானது. ‘தமிழ் படங்களைவிட்டு ஒதுங்கி இருப்பது ஏன்?‘ என்கிறார்கள். கன்னடத்தில் ‘மிஸ்டர் 420‘ படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் 2 கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தமிழில் வாய்ப்புகள் வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை முடித்தபின் அதை ஏற்பேன். எனது தாய்மொழி கன்னடம். கன்னட படங்களில் நடிப்பது சவுகரியம். தெலுங்கு படங்களில் ரீ என்ட்ரி ஆகிறேன் என்று தகவல் வெளியானதும் நிறைய படங்கள் வருகிறது. தெலுங்கில் ‘பாவா‘ படம் ரிலீஸ் ஆகி நல்ல பெயர் கிடைத்துள்ளது. ‘இணைய தள டுவிட்டர் பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?‘ என்கிறார்கள். அந்த பக்கத்துக்கு நான் அடிமையாகிவிட்டேன். இதன் மூலம் ரசிகர்களிடமும், திரையுலகினருடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடிகிறது. அவர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் கிடைக்கிறது என்றார்.

23 ஏப்ரல் 2013

லால்குடி ஜெயராமன் மறைந்தார்!

பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் நேற்று  திங்கட்கிழமை சென்னையில் தமது 82 வது வயதில் காலமானார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட பிறகு சில காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள். அனைத்துவித இசைக்கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள். கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம் எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார். 70 ஆண்டுகள் இசை வாழ்க்கை எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது. லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார். தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லா
ங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார். எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். அவரது மறைவுக்கு பல்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பி.பி.சி 

21 ஏப்ரல் 2013

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை!

கோடம்பாக்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்காககூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிசியாகி இந்திக்கு சென்ற அசின்கூட ஒரு பாலிவுட் படத்துக்காக இலங்கை சென்று வந்த ஒரே காரணத்துக்காக அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கில் தான் இயக்கியுள்ள ராமைய்யா வாஸ்தவைய்யா என்ற படத்தில் ஒரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க வைத்துள்ள பிரபுதேவா, இன்னொரு வேடத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளாராம். இந்த விசயத்தை இதுவரை சீக்ரெட்டாகத்தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் திரைக்கு வருவதால் வெளியில் கசிந்து விட்டது. அதோடு, மேற்படி நடிகையும் ஆந்திர மீடியாக்களுக்கு தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது மொத்த புராணத்தையும் வாசித்து விட்டதால், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கோலிவுட் கலைஞர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகரான பிரபுதேவா, எப்படி ஒரு சிங்கள நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, அவர் அடுத்து தமிழ்நாட்டுப்பக்கம் வரட்டும் என்று போர்க்கொடி பிடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

17 ஏப்ரல் 2013

டி.கே.ராமமூர்த்தி காலமானார்!

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது (92). மூச்சுத்திணறல் காரணமாக டி.கே.ராமமூர்த்தி நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். திரையிசையில் மகத்தான சாதனை படைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டிகே.ராமமூர்த்தி. இருவரும் இணைந்து 700க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

15 ஏப்ரல் 2013

திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென ஒரு இடம் வகித்த பி.பி. ஸ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந்தார். அவர் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விடை கொடுத்தனர். 83 வயதான பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முதல்வர் சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேயர் சைதை துரைசாமி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ். ஜானகி, வாணிஜெயராம், மாலதி, எஸ்.பி.சைலஜா உள்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், "பி.பி.ஸ்ரீனிவாஸ் தேனிசை குரலாக ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்தார். தமிழக அரசு அவருக்கு இயல் இசை நாடக மன்றத்தில் பதவி அளித்து கவுரவித்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

13 ஏப்ரல் 2013

ஆஜரானார் அஞ்சலி!

காணாமல் போய்விட்டதாக கடந்த ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அஞ்சலி, நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். தன் சித்தி பாரதி தேவியும் இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அஞ்சலி, ஹைதராபாத் ஓட்டலிலிருந்து கடந்த திங்கள் கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி பாரதி தேவி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். அஞ்சலி படங்கள் இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஹைதராபாத் வடக்கு பகுதி துணை கமிஷனர் சுதீர் பாபு கூறுகையில், "மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்ததாக அஞ்சலி கூறினார். அவரது வாக்குமூலத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார். ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10 ஏப்ரல் 2013

நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி!

நாகார்ஜூனாவுடன் நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தாசரி நாராயண ராவ் தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் தசரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. தமாம் இசையில் உருவான இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் முடிந்து விட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் நாசா மையத்துக்கு அருகே இப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது படத்தின் சிறப்பாகக் கூறப்படுகிறது. நயன்தாராவின் மறுப்பிரவேசத்தை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயமாக நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பெயரிடப்படாத இப்படத்தை ஏப்ரல் 19ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

09 ஏப்ரல் 2013

அஞ்சலி ஹோட்டலில் இருந்து மாயம்!

ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயமாகியுள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
ஹோட்டலில் தங்கி அவர் ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கிற்காக தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் பணத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக அஞ்சலி புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

08 ஏப்ரல் 2013

அவுஸ்திரேலியாவில் சூதாடிய அமலா!

ஆஸ்திரேலியாவில் நடிகர் சுரேஷுடன் இணைந்து சூதாடி வெற்றி பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால். விஜய் நடிக்கும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார் நடிகை அமலாபால். படப்படிப்பு முடிந்ததும் அமலாபாலுக்கு ரொம்பவே போரடித்து விட்டதாம். இதனால் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பிய அவர் அன்றைய பொழுதை கழிக்க சூதாட்ட விடுதிக்குள் புகுந்து ஒரு ஆட்டம் ஆடினாராம். முதலில் தோல்வியை சந்தித்த அமலாபால் பின்னர் சுரேஷுடன் இணைந்து ஆடியிருக்கிறார். அதில் அமலாபாலுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் தனக்கு மிகவும் ராசியான ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.

31 மார்ச் 2013

சில்க்காக சனா கான்!

சில்க் ஸ்மிதா கதையை தழுவி உருவாகியுள்ள நடிகையின் டைரி படம் விரைவில் திரைக்கு வருகிறது.இதில் சில்க் வேடத்தில் சனா கான் நடித்துள்ளார். மலையாளத்தில் சில்க் கதையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் அனில் இயக்குகிறார்.இதில் சனா கான் நடிக்கிறார்.அதே படம் தமிழில் Ôநடிகையின் டைரிÕ பெயரில் ரிலீசாக உள்ளது. டிஜிட்டல் என்டர்டெய்னர் ஹெச்.ஏ.கே. தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்களை எழுதி, நிர்வாக தயாரிப்பு பொறுப்பை Ôசிலந்தி¤Õஇயக்குனர் ஆதிராம் ஏற்றுள்ளார். அவர் கூறியதாவது, சில்க் கதை என்ற பெயரில் பலர் படம் எடுக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் அவரது வாழ்க்கை கதை படங்கள் அல்ல. சில்க் ஸ்மிதா முதலில் மலையாளத்தில்தான் நடித்தார்.அவரை மலையாளத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி.சில்க் பற்றி அறிந்தவர்.அவரே இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.கேரளா,ஆந்திரா தவிர மற்ற இடங்களில் தமிழில் இப்படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.வெறும் கவர்ச்சியை நம்பி இப்படம் எடுக்கப்படவில்லை.கனமான திரைக்கதை இதில் இருக்கும்.

28 மார்ச் 2013

நயன்தாராவுடனான என் நட்பு உண்மைதான்!

சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான். நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது. இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம்.எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது,"என்றார்.

26 மார்ச் 2013

நடிகை சுகுமாரி மரணம்!

பிரபல திரைப்பட நடிகை சுகுமாரி சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. நாகர்கோவிலில் கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்த சுகுமாரி, தமிழில் ஓரிரவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் ஏ பீம்சிங்கை திருமணம் செய்து கொண்ட சுகுமாரிக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். பாசமலர், பட்டிக்காடா பட்டணமா உள்ளிட்ட 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்கள் அடங்கும். நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ள சுகுமாரிக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இது தவிர தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். திரையுலகில் புகழுடன் வலம்வந்த லலிதா,பத்மினி, ராகினி சகோதரிகளின் உறவினராவார் சுகுமாரி. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்.மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சுகுமாரியின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொன்னான இதழ்கள் புண்ணாகலாமா?

முத்தக் காட்சியில் அஞ்சலியின் உதட்டை காயப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆர்யா. ஜெயம் கொண்டான் திரைப்பட இயக்குனர் கண்ணனின் அடுத்தப் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சேட்டை'. இதில் ஆர்யா நாயகனாகவும், ஹன்சிகா, அஞ்சலி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். படத்தில் இரண்டு லிப் லாக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. காட்சிப்படி ஆர்யா, ஹன்சிகாவுக்கும், அஞ்சலிக்கும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்க வேண்டும். இந்நிலையில் ஹன்சிகாவுடனான லிப் லாக் காட்சியில் 6 முறை டேக் எடுத்த ஆர்யா அஞ்சலியுடனான லிப் லாக் காட்சியில் 15 முறை டேக் எடுத்திருக்கிறார். இதனால் சற்று கோபமடைந்த அஞ்சலி, உதடு புண்ணாகிவிட்டது என நேரடியாக இயக்குனரிடம் கூறியுள்ளார். ஒரு வழியாக இக்காட்சியை எடுத்து முடித்ததும் அடுத்த இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்கு வராமல் விடுமுறை எடுத்துக்கொண்டார் அஞ்சலி.

05 மார்ச் 2013

மூத்த நடிகை ராஜசுலோசனா மரணம்!

Veteran Actress Raja Sulochana Passes Away தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான ராஜசுலோசனா இன்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 77. தமிழகத்தின் பெருமைமிக்க கலைஞர்களான மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா. 1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த பெஜவாடாவில் பிறந்தவர் ராஜசுலோசனா. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா. அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார். 1953-ல் அவர் நடித்த முதல் படம் குணசாகரி வெளியானது. தொடர்ந்து அவர் நடித்த ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது. ரஜினி நடித்த காயத்ரி, கமல் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார். புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா, ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார் ராஜசுலோசனா. நாளை மார்ச் 6-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

26 பிப்ரவரி 2013

கார்த்திக்காக காத்திருக்கும் பிரியாணி!

புதுச்சேரியில் மும்முரமாக நடந்து வந்த பிரியாணி படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது படக்குழுவினர் தற்போது சற்று ஓய்வு எடுத்து வருகின்றனர். புதுச்சேரியில் சில கார் மோதல் சண்டைக் காட்சிகளும், ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் கார்த்தி இடம்பெறும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் கார்த்தியின் வருகைக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். பிரியாணி படத்தில் பிரேம்ஜி அமரன் கார்த்தியின் பள்ளிக் காலத்தில் இருந்து உடன் இருக்கும் நண்பனாக வருகிறார். அது பற்றி பிரேம்ஜி கூறுகையில், உண்மையிலேயே நானும் கார்த்தியும் பள்ளிக் கால நண்பர்கள்தான். அவரும் நானும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். ஆனால் அவர் வெளிநாடு சென்றுவிட்ட பிறகு, அவ்வளவாக எங்களுக்குள் தொடர்பில்லை. ஆனால் இந்தப் படம் மூலமாக எங்கள் நட்பு வளர்ந்துள்ளது. எங்களது நட்பு வளர்வது, படத்துக்கும் உதவிகரகமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வரும் காட்சிகள் நன்றாக வந்துள்ளன என்கிறார் மகிழ்ச்சியோடு. பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார்.

17 பிப்ரவரி 2013

கைக்குழந்தையுடன் வந்த கோபிகா!

Gopika Starts Her Post Marriage Innings குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் கோபிகா. சமீபத்தில் தொடங்கிய மலையாளப் பட ஷூட்டிங்குக்கு தனது கைக்குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் கோபிகா. ஆனாலும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. குழந்தை பெற்ற பிறகு, மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘பரயா அத்ரா போரா' என தலைப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. இதில் பங்கேற்க வந்த கோபிகா, தனது 2 வயது மகளையும் அழைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் உடன் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தானே குழந்தையை கவனித்துக் கொண்டார். மீண்டும் படங்களில் நடிப்பதை தன் கணவரே ஆதரிப்பதால், நடிக்க ஆரம்பித்துவிட்டதாக கோபிகா தெரிவித்தார்.

05 பிப்ரவரி 2013

குணச்சித்திர நடிகை பானுமதி மரணம்!

Actress Bhanumathi Is No More குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது வயதில் மரணம் அடைந்தார். காதல் ஜோதி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, திருநீலகண்டர், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடித்து வந்தார். சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இதனால் அவர் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமானது. உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.50 மணிக்கு காலமானார். அவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.

30 ஜனவரி 2013

இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆகிவிட்டனர்!

'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது, 'இந்த ஒரு திரைப்படம் எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையையும் பாதிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர். யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். திரைப்படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும். நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உட்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை' என்றார்.

12 ஜனவரி 2013

விஜய் புராணம் பாடும் காஜல்!

காஜல்(நண்பன்.கொம்)
இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்திலேயே ஒரு பாடலில் பம்பரமாய் சுழன்று நடனமாடி அப்படத்தில் நாயகனாக நடித்த அக்ஷ்ய்குமாரை தலைசுற்ற வைத்தவர் விஜய். அதைப்பார்த்து இவர் என்ன டீன்ஏஜ் பாய் மாதிரி இத்தனை வேகமாக ஆடுகிறார் என்று தனது ஆச்சர்யத்தை ஸ்பாட்டிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். அதனால் கோலிவுட் ஹீரோவான விஜய்யின் பெயர் பாலிவுட்டில் நன்றாக பரிட்சயமாகி விட்டது. இந்நிலையில், துப்பாக்கியில் விஜய்யுடன் ஜோடி போட்டு விட்டு மும்பை சென்ற காஜல் அகர்வாலும் அங்குள்ள சினிமா நண்பர்களிடம் சதா விஜய் புராணமே பாடிக்கொண்டிருக்கிறாராம். அதாவது, கோலிவுட்டில் முன்னணி ஹீரோ அவர். ஆனால் எந்தவித பந்தாவும் பண்ண மாட்டார். ஸ்பாட்டுக்கு வந்தால் அவர் இருக்கிற இடமே தெரியாது. அந்த அளவுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். ஆனால் கேமரா முன்பு வந்து விட்டால் காட்சிக்கேற்ப பரபரப்பாகி விடுவார். அவருடன் நடிக்கும்போது நமக்கே எனர்ஜி வரும். அதோடு, துப்பர்க்கி படத்தில் நான அவருடன் நடித்த பிறகு சிம்ரனுக்குப்பிறகு அவருக்கு பொருத்தமான ஜோடியாக என்னைதான் சொல்கிறார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. அதனால் தொடர்ந்து விஜ்யயுடன் அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான முயற்சி எடுக்கப்போகிறேன் என்று மூச்சு விடாமல் சொல்லி புல்லரிக்க வைக்கிறாராம் காஜல்.