|
காஜல்(நண்பன்.கொம்) |
இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்திலேயே ஒரு பாடலில் பம்பரமாய் சுழன்று நடனமாடி அப்படத்தில் நாயகனாக நடித்த அக்ஷ்ய்குமாரை தலைசுற்ற வைத்தவர் விஜய். அதைப்பார்த்து இவர் என்ன டீன்ஏஜ் பாய் மாதிரி இத்தனை வேகமாக ஆடுகிறார் என்று தனது ஆச்சர்யத்தை ஸ்பாட்டிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். அதனால் கோலிவுட் ஹீரோவான விஜய்யின் பெயர் பாலிவுட்டில் நன்றாக பரிட்சயமாகி விட்டது.
இந்நிலையில், துப்பாக்கியில் விஜய்யுடன் ஜோடி போட்டு விட்டு மும்பை சென்ற காஜல் அகர்வாலும் அங்குள்ள சினிமா நண்பர்களிடம் சதா விஜய் புராணமே பாடிக்கொண்டிருக்கிறாராம். அதாவது, கோலிவுட்டில் முன்னணி ஹீரோ அவர். ஆனால் எந்தவித பந்தாவும் பண்ண மாட்டார். ஸ்பாட்டுக்கு வந்தால் அவர் இருக்கிற இடமே தெரியாது. அந்த அளவுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். ஆனால் கேமரா முன்பு வந்து விட்டால் காட்சிக்கேற்ப பரபரப்பாகி விடுவார். அவருடன் நடிக்கும்போது நமக்கே எனர்ஜி வரும். அதோடு, துப்பர்க்கி படத்தில் நான அவருடன் நடித்த பிறகு சிம்ரனுக்குப்பிறகு அவருக்கு பொருத்தமான ஜோடியாக என்னைதான் சொல்கிறார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. அதனால் தொடர்ந்து விஜ்யயுடன் அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான முயற்சி எடுக்கப்போகிறேன் என்று மூச்சு விடாமல் சொல்லி புல்லரிக்க வைக்கிறாராம் காஜல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக